செய்திகள் :

BB Tamil 9 Day 65: கம்மு - பாரு ரொமான்ஸ்; ஒட்டுமொத்த வீட்டுக்கும் தண்டனை; ரணகளமான கோர்ட் டாஸ்க்

post image

திவாகர் வெளியேற்றத்துக்கு வினோத் காரணமா? கோர்ட்டில் வந்த முதல் கேஸ் இது. வினோத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. என்றாலும் திவாகரின் வெளியேற்றத்திற்கு வினோத்தும் ஒருவகையில் காரணமாக இருந்தார்.

எத்தனை முறை எச்சரித்தும் மைக்கை ஆஃப் செய்து விட்டு ரகசியம் பேசும் பாருவையும் கம்முவையும் வெளியே அனுப்பி சுதந்திரமாக இருக்க வடலாம். அடித்துக்கொண்டு ஒரே நாளில் பிரிவார்கள்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 64

இரவு. பாருவும் கம்முவும் மைக்கை தள்ளி வைத்து தங்களின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி ரொம்பவும் கிளுகிளுப்பாக ரகசியம் பேசிக் கொண்டிருந்தார்கள். கரடி போல பிக் பாஸ் குறுக்கே வந்து எச்சரித்தார்.

புதிய வீட்டுத் தலயான அமித் ஆக்டிவ்வாக இருந்தார். அரோ தூங்காமல் இருக்க கதை சொல்லப்போகிறாராம். ரயிலில் சமோசா விற்பவரைப்போல ‘பாட்டரி.. பாட்டரி’ என்று சொல்லி திவ்யாவை சிரிக்க வைத்தார். ‘சிறந்த வீட்டுத் தல’ என்கிற பெயரை இவராவது பெறுவாரா?

பாரு பாத்ரூமை சரியாக சுத்தம் செய்யவில்லை என்கிற புகார் எழுந்தது. வியானா இதைப் பற்றி விசாரிக்கும்போது மழுப்பலாக பதிலளித்தார் பாரு. சமையலும் தெரியாது. சுத்தமும் தெரியாது. ரொமான்ஸூம் வம்பும் மட்டும் தெரியும். இப்படியொரு போட்டியாளர்.

“உனக்கு பெண் ரசிகைகள் அதிகமாமே.. வெளியே போனா லைன்ல நிப்பாங்க” என்று கம்முவை ஜாலியாக வம்பிழுத்துக்கொண்டார் ரம்யா. கம்முவின் அலப்பறைகளைக் கண்டிக்காமல் விசேவும் இப்போதெல்லாம் ஏற்றிவிடுவதால் தன்னை ரொமான்டிக் ஹீரோவாகவே கம்மு நினைத்துக்கொள்கிறார். ‘ஆமாம்.. வெளியேபோய் நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணனும்’ என்று கம்மு சொல்ல “அப்ப பாருவை ஏமாத்திடுவியா?” என்று ரம்யா சிரித்துக்கொண்டே கேட்க “அவதான் என்னை ஏமாத்திடுவா” என்றார் கம்மு. ஆக இருவருக்குமே இது பிக் பாஸ் கன்டென்ட் காதல் என்கிற திட்டத்துடன்தான் பழகி வருகிறார்கள் என்பது வெளிப்படை.

கம்மு, எஃப்ஜே போன்றவர்கள் எல்லாம் ரெண்டு மூணு ரொமான்ஸ் செய்து அலப்பறை செய்து கொண்டிருக்க, சபரியோ வெங்காயத்துடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தார். பாவம். இதில் அலைபாயுதே மாதவன் வசனம் வேறு.

கம்மு - பாரு ரொமான்ஸ் காரணமாக ஒட்டுமொத்த வீட்டுக்கும் தண்டனை

பாருவும் கம்முவும் மீண்டும் மைக்கை தளர்த்திவிட்டு ரொமான்ஸ் ரகசியம் பேச பிக் பாஸிற்கு சரியான கோபம் வந்திருக்கும். சற்று நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு சாப்பிடும் நேரத்தில் ஓர் அறிவிப்பு செய்தார். “தொடர்ந்து எச்சரிக்கை தரப்பட்டும் பாரு, கம்ருதீன் மைக்கை கழற்றிவைத்துப் பேசுவதால் வீட்டிலுள்ள எல்லோருக்கும் தண்டனை தரப்படும். அதன்படி பால், டீ, முட்டை, சீஸ் என்று அனைத்துப் பொருட்களும் அகற்றப்படும்’ என்றார். சாப்பிடுவதற்காக தட்டில் வைக்கப்பட்டிருந்த முட்டையைக்கூட தூக்கியது டூ மச்.

