செய்திகள் :

80 மீட்டர் தேசியக் கொடி... உலகச் சாதனை படைத்த சேலம் பள்ளி மாணவர்கள்!

post image

பெற்றோரின் வழிகாட்டுதலுடன், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விசைத்தறியில் 80 மீட்டர் தேசியக் கொடியை நெய்து உலக அங்கீகாரம் பெற்ற அண்ணன்–தங்கையான தமிழ்ச்செல்வன் - செந்தமிழமுதுவின் சாதனை கவனம் ஈர்த்துள்ளது.

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அண்ணன்–தங்கையான தமிழ்ச்செல்வன் (6-ம் வகுப்பு) மற்றும் செந்தமிழமுது (3-ம் வகுப்பு), 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காட்டன் கோட்டா (Cotton Kotta) பருத்தி நூலைப் பயன்படுத்தி, விசைத்தறியில் 80 மீட்டர் நீளமும், 2 அடி அகலமும் கொண்ட தேசியக் கொடியை நெய்து உலகச் சாதனை படைத்துள்ளனர்.

அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, துட்டம்பட்டியில் பயிலும் தமிழ்ச்செல்வனும், ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி, இடையப்பட்டியில் பயிலும் செந்தமிழமுதும், தங்களது பெற்றோரின் வழிகாட்டுதலுடன் இந்த முயற்சியை மேற்கொண்டனர். நாட்டுப்பற்று, தேசிய ஒருமைப்பாடு, கல்வியின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மை மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றை சமூகத்திடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்திலேயே இந்த உலகச் சாதனை முயற்சி வடிவமைக்கப்பட்டது.

இந்த முயற்சியின் நோக்கம் குறித்து மாணவர்களின் தந்தை 'நன்றி' நாராயணசாமி கூறுகையில், "இந்த முயற்சி வெறும் உலகச் சாதனைக்காக அல்ல. இந்த மண்ணுக்கும், இந்த நாட்டுக்கும், பருத்தி விளைவிக்கும் விவசாயிகளுக்கும், நெசவுத் தொழிலை உயிர்ப்புடன் காத்து வரும் நெசவாளர்களுக்கும் நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சியை நானும் என்னுடைய குழந்தைகளும் இணைந்து செய்து வருகிறோம்" என்றார்.

ஜூலை 26-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்த முயற்சியை இந்திய கிரிக்கெட் வீரர் டி. நடராஜன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 20 மணி நேரத்தில் நிறைவடைந்த இந்தச் சாதனையை கின்னஸ் உலகச் சாதனையாளர் டிராகன் ஜெட்லி தலைமையிலான குழு மதிப்பீடு செய்து உறுதி செய்தது. இதையடுத்து Records India Academy – World Record 2026 அமைப்பின் உலகச் சாதனை அங்கீகாரமும் சான்றிதழும் வழங்கப்பட்டது. பின்னர் 80 மீட்டர் நீளமுள்ள தேசியக் கொடி பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த வெற்றிக்குப் பின்னால் பெற்றோரான எல். நாராயணசாமி மற்றும் பிரியாவின் வழிகாட்டுதலும் ஊக்கமும் முக்கிய பங்காற்றியுள்ளது. 'நன்றி' என்ற வார்த்தையை 1,11,111 முறை எழுதி உலகச் சாதனை படைத்த "நன்றி" நாராயணசாமியின் விடாமுயற்சியும் சமூகப் பொறுப்பும், இன்று அவரது குழந்தைகளையும் உலகச் சாதனையாளர்களாக உயர்த்தியுள்ளது.

"சாதனைக்கு வயது முக்கியமில்லை; விடாமுயற்சிதான் முக்கியம்!" என்பதை சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த அண்ணன்–தங்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.

பகலில் படிப்பு, இரவு பெட்ரோல் பம்பில் வேலை; கல்வியைத் தொடர போராடும் மும்பை மாணவியின் நெகிழ்ச்சி கதை

மும்பையைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது படிப்புக்காக இரவு 10 மணி வரை பெட்ரோல் பம்ப் ஒன்றில் வேலை செய்வது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. மும்பையில் உள்ள ஷெல் பெட்ரோல் பம்ப் ஒன்றில் வினீத் என்பவர் தனது... மேலும் பார்க்க

"தேவேந்திர பட்னாவிஸ் எதிர்காலத்தில் பிரதமராவார்" - மகாராஷ்டிரா முதல்வரின் சித்தப்பா நம்பிக்கை

மகாராஷ்டிராவில் முதல்வராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ் மத்திய அமைச்சராவார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புனேயில் தேவேந்திர பட... மேலும் பார்க்க

"இந்தியாவை நேசித்தால் ஏன் துபாயில் வசிக்கிறீர்கள்?" - விவேக் ஓப்ராய், மாதவனுக்கு ராஜ்தாக்கரே கேள்வி

நடிகர் ஆர்.மாதவன் தனது மகனின் நீச்சல் பயிற்சி உள்ளிட்ட காரணங்களால் துபாயில் நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்டார். இதே போன்று மற்றொரு பாலிவுட் நடிகரான விவேக் ஒபேராயும் இதே போன்று தொழில் நிமித்தமாக துபாயில் ... மேலும் பார்க்க

தருமபுரி ஒகேனக்கல் அழகை ரசித்த சுற்றுலாப் பயணிகள்! | பரிசல் காட்சிகள்

தருமபுரி ஒகேனக்கல் தருமபுரி ஒகேனக்கல்தருமபுரி ஒகேனக்கல்தருமபுரி ஒகேனக்கல்தருமபுரி ஒகேனக்கல்தருமபுரி ஒகேனக்கல்தருமபுரி ஒகேனக்கல்தருமபுரி ஒகேனக்கல்தருமபுரி ஒகேனக்கல்தருமபுரி ஒகேனக்கல்தருமபுரி ஒகேனக்கல்த... மேலும் பார்க்க