செய்திகள் :

Bhagyaraj: `இசையமைப்பாளர் பாக்யராஜ்' - `இது நம்ம ஆளு' டு `ஞானப்பழம்' படம் - சுவாரஸ்ய தகவல்!

post image

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் இன்று மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருடைய மறைவு தமிழ் திரையுலகினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

குடும்பப் பின்னணியைக் கொண்ட அவரின் படங்கள் பலவும் இன்று வரை கிளாசிக்காகக் கொண்டாடப்படுகின்றன.

K Bhagyaraj
K Bhagyaraj

இயக்குநராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவுக்குப் நிறைய ஹிட்களைக் கொடுத்தவர், சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இயக்குநர் மற்றும் நடிகராக இருந்தவர் எப்படி இசையமைப்பாளர் ஆனார் என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

பாக்யராஜ் கதை, திரைக்கதை எழுத, எழுத்தாளர் பாலகுமாரன் இயக்கத்தில் 1988-ல் வெளிவந்தது 'இது நம்ம ஆளு' திரைப்படம். இத்திரைப்படத்திற்கு முன்பு வரை எம்.எஸ்.வி, சங்கர் - கணேஷ், இளையராஜா, கங்கை அமரன் ஆகிய இசையமைப்பாளர்களுடன் பாக்யராஜ் இணைந்து பணியாற்றி வந்தார்.

'இது நம்ம ஆளு' படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்தார் பாக்யராஜ். இளையராஜாவுக்கும் அவருக்கும் ஒரு முறை கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அந்தச் சமயத்தில், இசையைக் கற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டோமே என யோசித்திருக்கிறார் பாக்யராஜ்.

K Bhagyaraj
K Bhagyaraj

பிறகு, பாக்யராஜின் நாடகங்களுக்கு இசையமைத்தவர் மூலம் இசையைப் பின்னர் கற்றுக்கொண்டிருக்கிறார். அதில் நம்பிக்கை கிடைத்ததும்தான் 'இது நம்ம ஆளு' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் பாக்யராஜ். இதனைப் பாக்யராஜே ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

'இது நம்ம ஆளு' படத்தில் இடம்பெற்ற 'நான் ஆளான தாமரை', 'அம்மாடி இதுதான் காதலா' ஆகிய பாடல்கள் பெரியளவில் ஹிட் ஆயின. இந்தப் படத்திற்குப் பிறகு அவரின் 'ஆராரோ ஆரிராரோ', 'பவுனு பவுனுதான்', 'ஞானப்பழம்' ஆகிய படங்களுக்கு அவரே இசையமைத்தார்.

இதயம் முரளி: "தமிழில் நான் முதல் முறையாக ஒப்பந்தமான படம்தான்!" - கயாடு லோஹர்

'டான் பிக்சர்ஸ்' ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் வெளியான படம் 'இதயம் முரளி'. அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தத் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலை... மேலும் பார்க்க

அன்பே டயானா விமர்சனம்: சாதியத்தை உடைக்கும் அன்பான அடாவடி காதல்; காமெடி கைகொடுக்கிறதா?

பெரம்பூரில் வசித்து வரும் சிருமாமில்லா சீதா கிருஷ்ணா (பாரி இளவழகன்) குழந்தைகளுக்கான தடகளப் பயிற்சியாளராக இருக்கிறார். பள்ளிப் பருவத்திலிருந்தே ஆங்கிலோ இந்தியன் பெண்ணான மேஜிக் (ரம்யா ரங்கநாதன்) மீது கி... மேலும் பார்க்க

கருணாஸ் தயாரிப்பில் கென் கருணாஸ்; வெற்றிப்பட இயக்குநருடன் இணையும் கென்! | Exclusive Update

'யூத்' படத்தின் மூலம் இயக்குநராக, ஹீரோவாக கவனம் ஈர்த்தவர் கென் கருணாஸ். அந்தப் படத்தை அடுத்து சத்தமில்லாமல் வெற்றிமாறனின் இயக்கத்தில் 'ராஜன் வகையறா'வில் நடித்து வருகிறார். காதலும், ஃபேமிலி சென்டிமென்ட... மேலும் பார்க்க

காக்க காக்க : காவலின் காதல்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 07

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது`சினி'ஸ்கோப்தொடர்!`சினி'ஸ்கோப் 07காக்க காக்க : காவலின் காதல்!கேங்ஸ்டர் சேது செங்கல்பட்டு ரயில்வே ... மேலும் பார்க்க

அன்பே டயானா: "படத்தின் கடைசி 20 நிமிடம், தமிழ் சினிமாவின் பெஸ்ட்டான..!" இயக்குநர் ராம் பாராட்டு

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'அன்பே டயானா'. இந்தப் படத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த ... மேலும் பார்க்க

Arasan: ஸ்லிமான சிலம்பரசன், ஈ.சி.ஆரில் பிரமாண்ட வடசென்னை செட்; மீண்டும் ரெடியாகும் 'அரசன்'- அப்டேட்

வெற்றிமாறன், சிலம்பரசன் கூட்டணியின் 'அரசன்' படப்பிடிப்பு இன்னும் 60 நாள்கள் மட்டுமே மீதம் இருப்பதாகவும், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு இடையே சிலம்பரசன் அடுத்ததொரு கெட்டப்பிற்கு ரெடியாகிறார் என்றும் தக... மேலும் பார்க்க