பாமக: "அவமானபட்டிருக்கேன்; யாரையும் சும்மா விடமாட்டேன்" - அன்புமணி ராமதாஸ் ஆவேச...
BB Tamil 9: "என்னையும், FJ-வையும் ஏன் சேர்த்து வச்சு பேசுறீங்க"- வினோத்திடம் சண்டைப்போடும் ஆதிரை
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 64 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.
இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக தேர்வாகியிருக்கிறார்.
மேலும் இந்த வாரம் நீதிமன்ற டாஸ்க்கை ஹவுஸ் மேட்ஸ்க்கு பிக் பாஸ் கொடுத்திருக்கிறார்.

இதில் நீதிபதியாக திவ்யாவும், அமித்தும் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் புரொமோவில் ஆதிரைக்கும், வினோத்திற்கும் சண்டை நடக்கிறது.
"எதுக்கு என்னையும், FJ-வையும் சேர்த்து வச்சு பேசுறீங்க. எனக்கும் FJ-வுக்கும் நட்பு இருக்கிறதுனாலத் தான் டாஸ்க்கில அவன் என்னைய எதுவும் கேட்கலைன்னு ஏன் சொன்னீங்க" என்று ஆதிரை வினோத்திடம் சண்டைபோடுகிறார்.

என்கிட்ட கத்தாதீங்க, கத்தாதீங்கன்னு 10 முறை சொன்ன FJ ஆதிரை பக்கம் அவ்வளவு தப்பு நடந்திருக்கு அதை ஏன் கேட்கவே இல்ல" என்று வினோத் சொல்கிறார்.
"அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கும், அவனுக்கும் நட்பு இல்ல. நீங்க பேசுனது எனக்கு சுத்தமா பிடிக்கல" என்று ஆதிரை கத்துகிறார்.



















