செய்திகள் :

Chennai Rain : 'வானிலை மையம் எச்சரித்தது; ஆனாலும் இவ்வளவு பெரிய மழையை எதிர்பார்க்கவில்லை!' - ஆணையர்

post image

சென்னையில் அதிகனமழை பொழிந்திருக்கிறது. வடசென்னை, தாம்பரம், கிளாம்பாக்கம் போன்ற பகுதிகளை மழைவெள்ளம் சூழ்ந்திருக்கிறது. இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநிலக் கட்டுப்பாட்டு அறையில் மாநகராட்சி ஆணையர் சமீரன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.

சமீரன்
சமீரன்

ஆணையர் சமீரன் பேசியதாவது, 'வழக்கமாக வடகிழக்கு பருவமழைக் காலத்தில் சராசரியாக 70 செ.மீ மழைதான் பெய்யும். ஆனால், நேற்று மாலை முதல் இரவு வரை மட்டும் 35.8 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை கனமழை இருக்குமென வானிலை மையம் எச்சரித்திருந்தது.

ஆனாலும் இவ்வளவு பெரிய மழையை எதிர்பார்க்கவில்லை. சூப்பர் எல் நினோவால் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் பகுதிகளில் அதிக பாதிப்பு இருக்கும் என்கிறார்கள். நேற்று திருவொற்றியூர், மணலி, பாரிஸ், என்.எஸ்.சி.போஸ் ரோடு போன்ற பகுதிகளில் அதிக மழை பெய்திருக்கிறது. முதல்வர் விஜய் ஒவ்வொரு மணி நேரமும் அப்டேட் கேட்டுக் கொண்டே இருக்கிறார். சமூகவலைதளங்களிலும் ஊடகங்களிலும் வரும் தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

சமீரன்
சமீரன்

அமைச்சர்களும் களத்தில் இருக்கின்றனர். 15000 மாநகராட்சி ஊழியர்கள் உட்பட அதிகாரிகளும் தயாராக களத்தில் இருக்கிறோம். முதற்கட்டமாக வேளச்சேரிக்கு படகோடு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை அனுப்பி வைத்திருக்கிறோம். நீர் தேங்கியிருக்கும் சாலைகளில் இரவுக்குள் பணிகளை செய்து காலையில் மக்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும். பழைய கட்டடங்களில் இருக்கும் மக்கள் அரசின் தற்காலிக முகாம்களுக்கு சென்று தங்க வேண்டும். இளைஞர்களும் சிறுவர்களும் நீர் தேங்கியிருக்கும் பகுதிகளுக்கு வீடியோ எடுக்க செல்ல வேண்டாம்' என்றார்.

Chennai Rain : 'வரலாறு காணாத மழை!' - சென்னையில் அதிக மழை கொட்டித்தீர்த்த டாப் 10 இடங்கள்!

நேற்று மாலை முதல் சென்னையில் அதிகனமழை பொழிந்திருந்தது. குறிப்பாக, வடசென்னை பகுதிகளில் குறுகிய நேரத்தில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிக கனமழை பொழிந்திருக்கிறது. இந்நிலையில், சென்னையின் கடந்த 24 மணி ... மேலும் பார்க்க

கொல்கத்தா: கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி; துர்கா பூஜையில் நேர்ந்த சோகம்!

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் துா்கா பூஜை பந்தலில் நேற்றிரவு ( அக்.17) இரவு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 19 போ் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 25 போ் காயமடைந்திருக்கின்றனர். வடக்கு கொல்கத்தாவில் உள்ள... மேலும் பார்க்க

Chennai Rain: 'முதல்வர் விஜய் ஒவ்வொரு மணி நேரமும் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கிறார்!- அமைச்சர் ஆதவ்!

சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. குறிப்பாக, வடசென்னையில் குறுகிய நேரத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சென்னை ரிப்பன் பில்டி... மேலும் பார்க்க

'அனுமதியின்றி அதிகாலை காட்சிகள்; விதிகளை மீறும் தியேட்டர்கள்!' - கண்டுகொள்ளாத தவெக அரசு?

தமிழகத்தில் புதிய படம் வெளியான முதல் ஒரு வாரத்திற்கும் அரசு விடுமுறை நாட்களிலும் திரையரங்குகளில் 9 மணி காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குக... மேலும் பார்க்க

"EVM வேண்டாம்; வாக்குச்சீட்டு முறை வேண்டும்" - காங்கிரஸ், தவெகவிற்கு கண்டனங்கள் - திமுக தீர்மானங்கள்

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்கள்...> எஸ்.ஐ.ஆர் முழுமையாக ர... மேலும் பார்க்க

திருச்சி: "விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்!" - தொல்.திருமாவளவன் கோரிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவு த... மேலும் பார்க்க