செய்திகள் :

ஸ்பெயினில் பயங்கரம்: இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்து – 30 பேர் பரிதாப பலி, பலர் படுகாயம்!

post image

ஸ்பெயின் நாட்டின் மத்திய மாகாணமான டோலிடோவில் (Toledo) இன்று (அக்டோபர் - 28) காலையில் இரு அதிவேக ரயில்கள் ஒன்றோடொன்று மோதி நேரிட்ட கொடூர விபத்தில் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்பெயின் நாட்டின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான டி.வி.இ (TVE) வெளியிட்ட தகவலின்படி, ஒரே திசையில் சென்று கொண்டிருந்த இரு அதிவேக ரயில்கள் ஒன்றோடொன்று மோதியுள்ளன. முன்னால் சென்ற ரயிலின் பின்புறத்தில் மற்றொரு ரயில் பலமாக மோதியதில், இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளாகின.

ஸ்பெயின் ரயில் விபத்து
ஸ்பெயின் ரயில் விபத்து

விபத்தில் சிக்கிய பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்தின் காரணமாக மாட்ரிட் நகரை, சியூடட் ரியால் (Ciudad Real) மற்றும் ஆண்டலூசியா (Andalusia) ஆகிய பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez), ``பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்யவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைந்து அவசரகால மீட்புக் குழுவினர் போர்க்கால அடிப்படையில் களத்தில் பணியாற்றி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்பெயின் ரயில் விபத்து
ஸ்பெயின் ரயில் விபத்து

விபத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளைத் தங்க வைப்பதற்காக விளையாட்டு அரங்கம் ஒன்றை ஆயத்த நிலையில் வைக்குமாறு குடிமைப் பாதுகாப்பு அதிகாரிகள் நகர நிர்வாகத்திடம் கோரியிருக்கின்றனர்.

ஸ்பெயின் நாட்டின் அதிவேக ரயில் அமைப்பின் பாதுகாப்பு குறித்து ஏற்கனவே கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்த விபத்து மீண்டும் ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் தெற்கு ஸ்பெயினில் ரயில் ஒன்று தண்டவாளம் தடம் புரண்டு எதிரே வந்த மற்றொரு ரயில் மீது மோதியதில் 45 பேர் உயிரிழந்தனர். 2013-ம் ஆண்டில் 80 பேர் உயிரிழந்த கொடூர விபத்திற்குப் பிறகு, ஸ்பெயின் கண்ட மிகப்பெரிய ரயில் விபத்தாக அது கருதப்பட்ட நிலையில், தற்போது சில மாதங்களிலேயே மீண்டும் ஒரு கொடூர விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

ஈரோடு: கலெக்டர் கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த நபர்; போலீஸ் விசாரணை

ஈரோடு மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வருகிறார் கந்தசாமி. தமிழ்நாடு அரசின் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்று... மேலும் பார்க்க

கார் மோதியதில் சாலையோரம் நின்ற 8 பேர் பலி: ஆம்புலன்ஸ்க்கு காத்திருந்து உயிரிழந்த தொழிலாளர்கள்

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தின் லெஹ்ராககா பகுதியில் சோடியன் கிராமத்திற்கு அருகில் உள்ள ஜக்கல் சாலையில் சாலை கட்டுமானத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். ... மேலும் பார்க்க

Kolkata Stampede: ``என் அம்மா என் கண்முன்பே உயிரை விட்டார்..!" - தாயை பறிகொடுத்த இளைஞரின் துயரம்!

மேற்கு வங்க மாநிலம், வடக்கு கொல்கத்தாவில் உள்ள சோா்பாகன் பகுதியில் நேற்று துா்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பந்தலைப் பாா்வையிட நுழைவாயில் பகுதியில் ஏராளமான மக்கள் காத்திருக்கின்றனர். த... மேலும் பார்க்க

நள்ளிரவில் பக்தர்கள் மீது ஏறிய லாரி; 15 பேர் பலி... நவராத்திரி விழாவில் சோகம்!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ளது புகழ்பெற்ற சீத்லா மாதா கோயில். நேற்று நவராத்திரியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டுக்காக திரண்டிருந்தனர். இந்த நிலையில், நள்ளிரவு சுமார் 1:30 ம... மேலும் பார்க்க

சாலையோரம் மீன் விற்ற பெண்... கான்க்ரீட் இயந்திரம் மோதி பலி - தொட்டியத்தில் அரங்கேறிய சோகம்!

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள சீலைப்பிள்ளையார் புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராணி (வயது: 47). இவர், திருச்சி - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக மீன்கடை நடத்தி வந்தார். இந்நிலையி... மேலும் பார்க்க

பீகார்: கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து; சிறார் உட்பட 11 பேர் நீரில் மூழ்கி பலியான சோகம்

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேர் பக்கத்து கிராமத்தில் நடக்கும் விருந்து ஒன்றில் பங்கேற்பதற்காக படகு ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ரகோபூர் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் ஒரு கரை... மேலும் பார்க்க