செய்திகள் :

'120 சீட்டுகள்' தவெக உடன் விசிக; விஜய்க்கு திருமாவளவன் ஆதரவு

post image

தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் 107 (108) சீட்டுகளை வழங்கியிருந்தனர். மீதி 11 சீட்டுகளுக்குத்தான் பிற கட்சிகளின் உதவியை நாடி வந்தது தவெக.

தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியபோது, ஆளுநர் கேட்டதும் அந்த 11 சீட்டுகளைத் தான்.

ஆக, 11 சீட்டுகளுக்காக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய ஐக்கிய முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடியது தவெக.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்

காங்கிரஸ் நேற்றே தவெகவிற்கு ஆதரவு அளித்துவிட்டது. அதில் தவெகவிற்கு 112 சீட்டுகள் கிடைத்துவிட்டன.

தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக், விசிகவின் ஆதரவை கேட்டு வந்தது தவெக. கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் இன்று மதியம் ஆதரவு அளித்துவிட்டன.

இதையடுத்து, உயர்நிலைக் குழு கூட்டத்தை நடத்தி முடிவைக் கூறுவதாக தெரிவித்திருந்தது விசிக. ஆனால், கால தாமதம் ஆகிக்கொண்டே போனது.

இன்னொரு பக்கம், ஆளுநரை சந்திக்க விஜய் கிளம்பிவிட்டார். இந்த வேளையில், தவெக காய்களை நகர்த்தி முஸ்லீம் லீக் கட்சியின் இரண்டு சீட்டுகளைப் பெற்றுவிட்டது.

ஆக, 118 சீட்டுகள் பெரும்பான்மையுடன் ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார் விஜய்.

இந்தக் காட்சிகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, விசிக ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடித்து, தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.

இதனால், தற்போது தவெகவிற்கு 120 சீட்டுகள் கிடைத்துள்ளன.

விசிக தலைவர் திருமாவளவன் முன்னரே சொல்லியிருந்ததுப் போல, நாளை ஆதரவு கடிதம் வழங்குகிறார்.

இன்று அறிவிப்பு மட்டும் வெளியிட்டுள்ளார்.

'அதிமுகவை ஆட்சியில் அமர்த்த திமுக ஆதரவு கேட்டது!' - உண்மையை போட்டுடைத்த பேபி!

அதிமுகவை வெளியில் இருந்து ஆதரித்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கும் திட்டத்துக்கு தங்களையும் ஆதரவு தெரிவிக்குமாறு திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொது... மேலும் பார்க்க

சோதித்த ஆளுநர்; சொல்லியடித்த தவெக விஜய் - நாளை முதல்வராகிறார்!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை இல்லாததால் அந்தக் கட்சி ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. பெரும்பான்மை எண்ணான 118 வேண்டும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும் ஸ்ட்ரிக்ட்டாக கூற... மேலும் பார்க்க

'ஜோசப் விஜய் எனும் நான்...' - ஆதரவு கொடுத்த விசிக, கம்யூக்கள், இ.யூ.எம்.எல்; முதல்வராகும் விஜய்!

தவெக தலைவர் விஜய் மூன்றாவது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கிறார். இந்த முறை விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்தியன் முஸ்லீம் யூனியன் லீக் கட்சியின் ஆதரவோடு விஜய் ஆளு... மேலும் பார்க்க

`தவெக ஆட்சியமைக்க ஆதரவு... திமுக-வுடன் உறவு!' - கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்வதென்ன?

விஜய்யின் த.வெ.கவிற்கு ஆதரவு அளித்த பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கின்றனர். செய்தியாளர்களிடம் பேசிய ... மேலும் பார்க்க

'புதிய அரசு அமைவது காலத்தின் கட்டாயம்; உடனே நடவடிக்கை எடுங்கள்' - ஆளுநருக்கு ஸ்டாலின் கோரிக்கை

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க இன்னும் ஆளுநர் அழைக்காததையடுத்து, புதிய ஆட்சி அமைவது குறித்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, ம... மேலும் பார்க்க

"அதிமுக, திமுக கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் சேர்ந்து ஆட்சி அமைக்க..!" - சசிகலா காட்டம்

திமுக - அதிமுக கூட்டணி என்கிற பேச்சு கடந்த இரண்டு நாள்களாக எழுந்துகொண்டிருக்கிறது. இதை எதிர்த்து அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட... மேலும் பார்க்க