செய்திகள் :

Bigg Boss Tamil 9: மீண்டும் டபுள் எவிக்‌ஷன்? வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர் யார்?

post image

விஜய் டிவியில் வி.ஜே. பார்வதி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, உள்ளிட்ட இருபது பேருடன் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் 9 பாதி நாட்களைக் கடந்துவிட்டது.

இருபது பேரில் நந்தினி பிக் பாஸ் வீடு செட் ஆகாததால் முதல் வாரத்திலேயே வெளியேறினார்.

பிரவீன் காந்தி, அப்சரா, துஷார், ஆதிரை, பிரவீன், திவாகர் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் வெளியேறினர். கடந்த வாரம் கெமி வெளியேறினார்.

BB Tamil Season 9
BB Tamil

முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால் நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்தது. எனவே டிவி சைடிலிருந்து அமித் பார்கவ், சாண்ட்ரா, பிரஜின், திவ்யா கணேஷ் ஆகிய நால்வரும் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் நிகழ்ச்சிக்குள் சென்றனர்.

இந்தச் சூழலில் இந்த வார எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் இன்று காலை பிக்பாஸ் செட்டில் தொடங்கியது.

கடந்த வாரத்தில் நடந்தவற்றை விசாரித்த விஜய் சேதுபதி வழக்கம் போல் சிலருக்கும் குட்டும் சிலருக்குப் பாராட்டும் தந்தார்.

பிரஜின், சாண்ட்ரா
பிரஜின், சாண்ட்ரா

மதியத்திற்குப் பின் எவிக்‌ஷனுக்கான நேரம் வந்தது. ரம்யா, கனி, அரோரா, வியானா, சாண்ட்ரா எனப் பலர் எலிமினேஷனுக்கான பட்டியலிலிருந்த நிலையில் ரசிகர்களிடமிருந்து கிடைத்த ஓட்டுகளின் அடிப்படையில் சாண்ட்ரா முதலில் வெளியேற்றப்பட்டதாகத் தெரிய வருகிறது.

ஆனால் தொடர்ந்து இன்னொரு சர்ப்ரைஸையும் பிக்பாஸ் அறிவித்திருப்பதாகக் கூறுகிறார்கள். அது டபுள் எவிக்‌ஷன். இந்த வாரம் இரண்டு பேரை வெளியேற்றும் திட்டம் இருக்கிறதாம்.

சாண்ட்ரா தவிர்த்த அந்த இன்னொருவர் வியானா அல்லது ரம்யா இரண்டு பேரில் ஒருவராக இருக்கலாமெனத் தெரிகிறது.

அதேபோல் இரண்டு பேருமே ஞாயிறு எபிசோடில் வெளியேறி விடுவார்களா அல்லது ஒருவர் மட்டும் நாளை வெளியேற அடுத்தவர் வரும் மிட் வீக்கில் வெளியேறுவாரா என்பதும் சஸ்பென்ஸாகவே இருக்கிறது.

BB Tamil 9: "என்னை மன்னிச்சிடு"- ஆதிரையிடம் மன்னிப்பு கேட்ட FJ

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 65 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக தேர்வாகியிருக்... மேலும் பார்க்க

`உங்க தம்பி கமல்சார்கூட இருக்காரே பரவால்லயா'ன்னு ஆனந்த் கேட்டார் - தவெகவில் சேர்ந்த நடிகர் ஜீவா ரவி

சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல் களத்தில் புதுப்புது என்ட்ரிகள், இடப் பெயர்வுகள் என நாள்தோறும் சம்பவங்களுக்குப் பஞ்சமில்லை.அதிமுகவிலிருந்த கே ஏ செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இண... மேலும் பார்க்க

BB Tamil 9: "நான் இந்த வீட்டில என்ன வேணாலும் பண்ணுவேன்; அதை கேட்க FJ யாரு?"- காட்டமான பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 65 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக தேர்வாகியிருக்... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 65: கம்மு - பாரு ரொமான்ஸ்; ஒட்டுமொத்த வீட்டுக்கும் தண்டனை; ரணகளமான கோர்ட் டாஸ்க்

திவாகர் வெளியேற்றத்துக்கு வினோத் காரணமா? கோர்ட்டில் வந்த முதல் கேஸ் இது. வினோத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. என்றாலும் திவாகரின் வெளியேற்றத்திற்கு வினோத்தும் ஒருவகையில் காரணமாக இருந்தார்.எத்தனை முறை... மேலும் பார்க்க

BB Tamil 9: "என்னையும், FJ-வையும் ஏன் சேர்த்து வச்சு பேசுறீங்க"- வினோத்திடம் சண்டைப்போடும் ஆதிரை

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 64 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக தேர்வாகியிருக்... மேலும் பார்க்க