கரூர்: புல் அறுக்க போன 60 வயது மூதாட்டி... கழுத்தறுக்கப்பட்டு கொலையான அதிர்ச்சி ...
21 மனைவிகள்… பெயர்களே நினைவில் இல்லை! - பங்களாதேஷ் யாசகரின் வித்தியாசமான வாழ்க்கை
ஒரு திருமணத்தையே சமாளிப்பது பெரிய விஷயம் என பலரும் நினைக்கும் நிலையில், பங்களாதேஷைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் தனக்கு 21 மனைவிகள் இருப்பதாக கூறியிருப்பது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
“அவங்களே வந்து கல்யாணம் கேட்டாங்க!”
மோரு மியா (Moru Mia) என்ற அந்த நபர், தான் எந்தப் பெண்ணிடமும் சென்று திருமணம் செய்து கொள்வதாக கேட்டதில்லை என்றும், பெண்களே தன்னிடம் வந்து திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். பல பெண்கள் தன்னைவிட வயதில் மூத்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்கு வந்தவர்களை மறுப்பது அவர்களுக்கு அவமரியாதையாக இருக்கும் என நினைத்ததால், அவர்களின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டதாகவும் மோரு மியா கூறியுள்ளார்.
யாசகம் செய்து வாழ்க்கை…
21 மனைவிகள் இருந்தாலும், மோருவின் வாழ்க்கை மிகவும் எளிமையானதாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு சிறிய குடிசையில் வசிக்கும் அவர், யாசகம் செய்வதையே தனது முக்கிய வருமானமாகக் கொண்டுள்ளார்.
அதிலும் வித்தியாசமாக, தினமும் ஒரு மனைவி மட்டும் அவருடன் யாசகம் செய்ய செல்வதாகவும், மற்றவர்கள் மாறி மாறி அவருடன் செல்வதாகவும் கூறப்படுகிறது.
21 பேரில் 8 பெயர்கள் மட்டுமே!
21 மனைவிகளின் பெயர்களைக் கேட்டபோது, மோரு மியா சில பெயர்களை மட்டுமே நினைவில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அவர் நினைவுகூர்ந்த பெயர்களில் ஷீலா, நர்கிஸ், செலினா, ஆலியா, தாரா, ஜோத்ஸ்னா, ராபியா, பாருல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பலரும் ஆச்சற்யத்துடனும் நகைச்சுவையாகவும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.



















