செய்திகள் :

AI மாநாடு: சட்டையை கழற்றிப் போராட்டம் நடத்திய காங்கிரஸ் அணி; கண்டனம் தெரிவிக்கும் பாஜக!

post image

இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பறைசாற்றும் வகையில் டெல்லியில் 'இந்திய AI உச்சிமாநாடு 2026' (India AI Impact Summit) நடைபெற்றுவருகிறது. இந்த மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள், டெலிகேஷன்கள், பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சட்டையைக் கழற்றி பிரதமர் மோடிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

AI மாநாடு காங்கிரஸ் அணி போராட்டம்
AI மாநாடு காங்கிரஸ் அணி போராட்டம்

மாநாட்டின் ஒரு பகுதியில் உலகளாவிய சிஇஓ-க்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த ஒரு குழுவினர் தங்கள் சட்டைகளைக் கழற்றி கையில் ஏந்தியபடி முழக்கமிட்டவாறு அரங்கிற்குள் நுழைந்தனர். அவர்களின் முழக்கத்தில், அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவுக்குப் போதிய பலன்கள் கிடைக்கவில்லை என்றும், இது நாட்டுக்கு எதிரானது என்றும் கோஷமிட்டனர். இந்த உயர்மட்ட பாதுகாப்பு வளையத்தை மீறி, அவர்கள் கியூஆர் (QR) கோடுகளைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்தது பாதுகாப்புப் பிரிவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தப் போராட்டம் தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் தேசியச் செயலாளர் கிருஷ்ணா ஹரி, பீகார் மாநிலச் செயலாளர் குந்தன் யாதவ், உபி மாநிலத் துணைத் தலைவர் அஜய் குமார், தேசிய ஒருங்கிணைப்பாளர் நரசிம்ம யாதவ் ஆகிய நான்கு முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் முதலில் கருப்பு குடைகளில் ஸ்டிக்கர் ஒட்டி, அரங்குக்குள் நுழையத் திட்டமிட்டதாகவும், பாதுகாப்பு காரணங்களால் குடைகள் பறிமுதல் செய்யப்படும் என்பதால், சட்டையில் ஸ்டிக்கர் ஒட்டி வந்து பின்னர் அதைக் கழற்றிப் போராடியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு மத்திய அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், ``இந்தியா உலகளாவிய தொழில்நுட்ப சக்தியாக உருவெடுக்கும் வேளையில், காங்கிரஸ் நாட்டை அவமானப்படுத்துகிறது. இது அரசியல் எதிர்ப்பு அல்ல, இந்தியாவின் பிம்பத்தைச் சிதைக்கும் சதி." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ``நாடு முன்னேறிச் செல்லும் இந்த நேரத்தில் அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும். இளைஞர் காங்கிரஸின் செயல் கண்டிக்கத்தக்கது." எனத் தெரிவித்திருக்கிறார்.

திமுக கூட்டணியில் 'ஹவுஸ்புல்' - தொகுதிப் பங்கீட்டில் ஸ்டாலினுக்குக் காத்திருக்கும் சவால் என்ன?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தடபுடலாக தயாராகி கொண்டிருக்கின்றன.பேரணி, பிரசாரம், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் வாக்குறுதி என கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கி இருக்கும் சூழலில், திம... மேலும் பார்க்க

KN Nehru: ``இதெல்லாம் எங்களுக்கு பின்னடைவல்ல..." - நீதிமன்ற உத்தரவு குறித்து ஆர்.எஸ் பாரதி!

அமைச்சர் கே.என்.நேரு மீதான அமலாக்கத்துறையின் ஊழல் புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அ.தி.மு.க எம்.பி இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற... மேலும் பார்க்க

`எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றி' - சட்டமன்றத்தில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்!

ஸ்டாலின்மனநிறைவுடன் நிற்கிறேன்16-வது சட்டமன்றத் தொடரின் நிறைவு நாளான இன்று, முதல்வர் ஸ்டாலின் அவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உரையாற்றினார். அவரின் உரையில், ``பகுத்தறிவு பகலவன் தந்தை ப... மேலும் பார்க்க

'டைம்' கொடுக்கும் ட்ரம்ப்; ஈரான் வழிக்கு வரவில்லையேல் உலக நாடுகளுக்கு பாதிப்புகள் என்ன? | Quick Read

'இன்னும் 10 - 15 நாள்கள்தான் டைம்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு காலக்கெடு கொடுத்து அதிர வைத்திருக்கிறார். ட்ரம்ப் கூறுவது என்ன? "10 - 15 நாள்களுக்குள் ஈரான் தனது அணு ஆயுதக் கட்டமைப்பைக் கலை... மேலும் பார்க்க

கோவை: திமுக இளைஞரணி மேற்கு மண்டல மாநாடு... ஏற்பாடுகள் மும்முரம்! - Photo Album

மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம்மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கும் இடம்மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கயிருக்கு... மேலும் பார்க்க