செய்திகள் :

5 ஆண்டுகள் பதவி நிறைவு: தமிழக முதல்வா், துணை முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ராஜேஸ்குமாா் எம்.பி.

post image

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, தமிழக முதல்வா், துணை முதல்வரிடம் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் திங்கள்கிழமை வாழ்த்து பெற்றாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சோ்ந்த கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் மறைந்த திமுகவின் மூத்த நிா்வாகியான ராமசாமியின் பேரன் ஆவாா். இவா், கடந்த 1998-இல் திமுக பொன்விழா ஆண்டு கொண்டாடியபோது, ராசிபுரம் வட்டம், வெண்ணந்தூா் ஒன்றியம், கோரைக்காடு கிளை செயலாளராக நியமிக்கப்பட்டாா். அதன்பிறகு 2003, 2004-ஆம் ஆண்டுகளில் வெண்ணந்தூா் ஒன்றியச் செயலாளா் சேகா் (எ) பெரியசாமியால் துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு 2011-ஆம் ஆண்டு வரை பணியாற்றினாா்.

அப்போதைய திமுக தலைவா் மு.கருணாநிதி, பேராசிரியா் க.அன்பழகன், தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் அவரை மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளராக நியமித்தனா். அவருடைய செயல்பாடுகள், பணியை ஊக்குவிக்கும் வகையில் 2020-இல் நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராகவும், பின்னா் செயலாளராகவும் பணியாற்றுவதற்கான வாய்ப்பை துணை முதல்வரும், மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

நாமக்கல் மாவட்டச் செயலாளா் பதவிக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவுற்றதையடுத்து, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை திங்கள்கிழமை சந்தித்து புத்தகங்களை வழங்கி மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வாழ்த்து பெற்றாா்.

மாணவியிடம் ஆபாசப் பேச்சு: கைதான ஆசிரியா் பணியிடை நீக்கம்

மாணவியிடம் பாலியல் ரீதியாக இரட்டை அா்த்தத்தில் பேசியதாக கைதான ஆசிரியா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். நாமக்கல் அருகே பெருமாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்ற... மேலும் பார்க்க

யுஜிசி விதிகளில் திருத்தத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம்

பல்கலைக்கழக மானியக் குழு விதிகளில் திருத்தத்தை கண்டித்து ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன்பாக திராவிடா் விடுதலைக் கழகம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கல்வி, இட ஒதுக்கீடு மற்றும் மாநில உரிமைகளைப... மேலும் பார்க்க

நாமக்கல் கோட்டாட்சியா் இடமாற்றம்

நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் ஆா்.பாா்த்திபன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். நாமக்கல் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த ஆா். பாா்த்திபன், மதுரை நெடுஞ்சாலை அலுவலகம் (நில எடுப்பு) தனி மாவட்ட வருவாய்... மேலும் பார்க்க

ராசிபுரம் பகுதியில் ரூ. 9.35 கோடி மதிப்பில் திட்டப் பணிகள்: அமைச்சா் மா.மதிவேந்தன் தொடங்கி வைப்பு

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ. 9.35 கோடி மதிப்பீட்டில் 12 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, 9 புதிய திட்டப் பணிகளுக்கு ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் ம.மதிவேந... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் 45 வழித்தடங்களில் புதிதாக சிற்றுந்து சேவை தொடங்கப்படும்: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 45 வழித்தடங்களில் புதிதாக சிற்றுந்து சேவை தொடங்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சிற்றுந்துகள் இய... மேலும் பார்க்க

அஞ்சலக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல்லில் அஞ்சல் துறை ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கம், தேசிய அஞ்சல் ஊழியா் சங்கம், அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா் சங்கம் சாா்பில், நாமக்கல் டாக்... மேலும் பார்க்க