செய்திகள் :

BRICS: ஒன்றுகூடிய இந்தியா, சீனா, ரஷ்யா; ட்ரம்பிற்கு சொல்லும் Lesson! De Dollarisation புது வடிவிலா?

post image

இந்தியாவின் தலைமையின் கீழ், டெல்லியில் 18-வது பிரிக்ஸ் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோசா உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தியப் பிரதமர் மோடி புதின், மசூத் பெசெஷ்கியான், ஜி ஜின்பிங், ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர் ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரைத் தனிப்பட்ட முறையிலும் சந்தித்தார்.

இந்தப் பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய ஹைலைட்களை முதலில் பார்ப்போம்...
ஜி ஜின்பிங் - மோடி
ஜி ஜின்பிங் - மோடி

> சீன அதிபர் ஜி ஜின்பிங், 2019-ம் ஆண்டிற்குப் பின், கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்திருக்கிறார். கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட இந்திய-சீன மோதலுக்குப் பிறகு, கடந்த ஆண்டு ஷாங்காய் மாநாட்டிற்குச் சீனா சென்றிருந்தார் மோடி.

இந்த ஆண்டு இந்தியா வந்திருக்கிறார் ஜின்பிங்.

இது இரு நாடுகளும் மோதல்களில் இருந்து கொஞ்சம் நகர்ந்து நட்புறவுக்குள் நுழைகிறது என்பதை வருகைகள் காட்டுகிறது.

> தற்போது உலக நாடுகளில் நடந்து வரும் மிக முக்கிய இரண்டு போர்கள் – ஒன்று, ரஷ்யா-உக்ரைன் போர், இன்னொன்று, ஈரான் போர்.

ரஷ்யா, ஈரான் இரண்டுமே பிரிக்ஸின் உறுப்பு நாடுகள். இரு நாட்டு அதிபர்களுமே இந்த மாநாட்டிற்கு வந்திருந்தார்கள். மோடியுடன் தனிப்பட்ட சந்திப்பையுமே மேற்கொண்டார்கள்.

இவர்களுடனான மோடியின் சந்திப்பு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியையும், ஹார்முஸ் நீர்ச்சந்தியில் நின்றுகொண்டிருக்கும் இந்தியக் கப்பல்களுக்கும் வழியை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.

மேலும், இந்தியா எப்போதும் எந்தப் போரிலும் நடுநிலையாகத்தான் இருக்கும். போர் நிறுத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து இந்தியா வலியுறுத்தி வருகிறது. இது தனிப்பட்ட சந்திப்புகளிலும் நிச்சயம் பிரதிபலித்திருக்கும்.

> ஈரான் போரில் ஈரானுக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா இருக்கின்றன என்பது வெளிப்படையாகத் சொல்லாத... ஆனால், எல்லாருக்கும் தெரிந்த உண்மை.

பிரிக்ஸ் மாநாட்டில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் பேசி, சிரித்துக்கொண்ட வீடியோக்கள் வைரலானது.

இது அந்த மூன்று நாடுகளின் நெருக்கத்தைக் காட்டுகிறது.

மோடி
மோடி

> சமீப காலமாக, தொழில்நுட்பம் மற்றும் முக்கிய கனிம வளங்கள் ஆயுதமாக்கப்படுகின்றன. இதைக் கடுமையாக எதிர்த்துப் பேசியிருக்கிறார் மோடி.

> சப்ளை பாதிப்பு, பெருந்தொற்று காலங்களில் பிரிக்ஸ் நாடுகள் ஒன்றுக்கொன்று ஒற்றுமையாக இருக்க வேண்டும்... எப்படி உதவிகரமாக இருக்க வேண்டும் என்பது குறித்து பேசப்பட்டது.

> பிரிக்ஸ் உறுப்பு நாடுகளைத் தவிர, பிற நாடுகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டன.

மொத்தத்தில் பிரிக்ஸ் மாநாடு உலக அளவில் மிக முக்கியமாகப் பார்க்கப்பட்டது.

இந்த மாநாட்டினால் இந்தியாவிற்கு ஏற்பட்ட நன்மைகள்...