பாரு இந்தியில் ரகசியம் பேசியிருப்பார் போலிருக்கிறது. எனவே அந்த மொழியிலேயே பிக் பாஸ் விசாரித்தது சுவாரசியமான குறும்பு. பாருவாவது ‘ஸாரி பிக் பாஸ்.. ஸாரி மக்களே’ என்று பாவனையாகவாவது மன்னிப்புக்கேட்டார். ஆனால் கம்முவோ ‘ஸ்லோவாத்தான் பேசினோம்’ என்று சமாளிக்க அதையும் நக்கலடித்தார் பிக் பாஸ்.

தவறு செய்தவர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வீட்டுக்கு தண்டனை கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் கில்ட்டியாக ஃபீல் செய்வார்கள் என்பது பிக் பாஸின் கணக்காக இருக்கலாம். (பாருவிடம் அந்தப் பிரச்னையெல்லாம் இல்லை!) ‘தவறு செய்யாத எங்களுக்கு ஏன் தண்டனை?” என்று மற்றவர்களுக்கு இவர்கள் இருவரின் மீது கோபம் வரலாம் என்பதும் பிக் பாஸின் பிளான். “இப்ப வைங்க நாமிஷேனை. யாருன்னு காட்டறோம்” என்று எஃப்ஜே சொன்னது நல்ல கமென்ட். “அப்படி பார்க்காதீர்கள் குழந்தைகளா..’ என்று சமாளித்துக் கொண்டிருந்தார் பாரு.

“பாருவிற்கும் கம்முவிற்கும் பெரிய அப்ளாஸ் கொடுங்க. நீங்க மன்னிப்பு கேட்கத் தேவையில்ல. செயல்ல காட்டுங்க” என்று சர்காஸமாக பாராட்டினார் விக்ரம்.

ரணகளமாக ஆரம்பித்த கோர்ட் டாஸ்க்

அடுத்ததாக வீக்லி டாஸ்க். இந்த வாரம் ‘வழக்காடு மன்றம்’. ஒருவர் மூன்று வழக்குகள் தொடுக்கலாம். தகுதியான வழக்கு நீதிமன்றத்திற்கு வரும். முதல் வழக்கை ஆதிரைமீது போட்டார் வினோத். ‘திவாகர் வெளியேற, தான் காரணம் என்று ஆதிரை சொல்வது தவறு’ என்பது வழக்கின் உள்ளடக்கம்.

வினோத்திற்கு விக்ரமும் ஆதிரைக்கு அரோவும் வழக்கறிஞர். போலவே நீதிபதிகள் அமித் மற்றும் திவ்யா. வினோத் வழக்கில் திவ்யாவை நீதிபதியாக ஆதிரை தோ்வு செய்தது நல்ல செக் பாயின்ட். வினோத்திற்கும் திவ்யாவிற்கும் ஏழாம் பொருத்தம்.

வினோத்தின் வக்கீலான விக்ரம் (வித்யாபதி என்று என்னை அழையுங்கள்) ஒரு தேர்ந்த வழக்கறிஞர் போலவே நீதிமன்றத்தில் நடந்து கொண்டது பாராட்டத்தக்கது. ஆதிரையின் வக்கீல் அரோவோ ‘வெச்சு செஞ்சாங்க’ என்று கொச்சையாகப் பேசிவிட்டு சிரிப்பை அடக்கமுடியாமல் தவித்தார். “மக்கள் பார்த்துட்டு இருப்பாங்க. பார்த்து ஆடு” என்று வினோத்திற்கு அட்வைஸ் தந்தார் கம்மு. (இந்த உபதேசத்தை யாரு சொல்றது பாருங்க!)

வழக்கு எண்.1: வினோத் Vs ஆதிரை - திவாகர் வெளியேற்றத்திற்கு வினோத் காரணமா?

