செய்திகள் :

``காங்கிரஸ் ஒரு ‘துரோகக் கட்சி’ கூட்டணிக் கட்சிகளை முதுகில் குத்துகிறது!" - பிரதமர் மோடி தாக்கு!

post image

காங்கிரஸ் கட்சி தனது அரசியல் லாபத்திற்காகக் கூட்டணிக் கட்சிகளுக்குத் துரோகம் இழைப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது என்றும், மாநிலக் கட்சிகளின் தயவில் மட்டுமே அக்கட்சி உயிர் பிழைத்து வருகிறது என்றும் பிரதமர் மோடி கடுமையாகச் சாடியுள்ளார்.

பெங்களூருவில் உள்ள ‘வாழும் கலை’ (Art of Living) அமைப்பின் 45-வது ஆண்டு விழா மற்றும் புதிய தியான மந்திர் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர், பின்னர் பாஜக தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``காங்கிரஸ் மற்றும் தி.மு.க இடையே சுமார் 30 ஆண்டுக்கால நெருங்கிய உறவு இருந்தது. 2014-க்கு முன்பாக மத்தியில் 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி நீடித்ததற்கு தி.மு.க-வே முதுகெலும்பாக இருந்தது.

விஜய் - ராகுல் காந்தி
விஜய் - ராகுல் காந்தி

ஆனால், அரசியல் சூழல் மாறியவுடன், தங்களுக்கு இக்கட்டான நேரங்களில் உதவிய அதே தி.மு.க-வை காங்கிரஸ் கைவிட்டது. அதிகாரப் பசியால் காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டது. தற்போது தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள மீண்டும் ஒரு கட்சியின் தோள் மீது ஏறி சவாரி செய்ய காங்கிரஸ் முயற்சிக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக கர்நாடக காங்கிரஸ் அரசு மக்களின் நலனைவிட, உட்கட்சிப் பூசல்களைத் தீர்ப்பதற்கே அதிக நேரத்தைச் செலவிட்டு வருகிறது.

முதலமைச்சர் பதவியில் யார் நீடிப்பது, யாருக்கு அடுத்த வாய்ப்பு என்பதில் நிலவும் குழப்பத்தால் நிர்வாகம் முடங்கியுள்ளது. இவர்களது ‘கேரண்டி’ திட்டங்கள் அனைத்தும் போலியானவை. புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன. ஊழல்கள் அற்ற வேகமான வளர்ச்சியை மக்கள் விரும்புகிறார்கள். இதற்கு பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே நிலையான மாற்றாக உள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ்தாய் வாழ்த்திற்கு மூன்றாமிடம்: 'தவறு தொடருவதை அனுமதிக்கக் கூடாது' - இந்திய கம்யூனிஸ்ட்

தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்ற நிகழ்வில் தமிழ்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது..."முதலமைச்சர் பொ... மேலும் பார்க்க

'மேலும் மேலும் நல்லது செய்யணும்' - விஜய் பதவியேற்பு விழாவில் கலைஞரின் பேத்தி கயல்விழி

இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மு.க.அழகிரியின் மகள்... கலைஞரின் பேத்தி கயல்விழி கலந்துகொண்டார். அங்கு தொலைகாட்சி சேனல் ஒன்றிற்க... மேலும் பார்க்க

புது காட்சிகள் புது முயற்சிகள்; மேடையிலேயே `அதிகார மையங்களுக்கு எச்சரிக்கை - வாழ்த்துகள் ஜோசப் விஜய்

மே 4-ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகள், தமிழ்நாடு அரசியல் களத்தில் ஏற்படுத்திய தாக்கம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மாறி மாறி திராவிடக் கட்சிகள் வென்று வந்த மண்ணில், முதல் த... மேலும் பார்க்க

"எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க!" - விஜய்க்கு ஸ்டாலின் பதில்

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் பேசிய தவெக தலைவர் விஜய், 'திமுக அரசு ரூ.10 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு சென்றுள்ளதாக' குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின... மேலும் பார்க்க

`முதல் சந்திப்பில் சங்கடம்... பதவியேற்பிலேயே விஜய் சொன்னாரே கவனிச்சீங்களா?' - நெகிழும் சஞ்சீவ்

நடிகர் சஞ்சீவ் தமிழக முதலமைச்சர் விஜய்யுடனான தனது நட்பு குறித்து நம்மிடம் பேசுகையில், ``சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் நுழைவுத் தேர்வு எழுதற ஹால்லதான் முதன் முதலா எனக்கு அறிமுகம். எனக்கு பக்கத்துல ... மேலும் பார்க்க