ChatGPT-யை கேட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா? - நிபுணர் விளக்கம்
ChatGPT-யை கேட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா? - நிபுணர் விளக்கம்
சாப்பாட்டில் எவ்வளவு உப்பு போட வேண்டும்... என்ன படிக்கலாம்... எங்கே டிரிப் போகலாம்... இந்த டிரெஸ்ஸிற்கு என்ன மேட்சாக போடலாம்... - இப்படி சின்ன, பெரிய சந்தேகங்கள் அனைத்திற்கும், இப்போது 'ChatGPT' தான் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறது.
இது இன்னும் ஒருபடி மேலே போய், நம் மக்கள் முதலீட்டு ஆலோசனைகளுக்கும் சாட் ஜிபிடியை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
அது சரியா... தவறா என்பதை காரணத்துடன் விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் நாகராஜன்.

"ஒரு நபர் ChatGPT-யிடம், 'இந்தப் பங்கில் முதலீடு செய்யலாமா?' எனக் கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.
அது அதற்கு, 'இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம்... ஆனால், நான் அதை பரிந்துரைக்கமாட்டேன். அந்தப் பங்கில் முதலீடு செய்யாமல் இருந்தாலும் நல்லது' என்பது போல நழுவலாக தான் பதில் சொல்லும்.
ஆனால், நம் மக்கள் இதை புரிந்துகொள்ளாமல் சாட் ஜிபிடி சொன்ன பங்கில் முதலீடு செய்வார்கள்.
உண்மையில், பங்குச்சந்தை தரவுகளை சாட் ஜிபிடி மாதிரியான ஏ.ஐ டூல்களில் ஆராய... பகுப்பாய்வு செய்யவே தனியாக படிக்க வேண்டும்.
அடுத்ததாக, ஏ.ஐயிடம் நமக்கு இருக்கும் சந்தேகத்தை எந்தக் கேள்வியாக கேட்க வேண்டும் என்கிற புரிதல் இருக்க வேண்டும்.
அது இருந்தால் தான், சாட் ஜிபிடியிடம் ஆலோசனை கேட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். ஆனால், அதிலும் மிகுந்த கவனம் வேண்டும்".
முழுமையான தகவல் கீழே உள்ள வீடியோவில்...




















