செய்திகள் :

500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட் இலவசம் தொடருமா? - தமிழக அரசு விளக்கம்

post image

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (10.05.2026) நடைபெற்ற பிரமாண்ட விழாவில், தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஜோசப் விஜய்க்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்ற சில நிமிடங்களிலேயே, தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மூன்று மிக முக்கிய அரசாணைகளில் அவர் கையொப்பமிட்டார். 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு, இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும். இதன் மூலம் லட்சக்கணக்கான நடுத்தரக் குடும்பங்கள் பயன்பெறும் எனக் கூறப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் அதிநவீன வசதிகளுடன் கூடிய "சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை" மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும்.

தமிழகத்தைப் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற, 37 மாவட்டங்கள் மற்றும் 9 மாநகரங்களில் மொத்தம் 65 போதைப்பொருள் தடுப்புப் படை (Anti-Narcotic Task Force) காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்ற வாக்குறுதிகளை நிறைவேற்றும் கோப்புகளில் கையெழுத்திட்டார். அதேநேரம், 500 யூனிட்களுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் எனும் திட்டத்தில் மக்களிடத்திலேயே குழப்பம் ஏற்பட்டது. அதாவது 500 யூனிட்களுக்கு கீழ் 200 யூனிட் இலவசம் என்றால், 500 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் பயனர்களுக்கு பழைய நடைமுறையான முதல் 100 யூனிட் இலவசம் கிடைக்காதோ எனும் சந்தேகங்கள் எழுந்தன.

இந்நிலையில், இது தொடர்பாக அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில், 500 யூனிட்களுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் எனவும், 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு பழைய நடைமுறையான 100 யூனிட் மின்சாரம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக டிடிவி தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில், ``தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது இரு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என அறிவிப்பதா ? - தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதை முழுமையாக செயல்படுத்திட தவெக அரசு முன்வர வேண்டும்.

மின்சாரம் (Representational Image)

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என வாக்குறுதியளித்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த முதல் நாளே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்திருப்பது முன்பின் முரணாக உள்ளது.

தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வாரி வீசுவதையும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதனை செயல்படுத்த மறுப்பதையுமே அடிப்படையாக கொண்டிருந்த திமுக அரசின் நீட்சியாகவே இந்த அரசையும் பார்க்கவேண்டியுள்ளது. எனவே, இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற உத்தரவை திருத்தி, மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பொலிட்டிக்கல் ஸ்ட்ராட்டஜிஸ்ட் `டு' அமைச்சர் - தவெக ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் பயணம் ஒரு பார்வை!

திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட 43 வயது ஆதவ் அர்ஜுனா, தற்போது சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை அரசியல் அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். இவர் கோவையைச் சேர்... மேலும் பார்க்க

`அப்பாவை அரசியலுக்கு வராதனு சொன்னார் எம்.ஜி.ஆர்; விஜய் சார் என்னை அரசியலுக்கு வரவச்சிட்டார்'- தினேஷ்

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவி ஏற்றுள்ள நிலையில், சமீபத்தில் தவெகவில் சேர்ந்த நடிகர் தினேஷிடம் பேசினோம்.``’நண்பன்’, ‘காவலன்’ படங்கள் வெளியான சமயங்களில் விஜய் டிவியில் டைரக்‌ஷன... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் `கடன்' குறித்த விஜய்-ன் குற்றச்சாட்டு; தங்கம் தென்னரசு பதில்!

'திமுக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு 10 லட்சம் ரூபாய் கோடி கடன்' என்று பதவியேற்பு விழாவில் குற்றம் சாட்டியிருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின், "'ரூபாய்... மேலும் பார்க்க

தமிழ்தாய் வாழ்த்திற்கு மூன்றாமிடம்: 'தவறு தொடருவதை அனுமதிக்கக் கூடாது' - இந்திய கம்யூனிஸ்ட்

தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்ற நிகழ்வில் தமிழ்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது..."முதலமைச்சர் பொ... மேலும் பார்க்க