ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம்பெண் தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த பாண்டியராஜன் மனைவி மாரீஸ்வரி (24). இவா் மகளிா் குழுவில் ரூ.3 லட்சம் கடன் பெற்ற நிலையில், அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாரீஸ்வரி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.