செய்திகள் :

TVK: "'சர்க்கார்' விஜய்யின் அரசியல் இலக்குகளைச் சொல்வதற்காகவே எடுக்கப்பட்ட படம்" - ஜெயமோகன்

post image

,இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சராகவும் பதவி ஏற்கிறார் விஜய்.

கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில், தவெக-வுக்கு மக்கள் வாக்களித்து தனிப்பெருங்கட்சியாக உருவெடுக்கச் செய்திருக்கிறார்கள்.

இன்று பதவியேற்கவிருக்கும் விஜய்க்கு, அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா துறை பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

எழுத்தாளர் ஜெயமோகனும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து, தன்னுடைய ப்ளாகில் பதிவிட்டிருக்கிறார். இவர் விஜய்யின் 'சர்க்கார்' படத்தில் திரைக்கதை மற்றும் வசனப் பணிகளில் பணியாற்றியிருக்கிறார்.

விஜய்
விஜய்

அந்தப் பதிவில் அவர், "இன்று ஜோசப் விஜய் தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்கிறார். நான் அவருடைய சர்க்கார் படத்திற்கு எழுதியுள்ளேன்.

(கிட்டத்தட்ட சர்க்கார் படத்தில் நிகழ்ந்த எல்லாமே அவருடைய அரசியலிலும் நடைபெற்றன. இறுதியில் அவருக்கு எதிராக ஆளும்கட்சி எதிர்க்கட்சி இரண்டும் இணைவது வரை) நானறிந்தவரை அவர் நிர்வாகத்திறன் மிக்கவர்.

அவருடய திரைத்திட்டமிடல், பொருளியல் திட்டமிடல் இரண்டுமே அப்பழுக்கற்றவை. அரசியலிலும் அவ்வாறே என அறிகிறேன்.

உடனிருப்பவர்களை நுணுக்கமாகப் புரிந்துகொள்பவர், அவர்களை எப்போதுமே தன் ஆளுகைக்குள் வைத்துக்கொள்பவர்.

பிறர் அவரைக் கையாள்வது முற்றிலும் இயலாதது என்பதை அறிவேன். இருபதாண்டுகளாக அவர்தான் பிறரை இயல்பாகவே தனக்காகக் கையாள்கிறார்.

Writer Jeyamohan
Writer Jeyamohan

சர்க்கார் அவருடைய அரசியல் இலக்குகளைச் சொல்வதற்காகவே எழுதி எடுக்கப்பட்ட படம். அவரே வகுத்தளித்த பார்வைகளே அதில் உள்ளன. ஆனால் அவர் என்ன எண்ணுகிறார் என்பதை அவரே சொல்லாமல் அணுக்கமானவர்கள்கூட புரிந்துகொள்ள முடியாது என்பார்கள்.

அவருடைய சூழலில் பழையபாணி பணிவு குழைவு ஆகியவை எதிர்பார்க்கப்படும் எஜமான் வழிபாடு இல்லை என்பதை, அது இளைய தலைமுறைக்கான நவீன தொழில்முறைச் சூழல் என்பதையும் கண்டிருக்கிறேன்.

தன் இலக்குகள் நோக்கி துல்லியமான திட்டமிடலுடன் சென்றுகொண்டிருப்பவர் விஜய். கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டவர், ஆனால் குடும்பச் சூழலில் இருந்து உருவான இயல்பானதும் மிக வலுவானதுமான ஒரு மதச்சார்பின்மைப் பார்வை அவருக்கு உண்டு என்பது அவருடைய தனித்தகுதி என நான் நினைக்கிறேன்.

இந்த இறுதிக்கணத்தில் ஆதரவு தேடும்போதுகூட மதச்சார்பற்றவர்களை மட்டுமே அவர் தேர்ந்தெடுத்த்தது எனக்கு வியப்பளிக்கவில்லை. முதல்வர் பணி என்பது அவருக்கு கடினமானதொன்றும் அல்ல. தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள். அவர்கள் விரும்பியபடி நல்லன நிகழ்க" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

VIJAY : லவ்வர் பாய் டு ஆக்ஷன் ஹீரோ! விஜய் நடித்த படங்களுக்கு ஆனந்த விகடன் மதிப்பெண்! | Full List

சட்டமன்ற தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக தவெக உருவெடுத்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து, இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சராகவும் பதவி ஏற்கிறார் விஜய். 'நாளை தீர்ப்பு' திரைப்படத்தின் மூலம் சினிமா... மேலும் பார்க்க

29 Movie Review: திகட்ட திகட்ட எடுக்கப்படும் காதல் பாடங்கள் - படிக்க சுவாரஸ்யம் தருகிறதா?

சேலத்திலிருந்து சென்னைக்குப் பணி நிமித்தமாக வருகிறார் சத்யா (விது). அவருக்குள் 'நான் யார்?', 'என்னுடைய அடையாளம் என்ன?' என்கிற கேள்விகளும் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதற்கான விடையைத் தேடும் பயணத்தில் இருக்... மேலும் பார்க்க

`ஒருத்தரோட திறமையை வளர்த்து விடுவதில் உறுதுணையா இருப்பது பெருமை!' - சசிகுமாரின் 'வாவ்' லைன்அப்கள்

தமிழ் சினிமாவில் திறமை இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை கைதூக்கி விடும் ஹீரோக்களில் சசிகுமாருக்கு தனி இடம் உண்டு. 10க்கும் மேற்பட்ட இயக்குநர்களை அவர் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். 'டூரிஸ்ட் ஃபேமிலி... மேலும் பார்க்க

"4 வயதிலேயே என் மகனுக்கு பாலியல் பாதுகாப்பு, கருத்தடை வரை சொல்லிகொடுத்தேன்" - நடிகர் மாதவன்

திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகர்களில் ஒருவர் மாதவன். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட் திரைப்படங்களிலும் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். சமீபத்தில் அவரது ... மேலும் பார்க்க

கருப்பு: "அரசியல் விஷயங்கள் பயங்கரமா டேக் ஓவர் பண்ணக் கூடாதுன்னு காத்திருக்கோம்!" - ஆர்.ஜே பாலாஜி

சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம் அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. த்ரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்குச் சாய் அபயங்கர் இசையமைத்திருக்க... மேலும் பார்க்க

வேகமெடுக்கும் படப்பிடிப்பு! விக்ரம் படத்தில் ரியா ஷிபுவா; இணைந்த நடிகர்கள்! 'சீயான் 63' பரபர அப்டேட்

மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் விக்ரமின் ரசிகர்கள். விக்ரமின் பிறந்த நாளில் வெளியான `சீயான் 63' படத்தின் ஃபர்ஸ்ட் ஃப்ளேம் வீடியோ படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்ததோடு வீடியோவும் செம வைரலாகிவிட்டது.... மேலும் பார்க்க