செய்திகள் :

BB Tamil 9: மவுன்ட் ரோடு விளம்பரம், முக்கோண லவ் ட்ராக்.. எஃப்.ஜே. எவிக்ஷனில் தப்புவ‌து எப்படி?

post image

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 விஜய் டிவியில் 60 நாட்களைக் கடந்துவிட்டது. இன்னும் நான்கு வாரங்கள்தான் மிச்சமிருக்கிற சூழலில் அந்த வீட்டுக்குள் தற்போது 14 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

முன்னதாக இந்த சீசன் இருபது போட்டியாளர்களுடன் தொடங்கியது. அதில் எவிக்ஷனுக்கு முன்பே நந்தினி வெளியேறினார்.

அடுத்த சில தினங்களில் அமித் பார்கவ், பிரஜின், சான்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகிய நான்கு பேர் வைல்டு கார்டு மூலம் என்ட்ரி ஆனார்கள்.

நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து ஒரேயொரு வாரம் எவிக்ஷன் இல்லை என அறிவிக்கப்பட்டது. இரண்டு வாரங்கள் டபுள் எவிக்ஷன் நிகழ்ந்தது.

தொடர்ந்து அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் பிரவீன், பிரவீன் காந்தி, திவாகர், துஷார், பிரஜின், ரம்யா, வியானா அப்சரா, கெமி ஆகிய ஒன்பது பேர் இதுவரை வெளியேறியுள்ளனர்

நிகழ்ச்சி நிறைவடைய நான்கு வாரங்களே இருக்கும் சூழலில் எப்படி இத்தனை பேர் உள்ளே என்கிற கேள்வியை நிகழ்ச்சியுடன் தொடர்பிலிருக்கும் சிலரிடம் கேட்டோம்.

''இந்த சீசனில் சோஷியல் மீடியா பிரபலங்கள் அதிகமா கலந்துகிட்டதால் ஆரம்பத்துல சில நாட்கள் அவங்க நிகழ்ச்சியைச் சரியா புரிஞ்சுக்காம கன்டென்ட் தர்றோம்ங்கிற பேருல ஏதேதோ செய்திட்டிருந்தாங்க. அதனால தான் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நாலு டிவி பிரபலங்கள் இறக்கப்பட்டார்கள்.

Bigg Boss Tamil 9 - Day 66 Review
Bigg Boss Tamil 9

இருந்தபோதும் இப்ப வரை குறிப்பிட்ட ஒரு சிலராலதான் ஓரளவு நிகழ்ச்சி பார்க்கப்பட்டு வருது. இந்தச் சூழல்ல நாமினேஷன் பட்டியல்ல அவங்க வந்தா அவங்க வெளியேறிடக்கூடாதுனு தான் நினைக்கிறாங்க. இபோதைக்கு உள்ள இருக்கிற போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகம்தான்னாலும் , ஆனா கூட்டம் இருந்தா அதுவே பேசப்படும்னு நினைக்கிறாங்களோ என்னவோ' என்கிறார்கள் இவர்கள்.

இதனிடையே போட்டியாளர்களில் ஒருவரான எஃப்.ஜே இரு வாரங்களுக்கு முன்பே எவிக்ட் ஆக வேண்டியது, ஆனால் கடைசி நேரத்தில் தப்பித்தார் என்றொரு பேச்சு பிக் பாஸைத் தொடர்ந்து கவனித்து வரும் கூட்டத்தில் கேட்க, அது குறித்தும் கேட்டோம்.

'இது தொடர்பா வெவ்வேறு மாதிரியான தகவல் போயிட்டிருக்கு. அந்த வீட்டுக்குள் இருக்கிறதுலயே லவ் ட்ராக்குக்கு ஏத்தவர் அவர் மட்டுமே. முதல்ல ஆதிரை பிறகு வியானா, மறுபடியும் ஆதிரைனு அவர் தொடர்பான காட்சிகள் கன்டென்ட்ங்கிறதால அவர் நிகழ்ச்சியில் தொடரணும்னுதான் தயாரிப்பு தரப்புல விரும்பறதா சொல்றாங்க. முதல்ல வெளியேறின ஆதிரை வைல்டு கார்டு மூலம் திரும்ப வந்ததும் கன்டென்ட்டுக்காகத்தான்னு சொல்லித் தெரிய வேண்டியதில்லை' என்கின்றனர் சிலர்.

