செய்திகள் :

Vijay: `கடல் வற்றும் வரை விஜய் மீது நான் கொண்டுள்ள அன்பு நிலைத்திருக்கும்!'- நெகிழும் நடிகர் ஶ்ரீமன்

post image

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாகத் தவெக-வை மக்கள் வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். பல போராட்டங்களைத் தாண்டி இன்று காலை முதல்வராகப் பதவியும் ஏற்றிருக்கிறார் விஜய்.

விஜய்யுடன் நெருக்கமாக சினிமாவில் பல காலம் பயணித்த அவருடைய நண்பர்கள் பலரும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.

முதல்வர் ஜோசப் விஜய்

அந்த வகையில், நடிகர் ஸ்ரீமனும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு, நண்பனின் பதவியேற்பு விழாவைக் கண்டு பயங்கர உற்சாகமடைந்தார்.

விஜய்யுடன் தொடர்ந்து பயணித்து வந்த ஸ்ரீமன், விஜய் விக்கிரவாண்டியில் நடத்தியிருந்த முதல் மாநாட்டிலேயே கலந்துகொண்டார். விஜய் பதவியேற்ற பிறகு, ஸ்ரீமனிடம் பேசினோம்.

நம்மிடையே பேசிய நடிகர் ஸ்ரீமன், "விஜய் இத்தனை போராட்டத்தைத் தாண்டி வந்திருக்கார்னு சொல்கிறார்கள். ஆனால், இதை நான் ஒரு போராட்டமா பார்க்கல.

மக்களுக்கு நல்லது பண்ணனும்னு வரும்போது, சில இடையூறுகள் வரும். அதைத் தாண்டிப் போகும்போது சுகமாக இருக்கும். அதைத் தாண்டுறதுக்குதான் கொஞ்சம் நேரம் எடுத்தது.

நடிகர் ஶ்ரீமன் - விஜய்
நடிகர் ஶ்ரீமன் - விஜய்

அந்த டைம் முடிஞ்ச உடனே அழகாகவும் இருந்தது. நல்ல பிரமாதமான ஒரு வரவேற்பும் இருந்தது. ஃபைனலா எதுவாக இருந்தாலும் சார், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

என்னுடைய நண்பர் விஜய் முதல்வரானதைப் பற்றி என்னுடைய சந்தோஷத்தைச் சொல்லணும்னா 'ஸ்கை இஸ் த லிமிட்' (Sky is the limit). எனக்கு அதுக்கு மேல வேற எதுவும் சொல்றதுக்கும் இல்லை, வார்த்தைகளும் இல்லை.

கடல் வற்றும் வரை அவர் மீது நான் கொண்டுள்ள அன்பு நிலைத்திருக்கும். அவ்வளவுதான்" என்றவரிடம், "முதல்வர் விஜய்யின் ஆட்சி எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு உங்களிடம் இருக்கிறது?" எனக் கேட்டதற்கு, "எதிர்பார்ப்பு ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.

ஒரே வீட்ல பிறந்த மூணு குழந்தைகளுக்கு அப்பா, அம்மாகிட்ட எதிர்பார்ப்பு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.

நடிகர் ஶ்ரீமன் - விஜய்
நடிகர் ஶ்ரீமன் - விஜய்

அதனால், கொஞ்சம் வளரும்போதுதான் நம்ம எதிர்பார்ப்புகள் என்ன, நான் இதை எதிர்பார்த்திருந்தேன் அப்படின்னு சொல்றதுக்கு ஒரு நேரம் வேணும் இல்லையா?

அந்த அவகாசம் நமக்குக் கொடுத்ததுக்கு அப்புறம்தான் நம்மளால இதுக்குச் சரியான பதிலைச் சொல்ல முடியும்" என்றார் உற்சாகத்துடன்.

"வெயிலில் நின்றுகொண்டிருக்கும் பெண் காவலர்களுக்கு இதை செய்துக் கொடுக்க வேண்டும்!" - விஷால் கோரிக்கை

சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, இடதுசாரிக் கட்சிகள், விசிக, ஐ.யு.எம்.எல், காங்கிரஸ் ஆகிய கட்ச... மேலும் பார்க்க

TVK: "'சர்க்கார்' விஜய்யின் அரசியல் இலக்குகளைச் சொல்வதற்காகவே எடுக்கப்பட்ட படம்" - ஜெயமோகன்

,இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சராகவும் பதவி ஏற்கிறார் விஜய். கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில், தவெக-வுக்கு மக்கள் வாக்களித்து தனிப்பெருங்கட்சியாக உருவெடுக்கச் செய்திருக்கிறார்கள்.இன்று பத... மேலும் பார்க்க

VIJAY : லவ்வர் பாய் டு ஆக்ஷன் ஹீரோ! விஜய் நடித்த படங்களுக்கு ஆனந்த விகடன் மதிப்பெண்! | Full List

சட்டமன்ற தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக தவெக உருவெடுத்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து, இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சராகவும் பதவி ஏற்கிறார் விஜய். 'நாளை தீர்ப்பு' திரைப்படத்தின் மூலம் சினிமா... மேலும் பார்க்க

29 Movie Review: திகட்ட திகட்ட எடுக்கப்படும் காதல் பாடங்கள் - படிக்க சுவாரஸ்யம் தருகிறதா?

சேலத்திலிருந்து சென்னைக்குப் பணி நிமித்தமாக வருகிறார் சத்யா (விது). அவருக்குள் 'நான் யார்?', 'என்னுடைய அடையாளம் என்ன?' என்கிற கேள்விகளும் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதற்கான விடையைத் தேடும் பயணத்தில் இருக்... மேலும் பார்க்க

`ஒருத்தரோட திறமையை வளர்த்து விடுவதில் உறுதுணையா இருப்பது பெருமை!' - சசிகுமாரின் 'வாவ்' லைன்அப்கள்

தமிழ் சினிமாவில் திறமை இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை கைதூக்கி விடும் ஹீரோக்களில் சசிகுமாருக்கு தனி இடம் உண்டு. 10க்கும் மேற்பட்ட இயக்குநர்களை அவர் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். 'டூரிஸ்ட் ஃபேமிலி... மேலும் பார்க்க

"4 வயதிலேயே என் மகனுக்கு பாலியல் பாதுகாப்பு, கருத்தடை வரை சொல்லிகொடுத்தேன்" - நடிகர் மாதவன்

திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகர்களில் ஒருவர் மாதவன். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட் திரைப்படங்களிலும் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். சமீபத்தில் அவரது ... மேலும் பார்க்க