செய்திகள் :

17 வயது மாணவி கர்ப்பம்; இளைஞர் தலைமறைவு; கருவைக் கலைத்த மருத்துவர்கள் கைது; பகீர் பின்னணி

post image

கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்தவர் தனேஷ்(26). இவருக்கு திருமணம் ஆகி அனிதா ரோஸ் என்ற மனைவி உள்ளார். தனேஷின் வீட்டுக்கு அருகே வசிக்கும் 17 வயது சிறுமி நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

தனேஷும், மாணவியும் சில மாதங்களாக நெருங்கி பழகியுள்ளனர். இதில் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். மாணவியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்த அவரது பெற்றோர் அதுபற்றி கேட்டுள்ளனர். அதில் மாணவி கர்ப்பமான தகவல் அவரது பெற்றோருக்குத் தெரியவந்தது.

கர்ப்பத்துக்குக் காரணம் தனேஷ் என்பதை மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், வெளியே தெரிந்தால் அவமானம் ஆகிவிடும் என நினைத்து, தனேஷ் மற்றும் அவரது மனைவி அனிதா ரோஸிடம் கலந்து பேசி கர்ப்பத்தைக் கலைப்பது என்று முடிவெடுத்தனர்.

மருத்துவர்கள் சரண்யா, கிஷோர்
மருத்துவர்கள் சரண்யா, கிஷோர்

தனேஷ் மற்றும் அவரது மனைவி அனிதாரோஸ் இருவரும் அந்த மாணவியை நாகர்கோவிலில் ரயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர்.

18 வயது பூர்த்தியாகாத மாணவிக்குக் கருக்கலைப்பு செய்த விவகாரம் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த மாணவி தனக்கு கருகலைப்பு செய்யப்பட்டது குறித்தும், அதற்கு காரணமானவர்கள் பற்றியும் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தார்.

கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையம்
கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையம்

புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி கருக்கலைப்பு செய்த டாக்டர் கிஷோர்(61), அவரது மகளான டாக்டர் சரண்யா (32), செவிலியர் ரேணுகா(56) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ததுடன், மூவரையும் கைது செய்தனர்.

மூவரும் மருத்துவப் பரிசோதனையின்போது தங்களுக்கு உடல்நிலை பாதிப்பு எனக் கூறியதைத் தொடர்ந்து அவர்கள் போலீஸ் காவலில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவியைச் சிறார்வதை செய்த இளைஞர் தனேஷ் மீது கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ வழக்குப் பதிவு செய்தனர்.

தனேஷின் குற்றத்தை மறைக்க உதவிய அவரது மனைவி அனிதா ரோஸ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இருவரையும்  போலீஸார்  தேடி வருகின்றனர்.

திருச்சி: தாய், சேய்க்கு HIV ரத்தம்; ரூ. 40 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

திருச்சியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், பிரசவத்துக்காக திருச்சி அரசு மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் கடந்த 2022 - ம் வருடம் சேர்ந்தார். அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. பின்னர், அவருக்கு ஆண் குழந்... மேலும் பார்க்க

பட்டியல் சாதியினரின் உடல் பொது சுடுகாட்டில் அடக்கம்; வாழ்வாதாரத்தை முடக்கி வஞ்சிக்கும் ஆதிக்கச்சாதி?

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் உள்ள பெரும்பாளி பகுதியில் பட்டியல் சமுதாய மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களில் பலர் நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். ஆதிக்கச் ச... மேலும் பார்க்க

தமிழக போலீசாரை மிரள வைத்த ஏடிஎம் கொள்ளை: `திருடர் பயிற்சிப் பள்ளி’ நடத்திய கும்பல் சிக்கியது எப்படி?

நள்ளிரவு நேரம்... ஆள் நடமாட்டமற்ற அமைதியான சாலைகள்... கண்ணிமைக்கும் சில நிமிடங்களில் ஏடிஎம் மையங்களுக்குள் நுழையும் மர்ம நபர்கள், அடுத்த பத்தாவது நிமிடத்தில் பல லட்சம் ரூபாய்களோடு மாயமாகி விடுகிறார்கள... மேலும் பார்க்க

வேலூர்: பாலியல் தொழிலில் பணத்தகராறு; சக புரோக்கரைக் கொன்று புதைத்த கும்பல்; சிக்கியது எப்படி?

வேலூர் மாவட்டம், திருவலம் அருகேயுள்ள அம்முண்டி பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 33). இவர், வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள ஒரு லாட்ஜில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த 9-ம் தேதி மாயமானார். இது குறித்... மேலும் பார்க்க

ஊத்தங்கரை எம்.எல்.ஏ நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைத் தொகுதியில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வரும் பொறுப்பு அமைச்சர் கீர்த்தனாவின் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து ஊத்தங்கரையிலுள்ள தவெக எம்.எல்.ஏ இளையராஜா வீட்டில் க... மேலும் பார்க்க

கரூர்: சொத்துவரி மதிப்பை குறைத்து மதிப்பிட ரூ.3,000 லஞ்சம்; மாநகராட்சி வரி ஆய்வாளர் அதிரடி கைது!

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மூன்றாவது மண்டல அலுவலகத்தில் வரி ஆய்வாளராக(பில்கலெக்டர்) பணியாற்றுபவர் யோகேஸ்வரன்(வயது: 35). இவரிடம் காந்திகிராமத்தைச் சேர்ந்த ஒருவர் புதிய வீடு கட்டி வருவதாகக் கூறி, வீட்டி... மேலும் பார்க்க