செய்திகள் :

Chef Damu: உடல்நலக் குறைவால் 72 வயதில் செஃப் தாமு காலமானார்

post image

தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் நமக்கு அறிமுகமானவர் செஃப் தாமு.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழ்நாடு மக்களுக்கு ‘தாமு அப்பா’வாக மாறினார்.

இவர் இன்று உடல்நலக் குறைவால் தன்னுடைய 72 வயதில் காலமானார்.

ஜெயா டிவி, ஸ்டார் விஜய் எனத் தொடங்கிய இவரது திரை சமையல் பயணம் யூடியூப் பயணம் வரை நீண்டது.

2024-ம் ஆண்டு கேட்டரிங் பிசினஸ் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தார்.

செஃப் தாமு
செஃப் தாமு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முடிந்த குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியில் நடுவராகக் கலந்துகொண்டிருந்தார்.

2025-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கிச் சிறப்பித்தது.

2010-ம் ஆண்டு ‘தனிநபரின் மிக நீண்ட சமையல் மராத்தான்’ என்கிற கின்னஸ் சாதனையையும் பெற்றிருக்கிறார்.

கடந்த மாதமே, உடல்நலக் குறைவால் இவர் இறந்துவிட்டதாகத் தகவல்கள் பரவின. இதற்கு வீடியோ வெளியிட்டு விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.