செய்திகள் :

`முதல் சந்திப்பில் சங்கடம்... பதவியேற்பிலேயே விஜய் சொன்னாரே கவனிச்சீங்களா?' - நெகிழும் சஞ்சீவ்

post image

நடிகர் சஞ்சீவ் தமிழக முதலமைச்சர் விஜய்யுடனான தனது நட்பு குறித்து நம்மிடம் பேசுகையில், ``சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் நுழைவுத் தேர்வு எழுதற ஹால்லதான் முதன் முதலா எனக்கு அறிமுகம். எனக்கு பக்கத்துல உட்கார்ந்து எழுதினவர்.

இன்னைக்கு மக்கள் மனசை முழுசாப் படிச்சு அரசியல்ங்கிற தேர்வுல எக்ஸ்டிங்ஷன்ல பாஸ் பண்ணி முதலமைச்சரா பதவி ஏற்கிற விழா அரங்கத்துல உட்கார்ந்திருந்த போது சந்தோஷத்துல வார்த்தைகள் வர மறுக்குது.

லயோலாவுல எக்ஸாம் எழுதி முடிக்கிற வரைக்கும் எஸ்.ஏ. சி சார் பையங்கிற விஷயம் தெரியாது. எழுதிட்டு வெளியில வந்தப்ப கொஞ்சம் தள்ளி என் பின்னாடியே வர்றாப்ல. நான் தூரத்துல நின்னிட்டிருந்த சந்திரசேகர் சாரை பார்த்ததும், எங்கூட பரீட்சை எழுத வந்திருந்த ஸ்ரீநாத் கிட்ட ‘மச்சி, இவர் டைரக்டர்டா. சட்டம், தர்மம்னு எடுப்பாரே, அவர்’ என கொஞ்சம் லந்து லாங்க்வேஜ்லயே சொன்னேன்.

சஞ்சீவ்

இதைக் கவனிச்சவர் ‘பிரதர்’ அவர் என்னோட அப்பா. நான் ஜோசப் விஜய்’னு கை குலுக்கிறார். கொஞ்சம் சங்கடமாப் போச்சு. இருந்தாலும் சமாளிச்சோம் நானும் ஸ்ரீநாத்தும்.

அன்னைக்குல இருந்து வருஷங்கள் ஓடினாலும் நட்பு அப்படியே இருக்கு. இன்னைகு ஸ்ரீநாத்தும் ஒரு எம்.எல்.ஏ. வாழ்க்கையிலேயே நான் அதிகமா சந்தோஷமடைந்த நாள் இந்த நாள் தான்.

இனி எனக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்கள் அத்தனைபேருக்குமே மகிழ்ச்சியான காலம்தான். பதவியேற்பிலேயே சொன்னாரே கவனிச்சீங்களா, அதிகார மையம் நான் மட்டும்தான்னு. அதுல ஆயிரம் ரொம்பவே அர்த்தம் பொதிந்தது" என நெகிழ்கிறார் இவர்.

புது காட்சிகள் புது முயற்சிகள்; மேடையிலேயே `அதிகார மையங்களுக்கு எச்சரிக்கை - வாழ்த்துகள் ஜோசப் விஜய்

மே 4-ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகள், தமிழ்நாடு அரசியல் களத்தில் ஏற்படுத்திய தாக்கம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மாறி மாறி திராவிடக் கட்சிகள் வென்று வந்த மண்ணில், முதல் த... மேலும் பார்க்க

"எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க!" - விஜய்க்கு ஸ்டாலின் பதில்

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் பேசிய தவெக தலைவர் விஜய், 'திமுக அரசு ரூ.10 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு சென்றுள்ளதாக' குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின... மேலும் பார்க்க