“வீக்கெண்ட்ல விசே என்ன பேசினாரு. கலை போனதுக்கு அவரேதான் காரணம். அதுபோல திவாகர் போனதுக்கு அவரேதான் காரணமே ஒழிய, எனது கட்சிக்காரர் வினோத் காரணமில்லை” என்று ஓப்பனிங் ஆர்க்யூமென்ட்டை வைத்தார் விக்ரம்.

“வினோத்திற்கு தாழ்வு மனப்பான்மை. வீட்டிலுள்ள நட்புக்களை வைத்து தப்பிக்க நினைக்கிறார்” என்று பலவீனமாக எதிர் வாதம் செய்தார் அரோ. சாட்சியாக வந்த கனி “தம்பி போன்ற எஃப்ஜேவையும் என்னையும் வைத்து திவாகர் தவறாக பேசினார். இது போன்ற பேச்சுக்கள்தான் அவரது எவிக்ஷனுக்குக் காரணம்” என்று சொல்லியது சரியான பாயின்ட்.

ஆதிரைக்கு சாட்சியாக வந்த வியானா “தனது நண்பர்களுடன் இணைந்து திவாகரை எப்போதும் கலாய்த்தார் வினோத்” என்று பலவீனமாக சாட்சி சொன்னார். ராஜா டாஸ்க்கின் போது திவாகர் சொன்ன கொச்சையான வசவும் சாட்சியாக காட்டப்பட்டது. “ஆனால் அப்படி பேசியதற்கு யார் காரணம்... வினோத்தான் இந்தச் சண்டையை ஆரம்பித்து வைத்தார்” என்று திறமையாகப் பேசினார் அரோ.

ஆதிரைக்கு சாட்சி சொல்ல வந்த கம்ரூதீனும் சொதப்பி “நானும் திவாகரை கலாய்ச்சிருக்கேன்” என்று பல்டி அடித்தார். பிக் பாஸ் வீட்டில் பொடுகுத் தொல்லை ஓவர்போல. சான்ட்ரா எப்போதும் தலையைச் சொறிகிறார். இப்போது நீதிபதி திவ்யாவும் தலையைச் சொறிந்தார். (ஒருவேளை வழக்கு வாதம் குழப்பிவிட்டதோ?!)”

‘வெளியே போங்க - பாருவைக் கண்டித்த நீதிபதிகள்

வினோத்திற்கு சாதகமாக வழக்கு சென்று கொண்டிருந்ததால் கடுப்பான பாரு குறுக்கே பேச “வெளிய போங்க” என்று நீதிபதிகளால் கண்டிக்கப்பட்டார். தனது வழக்கமான முக சேஷ்டைகளை செய்தார் பாரு. இதுபோன்ற எக்ஸ்பிரஷன்களை ஒரு வீடியோவாக தொகுத்தால் நல்ல காமெடியாக இருக்கும்.

‘திவாகரின் வெளியேற்றத்திற்கு வினோத் காரணமில்லை” என்று அமித் தெள்ளத் தெளிவாக தீர்ப்பளிக்க, திவ்யாவோ “வினோத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது” என்று குழப்பமாகத் தீர்ப்பளித்தார். அதாவது திவாகரின் வெளியேற்றத்திற்கு வினோத் ஒரு காரணமாக இருந்தார் என்பதைச் சொல்லமுடியாமல் ஒரு மாதிரி குன்சாக சொன்னார்போல.

இரு நீதிபதிகள் இடையே மாறுபட்ட தீர்ப்பு வந்ததால், மக்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார் பிக் பாஸ். அதன்படி வினோத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இரண்டு கைகளையும் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு வினோத் கெத்தாக நின்றதால் ‘என்ன பாடி லேங்வேஜ் இது?’ என்று எதிர் அணியினர் ஆட்சேபித்தார்கள்.

வயசான நீதிபதி போலவே அமித் நடந்துசென்றது சிறப்பான பாடி லேங்வேஜ். ஆதிரை அணி பேசும்போது டவாலியான எஃப்ஜே சும்மா இருந்ததாகவும், வினோத் அணி பேசும்போது சத்தம்போட்டு கண்டித்ததாகவும் வினோத் குற்றம் சாட்ட “என்னையும் அவனையும் சம்பந்தப்படுத்திப் பேசாதீங்க” என்று ஆதிரை ஆட்சேபிக்க ஒரு சண்டை ஆரம்பித்தது.