> மீண்டும் சீனாவுடனான இந்தியாவின் உறவு ‘ரிப்போர்ட்’க்கு வந்துள்ளது. 50 நிமிடங்களுக்கு மேல் மோடி-ஜின்பிங் சந்திப்பு நீடித்திருக்கிறது. இதுவே உறவு பாசிட்டிவ் ரூட்டில் போவதற்கான நல்ல சாட்சி.

> இந்தியாவிற்கு மேற்கத்திய நாடுகளுடன் நல்ல உறவு இருக்கிறது. அதே வேளையில், ரஷ்யா, சீனா, ஈரான் நாட்டு அதிபர்களையும் பிரிக்ஸ் மாநாட்டின் மூலம் இந்தியா அழைத்து வந்தது இந்தியாவின் நடுநிலையையும், சக்தியையும் காட்டுகிறது.

> மேலே சொன்ன மாதிரி, கனிம வளங்கள், சப்ளை பாதிப்பு போன்றவற்றைப் பற்றி மோடி பேசியிருக்கிறார். இது இந்தியாவின் டெக்னாலஜி, செமிகண்டக்டர், எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி ஆகியவற்றுக்கு உதவியாக இருக்கும்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அலர்ட் மோடில் ட்ரம்ப்

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக ட்ரம்ப் ஆனதும் அவர் டார்கெட் செய்த முக்கிய விஷயங்களில் ஒன்று – பிரிக்ஸ்.

பிரிக்ஸ் நாடுகள் இணைந்து டாலருக்குப் பதிலாகப் புதிய நாணயத்தை உருவாக்க முயற்சிக்கிறது என்று கூறியிருந்தார்.

அமெரிக்காவிற்குப் போட்டியாகப் பிரிக்ஸை ட்ரம்ப் கருதுவது மேலே சொன்னதிலிருந்தே தெரிகிறது.

இன்னொரு பக்கம், அமெரிக்காவின் தீவிர போட்டியாளர்கள் ரஷ்யா மற்றும் சீனா. அமெரிக்கத் தொழிற்சாலைகள் இந்தியாவில் தொடங்கப்படுகின்றன என்று இந்தியாவையும் போட்டியாகப் பார்க்கிறார் ட்ரம்ப்.

ஆக, இந்த மூன்று நாடுகளும் வேறுபாடுகளைக் களைந்து ஒரு நேர்கோட்டிற்கு வந்துள்ளன. இவை தொழில்நுட்பம் முதல் அரசாங்கம் வரை பல்வேறு தளங்களில் இணைந்து செயல்பட்டால் நிச்சயம் அமெரிக்காவிற்குப் போட்டியாக அமையும்.

முக்கியமாக, பிரிக்ஸ் மாநாட்டில் புதின் வார்த்தைகளை நிச்சயம் கவனித்தே ஆக வேண்டும் – கடந்த 5 ஆண்டுகளில், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 40 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்கைப் பிரிக்ஸ் நாடுகளே உருவாக்கியுள்ளன.

ஆனால், ‘ஜி7’ (G7) அல்லது ‘க்ரேட் 7’ என அவர்களை ஏன் அப்படி அழைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அந்த நாடுகளின் பங்களிப்போ வெறும் 29 சதவிகிதமாக மட்டுமே உள்ளது.

அதே காலகட்டத்தில் உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியைப் பார்த்தோமேயானால், அதில் பாதியளவிற்கும் அதிகமான வளர்ச்சிக்குப் பிரிக்ஸ் நாடுகளே காரணமாக இருந்துள்ளன. அதேவேளையில் ஜி7 நாடுகளின் பங்களிப்பு வெறும் 18 சதவீதம் மட்டுமே.

ஏன் இந்த நிலை? காரணம் மிகவும் எளிது. உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேலாக பிரிக்ஸ் நாடுகளில்தான் வாழ்கிறார்கள்.

அதனால்தான், பிரிக்ஸ் நாடுகள் அளப்பரிய ஆற்றலும் துடிப்பும் கொண்ட உள்நாட்டுச் சந்தைகளைக் கொண்டுள்ளன" என்று பேசியிருந்தார்.

ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் புதின்

ஆக, பிரிக்ஸ் நாடுகளுக்குள்ளேயே நல்ல சப்ளை செயின், உற்பத்தித் திறன், சந்தைகள் ஆகியவை உள்ளன. இதனால், இவற்றைத் தாண்டி, ட்ரம்ப் விதிக்கும் வரிகளுக்கு இவர்கள் கட்டுப்பட வேண்டும் என்பது ஆகாது.

மேலும், ட்ரம்ப் பயந்த ‘டீ-டாலரைசேஷன்’. இது நேரடியாக நடக்கவில்லை என்றாலும், அமெரிக்க டாலரை ஏதோ வகையில் பாதிக்கும் ஒரு முன்னெடுப்பை எடுத்துள்ளது பிரிக்ஸ்.

பிரிக்ஸ் நாடுகளிடம் இருக்கும் டிஜிட்டல் பேமென்ட் வசதிகளை எல்லைகளைத் தாண்டியும் பயன்படுத்தி, பணப் பரிமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

எதற்கெடுத்தாலும் அமெரிக்க டாலர் என்று ஓடாமல், அந்தந்த நாடுகளின் நாணயங்களிலேயே பரிவர்த்தனை செய்யலாம் என்றும் முடிவு எடுத்துள்ளன பிரிக்ஸ் நாடுகள்.

இந்தியா, ரஷ்யா, சீனா நட்பு, டாலரை ஓரங்கட்டும் முன்னெடுப்புகள் ஆகியவை நிச்சயம் ட்ரம்ப்பை ‘அலர்ட்’ மோடிற்குள் இந்நேரம் தள்ளியிருக்கும்.

UPI பரிவர்த்தனைகளுக்கு ரூ.2,000 வரை 'நோ' கட்டணம் - மத்திய அரசு விளக்கம்; அதற்கு மேல்?

காசு, பணத்தையெல்லாம் மறந்து, டிஜிட்டல் பேமென்ட்டுக்கு பெரும்பான்மையான இந்தியர்கள் மாறி பல காலமாகிவிட்டது.இந்த நேரத்தில், யுபிஐ பேமென்ட்டுகளுக்குக் கட்டணம் என்கிற பேச்சு எழுந்து, இந்திய மக்களிடம் ஒரு ‘... மேலும் பார்க்க

`விஜய் சேதுபதியின் விமர்சனத்திற்கு பதில் சொல்ல தேவையில்லை; பார்வையாளர்களைக் கவர...'- அமைச்சர் சம்பத்

கோவை மாநகராட்சி வ.உ.சி. மைதானம் அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இதனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார்... மேலும் பார்க்க

தாராபுரம் இடைத்தேர்தல்: வரிசை கட்டும் பெண் வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் பிரசாரக் களம்!

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் தாராபுரம் தனி தொகுதியி... மேலும் பார்க்க

"சினிமாவில் நடித்தவர் இப்போது மக்கள் முன் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்"- விஜய் குறித்து டிடிவி

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் இன்று (செப்.15) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.அதற்கு பதிலளித்த... மேலும் பார்க்க

'கணக்கு போட்டு காத்திருக்கும் கழகங்கள்!' - இடைத்தேர்தலில் பாமக-வின் ஆதரவு யாருக்கு?

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. பெரிய கட்சிகள் அத்தனையும் தங்களின் நிலைப்பாட்டை அறிவித்துவிட்ட நிலையில், பாமக இன்னும் அமைதி காக்கிறது. நிலை... மேலும் பார்க்க

ஈரோடு: பேரறிஞர் அண்ணா 'விடுதலை' ஆசிரியராகப் பணியாற்றியபோது... குடும்பத்துடன் வாழ்ந்த இல்லம் | Photos

ஈரோட்டில் அறிஞர் அண்ணா பயன்படுத்திய பொருட்கள்ஈரோட்டில் அறிஞர் அண்ணா பயன்படுத்திய பொருட்கள்ஈரோட்டில் அறிஞர் அண்ணா பயன்படுத்திய பொருட்கள்ஈரோட்டில் அறிஞர் அண்ணா பயன்படுத்திய பொருட்கள்ஈரோட்டில் அறிஞர் அண்... மேலும் பார்க்க