``IIT மெட்ராஸ் பறை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்'' - விருதுநகரில் பறை இச...
``25 வருடங்களாக ஷூட்டிங், வீடு என்றுதான் வாழ்ந்து வருகிறேன்'' - மனம் திறந்த நடிகர் சல்மான்
சவூதி அரேபியாவில் தற்போது ரெட் சீ சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து பல பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வில் நேற்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, “என் வாழ்க்கையின் பெரும்பகுதியை எப்போதும் என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன்தான் செலவிட்டிருக்கிறேன்.
எனது நெருங்கிய நண்பர்களில் சிலரை நான் இழந்துவிட்டேன். இப்போது அவர்களில் 4-5 பேர் மட்டுமே என்னுடன் இருக்கிறார்கள்.

கடந்த 25-26 வருடங்களாக நான் இரவு உணவிற்கு வெளியே சென்றதில்லை. என் வாழ்க்கை படப்பிடிப்பு, விமான நிலையம், ஹோட்டல் அல்லது நிகழ்வுக்குச் சென்று பின்னர் படப்பிடிப்புக்குத் திரும்புவது போலவே செல்கிறது.
ரசிகர்கள் மிகவும் மரியாதை மற்றும் அன்பைத் தருகிறார்கள். அதனால்தான் நான் கஷ்டப்பட்டு உழைக்கிறேன். அவ்வப்போது, என் உழைப்பால் எனக்கு கொஞ்சம் மனநிறைவு ஏற்படும்.
அடுத்து என்ன நடக்குமோ, எதிர்காலம் என்ன என யோசிப்பேன். அதையும் ரசிக்கிறேன்,” என்றார்.
சல்மான் கானை கொல்ல சிலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் அவர் முழு பாதுகாப்பில் இருக்கிறார். எனவே, பொது இடங்களுக்கு செல்வதை நடிகர் சல்மான் கான் தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



