வினோத்தின் மானரிஸம் தவறாக இருக்கிறது - குற்றம்சாட்டும் பெண்கள்

நாக்கை தடவுவதுபோல வினோத் செய்யும் மானரிஸமும் எரிச்சலூட்டுவதாக புகார் எழ, ‘அது என் பழக்கம். அதுல கூடவா தப்பு கண்டுபிடிப்பீங்க?” என்று ஆவேசப்பட்டார் வினோத். “முதல்ல எதிராளி பேசறத பொறுமையா கேளுங்க. அதுக்குள்ள அவசரப்பட்டு பதட்டப்படாதீங்க” என்று வினோத்திற்கு இப்போதுதான் அட்வைஸ் செய்திருந்தார் விசே. ஆனால் மனிதரின் சுபாவம் மாறவில்லை.

“அதான் உனக்கு சாதகமா தீர்ப்பு வந்துடுச்சே.. அப்புறம் ஏன் இப்படி பண்றே. உனக்கு ஃபேன்ஸ் அதிகம். போக மாட்டே” என்று வினோத்தை தனியாக அழைத்து வந்து ஆறுதல் சொன்னார் கம்மு. (கம்முவும் தனக்கு பெண் ரசிகைகள் அதிகம் என்கிற மிதப்பில் இருக்கிறார் போல!). “என்னை சாட்சி சொல்லக் கூப்பிட்டிருந்தா கேஸ் அப்படியே மாறியிருக்கும்” என்று அலட்டினார் பாரு.

“பாருவை இப்பத்தான் பக்கத்துல இருந்து பார்த்தேன். அப்படி ஒண்ணு சொல்றாங்க. இப்படி ஒண்ணு சொல்றாங்க..இப்படி மாத்தி மாத்தி பேசிட்டு அதைப் பத்தி ஒண்ணுமே இல்லாம சிரிக்கறாங்க” என்று வியானா சொல்ல, அதற்கு விக்ரம் சொன்னதுதான் ஹைலைட். “பிக் பாஸூக்கு அளவெடுத்து செஞ்ச ஆளு பாரு”.

இந்த வழக்காடு மன்றத்தில் அடுத்த வழக்கை எஃப்ஜே மீது தொடுத்திருக்கிறார் பாரு. என்னென்ன கலவரங்கள் நிகழப் போகிறதோ?!

BB Tamil 9: "நான் இந்த வீட்டில என்ன வேணாலும் பண்ணுவேன்; அதை கேட்க FJ யாரு?"- காட்டமான பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 65 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக தேர்வாகியிருக்... மேலும் பார்க்க

BB Tamil 9: "என்னையும், FJ-வையும் ஏன் சேர்த்து வச்சு பேசுறீங்க"- வினோத்திடம் சண்டைப்போடும் ஆதிரை

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 64 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக தேர்வாகியிருக்... மேலும் பார்க்க

Bigg Boss 9 Day 64: “ஏன் இப்படி ஹர்ட் பண்றீங்க; எனக்கு வலிக்கும்ன்னு..." - அரோராவை அழவைத்த கம்மு

தல போட்டிக்கான பந்து விளையாட்டு காமெடியாக நல்லபடியாக நடந்து முடிந்தது. இதுவரை நடந்ததிலேயே இதுதான் சுவாரசியமான டாஸ்க். நல்லபடியாகவும் முடிந்தது. பாரு அந்தப் போட்டியில் இல்லாததுதான் இதற்குக் காரணமோ?பிக்... மேலும் பார்க்க

நீண்ட நாள் நண்பருடன் நிச்சயதார்த்தம்; பிக் பாஸ் ஜூலி கரம் பிடிக்கப்போவது இவரைத்தான்!

சென்னையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த நர்ஸ் மரியானா ஜூலியை, தமிழக அளவில் பிரபலமாக்கியது, கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம். தன்னெழுச்சியாக சென்னை மெரினாவில் திரண்ட அந்தக் கூட்டத்த... மேலும் பார்க்க