ஆங்கர்னா இப்படித்தான் இருக்கணுங்கிறதை உடைச்சதே மாகாபா தான்! - Ma Ka Pa Anand | D...
BB Tamil 9: "பிரஜினை கேம்முக்கு யூஸ் பண்ணிருக்காங்கன்னு எனக்கு தோணுது"- திவ்யா குறித்து சாண்ட்ரா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறியிருக்கின்றனர்.
இந்த வாரத்திற்கான நாமினேஷனில் சாண்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித் போன்றோர் இடம்பெற்றிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில் திவ்யாவை பற்றி சாண்ட்ரா அமித்திடம் பேசிக்கொண்டிருக்கிறார்.
" என்னை வொர்ஸ்ட் ஃபர்பாமர்ன்னு சொல்லிட்டு அதுக்கு ஒரு விளக்கம் கொடுத்தாங்க.
ஜெயிலுக்கு நான் போகும்போது நீயும் கூட இருக்கணும்'னு சொன்னாங்க. நானும் இந்த மாதிரி கேம்லாம் விளையாடிருக்கேன்.
ஆனா நான் அவங்க விளையாடுற மாதிரிலாம் விளையாடல. தலை வெடிக்குது, நான் செத்துருவேன்னு சொன்னாங்க.

இப்போ ஏன் அந்த கேங்ல சேர்ந்திருக்காங்கன்னும் எனக்கு தெரியும். அவங்க பிரஜினை கேம்முக்கு யூஸ் பண்ணிருக்காங்கன்னு தான் எனக்கு தோணுது.
என்னை பத்தி என்ன வேணாலும் நினைச்சிக்கட்டும். எனக்கு எந்தக் கவலையும் இல்ல" என்று சாண்ட்ரா பேசுகிறார்.
















