செய்திகள் :

'அதிமுகவை ஆட்சியில் அமர்த்த திமுக ஆதரவு கேட்டது!' - உண்மையை போட்டுடைத்த பேபி!

post image

அதிமுகவை வெளியில் இருந்து ஆதரித்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கும் திட்டத்துக்கு தங்களையும் ஆதரவு தெரிவிக்குமாறு திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி உண்மையை போட்டுடைத்துள்ளார்.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் - திமுக

இந்தியா டுடே சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் பேபி, 'காங்கிரசைப் போல் அல்லாமல் திமுக தலைவர் ஸ்டாலினுடன் கலந்தாலோசித்த பிறகே எங்கள் முடிவை அறிவித்தோம். அவர்கள் தங்களோடு இணைந்து அதிமுகவிற்கு வெளியிலிருந்து ஆட்சியமைக்க ஆதரவு அளிக்குமாறு எங்களைக் கேட்டுக்கொண்டனர். பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருந்ததால் இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மக்கள் தேர்ந்தெடுத்திருக்கும் தனிப்பெரும் கட்சி ஆட்சியில் அமர வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். ஆனால், பாஜகவும் ஆர்.எஸ்.எஸூம் அதற்கு மாறாக நினைக்கிறது. எங்களின் மாநிலச் செயலாளர் ஸ்டாலினை சந்தித்து அவர்களின் ஆலோசனை குறித்து பேசினார். 'நாங்கள் திமுகவை எதிர்க்கப் போவதில்லை. ஆனால், என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகித்த அதிமுகவை ஆதரிக்கும் அரசியல் முடிவை எங்களால் எடுக்க முடியாது' என அவர் ஸ்டாலினிடம் கூறிவிட்டார்' என பேபி பேசியிருக்கிறார்.

பேபி
பேபி

திரை மறைவில் இப்படியான முயற்சிகள் நடந்துகொண்டிருக்க, திமுக தலைவர் ஸ்டாலின் 'ஜனநாயக மாண்புகளை காக்கும் வகையில் புதிய அரசை ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்' எனக் கூறியதை தமிழக மக்கள் அதிர்ச்சியோடு பார்க்கின்றனர்.

'தவெக குதிரை பேரம் நடத்துகிறது; எடப்பாடி ஆட்சியமைக்க வேண்டும்!' - ஆளுநரை சந்தித்த டிடிவி!

107 எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு ஆட்சியமைக்க முடியாமல் ஆளுநரிடம் விஜய் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரே ஒரு எம்.எல்.ஏவை மட்டும் வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென அ... மேலும் பார்க்க

'120 சீட்டுகள்' தவெக உடன் விசிக; விஜய்க்கு திருமாவளவன் ஆதரவு

தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் 107 (108) சீட்டுகளை வழங்கியிருந்தனர். மீதி 11 சீட்டுகளுக்குத்தான் பிற கட்சிகளின் உதவியை நாடி வந்தது தவெக. தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியபோது, ஆளுநர் கேட்ட... மேலும் பார்க்க

சோதித்த ஆளுநர்; சொல்லியடித்த தவெக விஜய் - நாளை முதல்வராகிறார்!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை இல்லாததால் அந்தக் கட்சி ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. பெரும்பான்மை எண்ணான 118 வேண்டும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும் ஸ்ட்ரிக்ட்டாக கூற... மேலும் பார்க்க

'ஜோசப் விஜய் எனும் நான்...' - ஆதரவு கொடுத்த விசிக, கம்யூக்கள், இ.யூ.எம்.எல்; முதல்வராகும் விஜய்!

தவெக தலைவர் விஜய் மூன்றாவது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கிறார். இந்த முறை விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்தியன் முஸ்லீம் யூனியன் லீக் கட்சியின் ஆதரவோடு விஜய் ஆளு... மேலும் பார்க்க

`தவெக ஆட்சியமைக்க ஆதரவு... திமுக-வுடன் உறவு!' - கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்வதென்ன?

விஜய்யின் த.வெ.கவிற்கு ஆதரவு அளித்த பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கின்றனர். செய்தியாளர்களிடம் பேசிய ... மேலும் பார்க்க

'புதிய அரசு அமைவது காலத்தின் கட்டாயம்; உடனே நடவடிக்கை எடுங்கள்' - ஆளுநருக்கு ஸ்டாலின் கோரிக்கை

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க இன்னும் ஆளுநர் அழைக்காததையடுத்து, புதிய ஆட்சி அமைவது குறித்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, ம... மேலும் பார்க்க