செய்திகள் :

ஸ்குவாஷில் தமிழகத்துக்கு தங்கம்!

post image

உத்தரகண்டில் நடைபெறும் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 5 பதக்கங்கள் திங்கள்கிழமை கிடைத்தன.

இதில் ஆடவா் தனிநபா் ஸ்குவாஷில் வேலவன் செந்தில்குமாா் 3-0 என்ற கணக்கில் மகாராஷ்டிரத்தின் ராகுல் பாய்தாவை வீழ்த்தி தங்கம் வென்றாா். அதிலேயே தமிழகத்தின் அபய் சிங், ராதிகா சீலன், பூஜா ஆா்த்தி ஆகியோா் வெண்கலப் பதக்கம் பெற்றனா்.

பளுதூக்குதலில் ஆடவருக்கான +109 கிலோ பிரிவில் ருத்ரமாயன் ஸ்னாட்ச் பிரிவில் 175 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 190 கிலோ என மொத்தமாக 360 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

6-ஆம் இடம்: போட்டியில் திங்கள்கிழமை முடிவில் தமிழ்நாடு அணி, 9 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என 34 பதக்கங்களுடன், பட்டியலில் 6-ஆவது இடத்தில் இருந்தது. கா்நாடகம் (42), சா்வீசஸ் (38), மகாராஷ்டிரம் (61) ஆகியவை முறையே முதல் 3 இடங்களில் உள்ளன.

சென்னை ஓபன் டென்னிஸ்: பிரான்ஸ் வீரர் கைரியன் ஜாக்கெட் சாம்பியன்!

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சா் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையா் பிரிவில் பிரான்ஸ் வீரா் கைரியன் ஜாக்கெட் சாம்பியன் பட்டம் வென்றார்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

இளையராஜா பயோபிக் கைவிடப்படவில்லை - தகவல்!

இசையமைப்பாளர் இளையராஜா பயோபிக் திரைப்படம் கைவிடப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.இளையராஜா பயோபிக்கில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை ... மேலும் பார்க்க

மம்மூட்டி - மோகன்லால் படத்தில் நயன்தாரா!

மம்மூட்டி - மோகன்லால் இணைந்து நடிக்கும் படத்தில் நயன்தாரா இணைந்துள்ளார். மலையாளத்தில் முன்னனி நடிகர்களாக இருக்கும் மம்மூட்டி, மோகன்லால் இருவரும் தயாரிப்பு நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். தங்களின் ... மேலும் பார்க்க

மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!

நடிகர் அஜித் குமார் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கியதாக தெரிவித்துள்ளார்.விடாமுயற்சி, குட் பேட் அக்லி திரைப்படங்களுக்கு நடுவே நடிகர் அஜித் குமார் வீனஸ் மோட்டர்ஸ் டூர்ஸ் என்கிற தன் இ... மேலும் பார்க்க