செய்திகள் :

‘50+ வயதா?’ - உங்கள் பணத்தை மாதாந்திர வருமானமாக மாற்றுவது எப்படி?

post image

"இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு சேர்த்து வச்ச பணம் பத்திரமா இருக்கணும்... ஆனா மாசம் பிறந்தா கைச்செலவுக்கு யாரையும் எதிர்பார்க்காம நிலையான வருமானம் வரணும்!" 50 வயதைத் தாண்டிய பெரும்பாலானோரின் மனதில் ஓடும் சிந்தனை இதுதான்.

வங்கியில் எஃப்.டி (FD) போட்டா வட்டி குறைஞ்சுட்டே போகுது, பணவீக்கம் (Inflation) வேற வயித்துல புளியைக் கரைக்குது. மியூச்சுவல் ஃபண்ட் பக்கம் போனா "சந்தை அபாயம்"னு பயமுறுத்துறாங்க.

பணத்தைக் கையில வச்சிருந்தா கரைஞ்சு போயிடுமோனு தயக்கம்... இதனாலயே எதுவுமே செய்யாம பணத்தைச் சும்மா வச்சிருக்கீங்களா?

உங்கள் சேமிப்பை மாதாந்திர வருமானமாக மாற்றும் 3 எளிய வழிமுறைகள் இதோ:

Fixed Deposit

1. எஃப்.டி (Fixed Deposit) பாதுகாப்பு... ஆனா அதுவே போதாது!

எஃப்.டி பாதுகாப்பானதுதான், ஆனால் அதில் கிடைக்கும் வட்டிக்கு வரி கட்டியது போக, பணவீக்கத்தை அது முறியடிக்காது.

தீர்வு: உங்கள் மொத்தத் தொகையில் 30-40% தொகையை மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் (SCSS), RBI பாண்டுகள் மற்றும் நல்ல வங்கி எஃப்.டிகளில் பிரியுங்கள். இது உங்கள் அடிப்படைத் தேவைகளுக்கான நிலையான வட்டியைத் தரும்.

SWP Pension
SWP Pension

2. மியூச்சுவல் ஃபண்டில் 'SWP' (Systematic Withdrawal Plan)

"மியூச்சுவல் ஃபண்ட்ல போட்டா பணம் போயிடும்"ங்கிற பயம் வேண்டாம். ரிஸ்க் கம்மியான ஹைபிரிட் (Debt + Equity) ஃபண்டுகளில் முதலீடு செய்து, SWP முறையைப் பயன்படுத்தலாம்.

தீர்வு: நீங்கள் முதலீடு செய்த தொகையிலிருந்து, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் உங்களுக்குத் தேவையான தொகை உங்கள் வங்கிக் கணக்கிற்குச் சம்பளம் போல வந்து சேரும். இதில் வரிச் சலுகையும் உண்டு. உதாரணமாக ₹ 25 லட்சம் பணத்தை முதலீடு செய்து, மாதாமாதம் SWP முறையில் ₹10000 ரூபாயை மாத வருமானமாகப் பெறலாம். இதற்கு 100% வரி விலக்கு உண்டு!

Debt Mutual Funds

3. ஆபத்தில்லாத 'டெப்ட் ஃபண்டுகள்' (Debt Funds)

பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்கள் இல்லாத, அதே சமயம் எஃப்.டி போன்ற லாபம் தரக்கூடிய கடன் சார்ந்த ஃபண்டுகளில் (Debt Funds) மீதித் தொகையை முதலீடு செய்யலாம். அவசர காலத் தேவைகளுக்கு இதை உடனே பணமாகவும் மாற்றிக்கொள்ள முடியும்.

பயத்தை உடைக்கும் 3 பொன்விதிகள்:

ஒரே இடத்துல வைக்காதீங்க: ரொக்கம், எஃப்.டி, மியூச்சுவல் ஃபண்ட் எனப் பணத்தைப் பிரித்து முதலீடு செய்யுங்கள் (Diversification).

பணவீக்கத்தைக் கவனியுங்கள்: இன்றைக்கு ரூ.30,000 மாதச் செலவு என்றால், 10 ஆண்டுகள் கழித்து ரூ.50,000 தேவைப்படும். அதற்கு உங்க பணம் பணவீக்கத்தைத் தாண்டி 6% வளர வேண்டும்.

தயக்கத்தைத் தவிருங்கள்: பணத்தைச் சும்மா வைத்திருப்பதே மிகப்பெரிய இழப்பு. தைரியமாக முதலீடு செய்து, எதிர்காலத்தினை சிறப்பாக மாற்றிடுங்கள்.

உங்கள் ஓய்வுக்காலம் என்பது பிறரை எதிர்பார்த்து வாழும் காலம் அல்ல; உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கும் பொற்காலம். இன்றே சரியான திட்டமிடலைத் தொடங்குங்கள்!

