'ஆபத்தை சமாளிக்க...' - ஆதரவுக் கட்சி எம்.எல்.ஏக்களை சந்திக்கும் முதல்வர் விஜய்! ...
"CEO ஆக ஜென்சன் தொடர்வதே Nvidia-க்கும், அமெரிக்காவிற்கும் நல்லது.!" - ட்ரம்ப்
என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் சீன உளவாளி பெண் மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் என்கிற குற்றச்சாட்டு சமீபத்தில் எழுந்தது.
இந்தக் குற்றச்சாட்டை ஜென்சன் ஒப்புக்கொண்டு, அதற்குப் பொறுப்பேற்றுத் தன்னுடைய பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார்.
ஜென்சன் அறிவிப்பு
தற்போது என்விடியா நிறுவனம் தங்களுடைய நிரந்தரத் தலைமைச் செயல் அதிகாரியைத் தேடி வருகிறது.
ஆனாலும், என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்புக்கு ஜென்சனே தகுதியானவர்... அவரே அந்தப் பொறுப்பில் தொடர வேண்டும் என்கிற பேச்சும் தொடர்ந்து அமெரிக்காவில் எழுந்து வருகிறது.

இதையடுத்து ஜென்சன், ‘நிறுவனம் விரும்பினால் தலைமைச் செயல் அதிகாரியாகத் தொடரத் தயார்’ என்று அறிவித்தார்.
ஆனால், இதை என்விடியா நிறுவனம் விரும்பவில்லை. ஜென்சன் கூறியதை முற்றிலும் நிராகரித்துவிட்டது என்விடியா நிறுவனம்.
ட்ரம்ப் பதிவு
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்போது தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில், “என்விடியா நிறுவனத்தின் நிர்வாகக் குழு, ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் பணியில் அமர்த்தும் என நான் நம்புகிறேன்.
அது அந்த நிறுவனத்திற்கும், அதேபோல அமெரிக்காவிற்கும் மிகச்சிறந்த விஷயமாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.





















