செய்திகள் :

"2, 3 நாள்களில் ரஷ்யாவிலிருந்து டீசல் ஏற்றுமதி; அமெரிக்காவுக்கு உரமும் அனுப்பத் தயார்" - புதின்

post image

நேற்று அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ரஷ்யாவில் அந்த நாட்டு அதிபர் புதினைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பு குறித்து புதின் தெரிவித்துள்ளதாவது...

“உக்ரைன் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் நீங்கள் செலுத்தும் கவனத்திற்கும், அதிபர் ட்ரம்பின் கவனத்திற்கும் நன்றி.

குறிப்பாக மனிதநேய அடிப்படையில் அதிபர் ட்ரம்ப் இந்தப் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்கிறார் என்பதை நான் அறிவேன்.

ஈரான் போர்
ஈரான் போர்

எங்களது சமீபத்திய தொலைபேசி உரையாடல் உட்படப் பல்வேறு பேச்சுவார்த்தைகளில், இரு தரப்பிலும் உள்ள ராணுவ வீரர்களின் உயிரிழப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்த மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

ஆனால், இது ராணுவ வீரர்களின் இழப்புகள் பற்றியது மட்டுமல்ல. பொதுமக்கள் படும் துயரங்களைப் பற்றியதும் கூட.

ஈரான் போரில்...

ஈரானுடனான எங்களுடைய தனித்துவமான நம்பிக்கைக்குரிய உறவு உங்களுக்குத் தெரியும்.

ஈரானுடனான நெருக்கடியைத் தீர்க்க எங்களால் ஏதாவது செய்ய முடியும் என்றால், அதை நாங்கள் மகிழ்ச்சியுடன் செய்வோம்.

அமெரிக்கா - ரஷ்யா டீசல் ஒப்பந்தம்

அமெரிக்காவிற்கு ரஷ்யாவிலிருந்து டீசல் விநியோகிக்கப்படும் என்று இரு தரப்பும் அறிவித்த உடனேயே, சர்வதேசச் சந்தையில் டீசல் விலை உடனடியாக 5 முதல் 6 சதவிகிதம் வரை சரிந்தது.

40,000 டன்கள் கொள்ளளவு கொண்ட முதல் கப்பல் இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவிற்குப் புறப்படும்.

அதைத் தொடர்ந்து மற்ற கப்பல்களும் ஒன்றன்பின் ஒன்றாகப் புறப்படும். அனைத்தும் முறையாக நடப்பதை உறுதி செய்ய நிதி ஏற்பாடுகள் சரியாக இருப்பதை உறுதி செய்வதே இங்கு முக்கியமானது.

உரம்
உரம்

உரம்...

அதிபர் ட்ரம்ப் தொலைபேசி உரையாடலின்போது, விவசாயிகளைப் பற்றிப் பேசினார். எங்களால் அமெரிக்கச் சந்தைக்குக் கணிசமான அளவில் உரங்களையும் விநியோகிக்க முடியும்”

இப்போது புதின் சொல்லியிருப்பதைப் பார்த்தால், ரஷ்யாவுடன் அமெரிக்கா டீசல் ஒப்பந்தத்துடன், உர ஒப்பந்தத்தையும் விரைவில் போடுமோ?

கார்த்திகா கைது விவகாரம்: 'திமுகவுக்கும் வெட்கமில்லை, நாதகவுக்கும் வெட்கமில்லை!' – வன்னிஅரசு காட்டம்

தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீது தேர்தல் பரப்புரையின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் சென்ற பாதையில் அனுமதி இன்றி பரப்புரை மேற்கொண்டது உள்ளிட்ட சம்பவங்களில் வழக்குப்பதிவு... மேலும் பார்க்க

``ஆதவ் அர்ஜுனா நிழல் முதலமைச்சர் போல் செயல்படுகிறார்..!" - கே.பி.முனுசாமி விமர்சனம்

"தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் ராகுல் காந்தியை யாரும் விமர்சிப்பது இல்லை. ஆனால், சாதாரண விவசாயியாக இருந்து பொதுச் செயலாளராக உயர்ந்த எடப்பாடி பழனிசாமியை மட்டும் விமர்சிக்கிறார்கள்" என்... மேலும் பார்க்க

சிறுவர்கள் பைக் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை - புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை

போக்குவரத்து விதிகளுக்குப் புறம்பாக 18 வயதுக்குக் குறைவான சிறார்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும்போது ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் புத... மேலும் பார்க்க

நா.த.க-வை ரவுண்டு கட்டும் த.வெ.க! டு கூட்டணி குழப்பத்தில் பா.ம.க-வினர்! | கழுகார் அப்டேட்ஸ்

திணறும் தமிழக காவல்துறை!குற்றவாளிகளின் ரீல்ஸ் கலாசாரம்...ஆளும் த.வெ.க-வினர்தான் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனப் பார்த்தால், சரித்திர பதிவேடு குற்றவாளிகளும் இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவ்வாக இருப்ப... மேலும் பார்க்க

ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்காததற்கு Stephen Hubbard காரணமா? ட்ரம்ப் குறிப்பிடும் 'இந்த' நபர் யார்?

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரப் பேச்சுவார்த்தை தொடங்கி அனைத்து முயற்சிகளையும் எடுத்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஆனால், எதுவும் கைக்கொடுக்கவில்லை. ட்ரம்ப் ட்விஸ்ட் இதையடுத்து, ரஷ்யாவுடன் வர... மேலும் பார்க்க