செய்திகள் :

TN Budget: "5 ஆண்டுகள் முடியும்போது ஒட்டுமொத்த கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்"- தங்கம் தென்னரசு

post image

தவெக அரசு 2026 - 2027 ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில், முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அப்போது அவர், "தவெக அரசின் நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. தவெக-வின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை.

தமிழ்நாடு பட்ஜெட்
தமிழ்நாடு பட்ஜெட்

நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை தொடர்பாக நான் அப்போது தந்த விளக்கம் இப்போதும் சரியாக உள்ளது. அரசின் கடன் உயரும் என்று கூறினேன். நிதித் துறை செயலர் தனது விளக்கத்திலும் அதையே கூறியிருக்கிறார்.

தவெக அரசு 3 மாதங்களில் ரூ.22,000 கோடியை கடனாக வாங்கிய நிலையில், 5 ஆண்டுகள் முடியும்போது ஒட்டுமொத்த கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.

திமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களுக்கு இன்று முலாம் பூசப்பட்டு வேறு பெயரில் கொண்டு வரப்பட்டு இருக்கிறதே ஒழிய, அதற்கான உரிய நிதியைக்கூட பெருமளவில் விடுவிக்கவில்லை.

தவெக அரசின் முதல் பட்ஜெட்
தவெக அரசின் முதல் பட்ஜெட்

தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை பொய்த்துப் போகச் செய்துள்ளது. தவெக-வின் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இடம் பெறவில்லை. திமுக அரசு என்ன தந்ததோ அதையேதான் தவெக, பட்ஜெட்டில் தந்திருக்கிறது" என்று சாடியிருக்கிறார்.

`எஸ்.பி.வேலுமணியை அதிமுக பொதுச்செயலாளராக்கு சாமி' - குண்டம் இறங்கி வேண்டிய கோவை நிர்வாகி!

அ.தி.மு.க-விற்குள் உட்கட்சிப் பூசல் அதிகரித்து வரும் நிலையில், எஸ்.பி. வேலுமணியை அக்கட்சியின் பொதுச்செயலாளராக வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க. கோவை குறிச... மேலும் பார்க்க

"வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக அள்ளி வீசிவிட்டு, இப்போது..!"- பட்ஜெட் குறித்து சீமான்

"மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வத் திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கான நடவடிக்கைகளோ எதுவுமற்று, வெற்றி எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ள... மேலும் பார்க்க

இரண்டு மசோதாக்கள் அமல்படுத்த பாஜகவின் பிளான்; ராகுலை சந்தித்த கிரண் ரிஜிஜு - ராகுல் சொன்ன 'நோ'!

தற்போது டெல்லியில் மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதை யாராவது சொன்னால் தான் தெரியும் போல. தினமும் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அமளி ஏற்படத் தொடங்கிய வேகத்திலேயே சபை ஒத்தி வைக்கப்பட்... மேலும் பார்க்க

TN Budget: `வருந்தத்தக்கது; மக்களின் எதிர்பார்ப்புகளைக் கருத்தில் கொள்ளவில்லை' - சிபிஐ வீரபாண்டியன்

‘தவெக அரசின் நிதிநிலை அறிக்கை சில பிரிவுகளில் முன்னேற்றம் காண வழிவகுக்கும். எனினும் பெரும் பகுதி, மக்களின் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொள்ளவில்லை’ என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு... மேலும் பார்க்க

TN Budget 2026: `பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைப்பா?' - இல்லை என விளக்கும் ராஜ்மோகன்!

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக அரசு 2026 - 2027 ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. இதில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44, 527 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. பலரும் ... மேலும் பார்க்க

ஆட்சி மாறியும் அரசின் கடன் தொடர்கிறது? - தவெக அரசின் ரூ.1.73 லட்சம் கோடி கடன் திட்டம்!

2026-2027ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு அரசு புதிய கடனாக ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 445 கோடி பெறத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில், ரூ.51 ஆயிரத்து 971 கோடி மதிப்பிலான பழ... மேலும் பார்க்க