செய்திகள் :

CJP Protest: `நாம் சாதித்து விட்டோம்!' - தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து அபிஜீத் திப்கே

post image

மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, சி.ஜே.பி (CJP) அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே வரவேற்று பேசியிருக்கிறார்.

தர்மேந்திர பிரதான்

இது குறித்து அவர் கூறுகையில், "நாங்கள் சாதித்துவிட்டோம். ஜனநாயகத்தின் வெற்றி இது. உலகம் தானாக தலைகுனியாது; தலைகுனிய வைக்கத் தெரிந்திருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டங்களுக்கு மத்தியில் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

CJP அபிஜித் தீப்கே
CJP அபிஜித் தீப்கே

இந்த ராஜினாமாவை, மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த முக்கிய வெற்றியாக சி.ஜே.பி அமைப்பு பார்க்கிறது. மேலும், கல்வித் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் அவசியம் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்துகிறது. அது தொடர்பாக மத்திய அரசுடன் சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க