செய்திகள் :

'தவெக குதிரை பேரம் நடத்துகிறது; எடப்பாடி ஆட்சியமைக்க வேண்டும்!' - ஆளுநரை சந்தித்த டிடிவி!

post image

107 எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு ஆட்சியமைக்க முடியாமல் ஆளுநரிடம் விஜய் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரே ஒரு எம்.எல்.ஏவை மட்டும் வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

டி.டி.வி தினகரன்
டி.டி.வி தினகரன்

கடந்த 3 நாட்களில் மூன்று முறை தவெக தலைவர் விஜய் ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிவிட்டார். இன்னமும் அவரை ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்கவில்லை. தவெகவிடம் 107 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். அதேமாதிரி, காங்கிரஸ் + கம்யூனிஸ்டுகளின் ஆதரவோடு விஜய்க்கு 116 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது.

விசிகவும் பேசிக்கொண்டிருக்கிறது. அப்படியிருந்தும் ஆளுநர் இன்னும் ஆட்சியமைக்க அழைக்கவில்லை. இதற்கிடையில்தான் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்கும் முயற்சிகளும் திரைமறைவில் நடந்துகொண்டிருக்கிறது.

தமிழக அரசியல் களமே பரபரப்பாகியிருக்கும் சூழலில், கொஞ்சம் கிச்சு கிச்சு மூட்டும் வகையில் டிடிவி தினகரன் தன்னுடைய ஒரு எம்.எல்.ஏவின் ஆதரவுடன் 'எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்' என இரவோடு இரவாக ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

டிடிவி கடிதம்
டிடிவி கடிதம்

'நடக்குற கலவரத்துல இவங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு...' என நகைச்சுவையாக இருந்தாலும் தவெகவினர் இதை கொஞ்சம் கூர்ந்து கவனித்து வருகின்றனர். திமுக, அதிமுக கூட்டணி என பேசப்படும் நிலையில் ஆளுநரை சந்தித்துவிட்டு வந்திருக்கும் டிடிவி தினகரன்,'தவெக குதிரை பேரம் நடத்துகிறது. அமமுக எம்.எல்.ஏ தவெகவுக்கு ஆதரவு என செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். தவெகவுக்கு அமமுக ஆதரவு என ஆளுநரிடம் போலியாக கடிதம் கொடுத்திருக்கின்றனர். என்னுடைய எம்.எல்.ஏ காமராஜை காணவில்லை. போனிலும் தொடர்புகொள்ள முடியவில்லை. நான் முன்பே என் எம்.எல்.ஏவிடம் கையெழுத்து வாங்கி வைத்திருந்தேன். ஜனநாயக விரோதமான செயல்பாடுகள் நடப்பதை தவிர்க்க வேண்டும்.' என விஜய் மீது குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

டிடிவியின் குற்றச்சாட்டை முன்வைத்து விஜய்யை ஆட்சியமைக்க அழைப்பதில் ஆளுநர் இன்னமும் காலம் தாழ்த்துவாரோ என வருத்தம் கொண்டிருக்கின்றனர்.

'திமுக அதிமுக ஆதரவில் திருமாவளவன் முதல்வர்?' - மீண்டும் தொடங்கியதா திரை மறைவு காய் நகர்த்தல்கள்?

தவெக ஆட்சியமைக்க கம்யூனிஸ்டுகள் ஆதரவளித்திருக்கும் நிலையில், விசிகவின் ஆதரவும் தவெகவுக்கு கிடைக்குமா என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கம்யூனிஸ்டுகள் எடுக்கும் முடிவையே நாங்களும் பின்பற்றுவோம் என திரும... மேலும் பார்க்க

'அதிமுகவை ஆட்சியில் அமர்த்த திமுக ஆதரவு கேட்டது!' - உண்மையை போட்டுடைத்த பேபி!

அதிமுகவை வெளியில் இருந்து ஆதரித்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கும் திட்டத்துக்கு தங்களையும் ஆதரவு தெரிவிக்குமாறு திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொது... மேலும் பார்க்க

'120 சீட்டுகள்' தவெக உடன் விசிக; விஜய்க்கு திருமாவளவன் ஆதரவு

தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் 107 (108) சீட்டுகளை வழங்கியிருந்தனர். மீதி 11 சீட்டுகளுக்குத்தான் பிற கட்சிகளின் உதவியை நாடி வந்தது தவெக. தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியபோது, ஆளுநர் கேட்ட... மேலும் பார்க்க

சோதித்த ஆளுநர்; சொல்லியடித்த தவெக விஜய் - நாளை முதல்வராகிறார்!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை இல்லாததால் அந்தக் கட்சி ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. பெரும்பான்மை எண்ணான 118 வேண்டும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும் ஸ்ட்ரிக்ட்டாக கூற... மேலும் பார்க்க

'ஜோசப் விஜய் எனும் நான்...' - ஆதரவு கொடுத்த விசிக, கம்யூக்கள், இ.யூ.எம்.எல்; முதல்வராகும் விஜய்!

தவெக தலைவர் விஜய் மூன்றாவது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கிறார். இந்த முறை விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்தியன் முஸ்லீம் யூனியன் லீக் கட்சியின் ஆதரவோடு விஜய் ஆளு... மேலும் பார்க்க

`தவெக ஆட்சியமைக்க ஆதரவு... திமுக-வுடன் உறவு!' - கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்வதென்ன?

விஜய்யின் த.வெ.கவிற்கு ஆதரவு அளித்த பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கின்றனர். செய்தியாளர்களிடம் பேசிய ... மேலும் பார்க்க