50+ வயதினருக்கான சிறப்பு நிதி வழிகாட்டல்

உங்களுக்கு 50+ வயதா?

நீங்கள் சேர்த்து வைத்துள்ள பணத்தில் இருந்து வாழ்நாள் முழுவதும் உங்களுக்கான பென்ஷன் பெறுவது எப்படி?

₹ 1 கோடி ரூபாய் பணம் சேர்ப்பது எப்படி? அதில் இருந்து மாதாமாதம் ₹25000 - ₹40000 வரை மாதாந்திர பென்ஷனாகப் பெறுவது எப்படி?

வரும் புதன் (செப்டம்பர் 16) மாலை 7 மணிக்கு நடைபெறும் சிறப்பு ஆன்லைன் நிதி திட்டமிடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்.

வங்கி சேமிப்பு கணக்கு மற்றும் ஃபிக்செட் டெப்பாசிட்டுகளில் பணம் வைத்திருப்பவர்கள், அதனைப் பாதுகாப்பாக முதலீடு செய்வது எப்படி என்று அறிந்துகொள்ளலாம்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, இங்கே முன்பதிவு செய்யவும்: https://labham.money/events/webinar-sep16-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_sep16_2026

10 ஆண்டுகளில் நிதி சுதந்திரம்: உங்களுக்காக உங்கள் பணத்தை உழைக்க வைப்பது எப்படி?

40 வயதைக் கடந்த பின் ஏற்படும் மிகப்பெரிய மனமாற்றம் - 'இனிமேலாவது நமக்கான வாழ்க்கையை வாழ வேண்டும்' என்பதுதான். கடமைகள், குடும்பப் பொறுப்புகள், கடன் தவணைகள் என கடந்த 20 வருடங்களாக ஓடிய ஓட்டத்தில் நம் இள... மேலும் பார்க்க

NRI Corner: சொந்த ஊருக்குப் போறீங்களா? மாதாந்திர பென்ஷன் பெறும் 'Bucket Strategy'!

வெளிநாட்டில் பல வருஷம் வியர்வைச் சிந்தி உழைச்சிட்டு, "போதும்பா ஓடியது... இனி சொந்த ஊர்ல குடும்பத்தோட நிம்மதியா செட்டிலாகலாம்!" அப்படின்னு சந்தோஷமா இந்தியாவுக்கு பிளைட் ஏறுற ஒவ்வொரு NRI மனசுலயும் ஒரு ப... மேலும் பார்க்க

வேலைக்கு ஒரு கும்பிடு! SIP முதல் SWP வரை: நிதிச் சுதந்திரத்தின் 3 லெவல்கள்!

மாதச் சம்பளம் வாங்கி வாழ்க்கையை ஓட்டுவது கயிறு மேல் நடப்பது போல இருக்கிறதா? ஒரு பெரிய தொகையை சேர்த்து சீக்கிரம் நிதிச் சுதந்திரம் அடைந்து உங்களுக்குப் பிடித்தபடி, உங்கள் மனதுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங... மேலும் பார்க்க

45 வயதை எட்டிவிட்டீர்களா? உங்கள் ஓய்வுக்கால வாழ்க்கை 'சூப்பர்' ஆக இருக்க தங்கமான 4 விதிகள்!

"இன்னும் 10 - 15 வருஷத்துல ஓய்வு பெற போறோம்... சேமிப்பு போதுமானதா இருக்குமா? பிள்ளைகளோட எதிர்காலம் என்ன ஆகும்?" — 50 வயதை நெருங்கும் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் ஓடும் அமைதியான புயல் இது. நிதி ஆலோசகர் ... மேலும் பார்க்க

Gulf வாழ்க்கை நிரந்தரமில்ல! - சொந்த ஊர் திரும்புவதற்குள் ₹1.2 கோடி சேர்ப்பது எப்படி?

வெள்ளிக்கிழமை மதியம் தோஹா அல்லது துபாய் அவென்யூவில் நண்பர்களுடன் டீ சாப்பிடும்போது: “என்ன மாப்ள, ஊர்ல வாங்குன நிலத்துக்கு அடுத்த தவணை கட்டியாச்சா? பிசினஸ் ஆரம்பிக்க அண்ணனுக்கு அனுப்பின பணம் என்ன ஆச்சு... மேலும் பார்க்க

Mutual Fund: ''டைரக்ட் ஃபண்ட் வேண்டாம்; ரெகுலர் ஃபண்டே போதும்'' - உஷாராக முதலீடு செய்யும் பெண்கள்!

இன்றைக்கு இந்தியா முழுக்க இருக்கும் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை நோக்கி வேகமாக வந்துகொண்டு இருக்கிறார்கள். இத்தனை நாளும் தங்கத்தில் மட்டுமே பணத்தைப் போட்டுக்கொண்டு இருந்தோம... மேலும் பார்க்க