vote for fj advt

'இந்த வாரம் கூட‌ முதல் நாள் ரம்யா வெளியேறிட அடுத்த நாள் வியானா எஃப் ஜே ரெண்டு பேருமே எலிமினேஷன் லிஸ்ட்டுல இருந்ததால் ரெண்டு பேரையும் அனுப்பறதாகவும் முதல்ல முடிவானதா சொல்லப்பட்டுச்சு. அதிகப்படியான போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் இருக்கிறதால மூணு பேர் எவிக்ட் ஆகறதுல எந்த பிரச்னையும் இல்லைனுதான் சொன்னாங்க. ஆனா என்ன நடந்ததோ தெரியல, கடந்த வாரம் போலவே கடைசி நேரத்துல ட்விஸ்ட் நிகழ்ந்து வழக்கம்போல் எஃப் ஜே தப்பிச்சிட்டார். இதுக்குப் பின்னணியில எஃப்.ஜே.வின் தீவிரமான பி.ஆர். ஒர்க் இருக்கறதாகவும் ஒரு பேச்சு இருக்கு.

எஃப்.ஜே. வுடைய குடும்பத்தினர் நிகழ்ச்சி தொடங்குனதுமே 'என் மகனுக்கு ஓட்டு போடுங்க'ன்னு சென்னை அண்ணா சாலையிலேயே விளம்பர போர்டு வச்சிட்டாங்கன்னா பாருங்க' என அதையும் சுட்டிக் காட்டுகிறார்கள் இன்னும் சிலர்.

BB Tamil 9: "பிரஜினை கேம்முக்கு யூஸ் பண்ணிருக்காங்கன்னு எனக்கு தோணுது"- திவ்யா குறித்து சாண்ட்ரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான நாமினேஷனில் சாண்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 70: சண்டை சான்ட்ரா; மகுடி ஊதும் பாரு - இந்த `குட் காம்பினேஷன்' தொடருமா?

‘டாஸ்குகளை நீங்கதான் யோசிச்சு சுவாரசியமா செய்யணும். யாரும் சொல்லித் தர முடியாது’ என்கிறார் ஹோஸ்ட். ஆனால் ஒரு டாஸ்க் முடிந்த பிறகு ‘ஏன் அப்படி செஞ்சீங்க?’ என்று வார இறுதியில் கேட்டு குடாய்கிறார்.கோர்ட்... மேலும் பார்க்க

BB Tamil 9: இந்த வார நாமினேஷனில் இடம் பெற்றவர்கள் யார் யார்? - வெளியான புரொமோ

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறியிருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடந்திருக்கிறது. BB Tami... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 69: ‘கேக்கல... சத்தமா... கேக்கல.. ‘ - பிகில் விஜய்யாக மாறிய விசே

மறுபடியும் அதேதான் ‘இவரே பாம் வைப்பாராம். அப்புறம் இவரே எடுப்பாராம்’ என்கிற மாதிரிதான் பிக் பாஸ் ஷோ போய்க்கொண்டிருக்கிறது. பாரு, கம்ருதீன் போன்ற அடாவடி போட்டியாளர்களின் சேட்டைகளை, அதனால் ஏற்படும் சண்ட... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 9: பிக் பாஸ் வரலாற்றில் முதல் ட்ரிபிள் எவிக்‌ஷன்? - பரபரக்கும் வீக்எண்டு!

விஜய் டிவியில் அறுபது நாள்களைக் கடந்து விட்டது பிக்பாஸ் தமிழ் சீசன் 9. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேருடன் நிகழ்ச்சி தொடங்கிய... மேலும் பார்க்க

BB 9: `ஹவுஸ் மேட்ஸூம், பிக் பாஸூம் தராத பிரைவசியை நான் தரேன்’ - பார்வதி, கம்ருதீனிடம் காட்டமான வி.சே

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 68 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருந்தார்.இதனைத் தொடர்ந்து இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக... மேலும் பார்க்க