₹250 கடனுக்காகக் கொத்தடிமை... இன்று ஆயிரக்கணக்கானோரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படு...
50 மில்லியன் டாலரில் உள்ளாடை... விக்டோரியாஸ் சீக்ரெட் பேஷன் ஷோவில் 'கைலி ஜென்னர்' - யார் இவர் ?
கைலி ஜென்னர் 50 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு கண்ணைக் கவரும் ஃபேன்டஸி உள்ளாடையை அணிந்து, விக்டோரியாஸ் சீக்ரெட் ரன்வேயில் அறிமுகமானதன் மூலம், தனது ஃபேஷன் பயணத்தில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளார்.
பிரமிக்க வைப்பதெல்லாம் இந்த உள்ளாடையின் வேலைப்பாடுகள் தான். சுமார் 4410 வைரங்களை பயன்படுத்தி, 1000 மணி நேரம்... அதாவது 41 நாட்கள் 16 மணி நேரத்தை எடுத்துக்கொண்டு இந்த "உள்ளாடையை" நுணுக்கமாக வடிவமைத்துள்ளனர். கைலி ஜென்னர், குட்டைப் பாவாடையுடன், ஒளிபுகும் ஹீல்ஸ் மற்றும் வெள்ளை இறகுகள் கொண்ட சிறகுகளை அணிந்து நடந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
வோக்(Vogue) பத்திரிகையின் அறிக்கையின்படி, இந்த ஃபேன்டஸி உள்ளாடையின் மதிப்பு பிரமிக்க வைக்கும் வகையில் 50 மில்லியன் டாலர் ஆகும், இந்திய மதிப்பில் கணக்கிட்டால் சுமார் ரூ.474.65 கோடி ரூபாய் ஆகும். இது அதன் முந்தைய மாடல்களை விட 35 மில்லியன் டாலர் அதிக விலை கொண்டது.

யார் இதை உருவாக்கினார்கள் ?
ஜேக்கப் & கோ நிறுவனத்தின் நகை வடிவமைப்பாளர் ஜேக்கப் அரபோவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த உள்ளாடையில், 75.54 காரட் எடையுள்ள பிரகாசமான மஞ்சள் நிற வைரத்தைச் சுற்றி, 4410 இயற்கை வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த உள்ளாடையின் எடை 1.8 கிலோவிற்கு சற்று குறைவாக உள்ளது. இந்த சிக்கலான வடிவமைப்பை உருவாக்குவதற்கு 15 திறமையான கைவினை கலைஞர்கள் தங்களது முழு வேலைபாட்டை இதில் ஈடுபடுத்தியுள்ளனர்.
ஃபேன்டஸி உள்ளாடை அறிமுக விழாவிற்கு கைலியைத் தேர்ந்தெடுத்த 'விக்டோரியாஸ் சீக்ரெட்டின்' முடிவு, திட்டமிட்ட மற்றும் வியூக ரீதியான ஒன்றாகும். வோக் இதழுக்கு அளித்த பேட்டியில், அந்த பிராண்டின் தலைமை படைப்பாக்க அதிகாரி ஆடம் செல்மன், அந்த உள்ளாடையை மீண்டும் பார்க்க விரும்பிய ரசிகர்களின் கோரிக்கைக்கு, பதிலளிக்கும் விதமாகவே அது மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதாக விளக்கினார்.
அவர் கூறியதாவது, மிகப்பெரிய கலாச்சார செல்வாக்கு கொண்ட ஒருவர் அதை அணிய வேண்டும் என்று அந்த பிராண்ட் விரும்பியது. உலகளாவிய செல்வாக்கு மற்றும் மாடலிங்கில் அவர் ஏற்படுத்திய தாக்கத்திற்காக அறியப்பட்ட கைலி ஜென்னர், இந்த உயர் தருணத்திற்கு ஒரு பொருத்தமான தேர்வாக அமைந்தார். ஃபேஷன், கலாச்சாரம், தொலைக்காட்சி என ஒரு குறிப்பிட்ட விஷயத்தையும் தாண்டி விரிந்து செல்கிறார்.
இந்த நிகழ்ச்சி மிகவும் பெரியது, இது ஒரு உண்மையான பொழுதுபோக்கு, மேலும் அதற்கு அவர் ஒரு சிறந்த மாடலாக இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் உண்மையிலேயே தனக்கென ஒரு கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளார் - இதை எத்தனை பேரால் சொல்ல முடியும்?" என்று செல்மன் கூறினார்.
யார் இந்த கைலி ஜென்னர் ?
கைலி ஜென்னர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், மாடல் மற்றும் சமூக ஊடகப் பிரபலம் ஆவார். இவர் Kardashian–Jenner குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் கீப்பிங் அப் வித் கரடஸியன்ஸ் (Keeping Up with the Kardashians) என்ற ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானது. இவருடைய அக்கா கிம் கரடஸியன் (Kim Kardashian)-ம் உலகப் புகழ்பெற்றவர்.

2015-ஆம் ஆண்டு கைலி ஜென்னர், Kylie Cosmetics என்ற அழகுசாதனப் பொருட்கள் நிறுவனத்தைத் தொடங்கினார். லிப் ஸ்டிக், லிப் கிட் உள்ளிட்ட பொருட்கள் மூலம் இவருடைய நிறுவனம் பிரபலமானது.
மேலும், இன்ஸ்டாகிராமில் இவருக்கு சுமார் 380 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். தனது வாழ்க்கை முறை, ஆடைகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தொழில் தொடர்பான பதிவுகள் மூலம் புகழ்பெற்றார்.
விக்டோரியாஸ் சீக்ரெட்டின் மூத்த மாடல்கள் மற்றும் புதிய தலைமுறை சூப்பர் மாடல்களுடன் கைலி ஜென்னர் ரன்வேயைப் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.















