செய்திகள் :

மு.க.அழகிரி மகள் கயல்விழி மீது எஸ்.பி.ஐ வங்கி மேலாளர் காவல்துறையில் தாக்குதல் புகார் - பின்னணி என்ன?

post image

சென்னை அடையாறு எஸ்.பி.ஐ என்.ஆர்.ஐ கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங் மீது கட்டட உரிமையாளரான கயல்விழி அழகிரி தாக்குதல் நடத்தியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ ரீஜினல் பிசினஸ் ஆபீஸ் (RBO-II) தலைமை மேலாளர் நமச்சிவாயம் கடந்த ஜூலை 21-ஆம் தேதி அளித்துள்ள புகாரில் இந்தக் குற்றச்சாட்டு இடம்பெற்றுள்ளது.

புகாரின்படி, அடையாறு எஸ்.பி.ஐ என்.ஆர்.ஐ கிளை செயல்பட்டு வரும் கட்டடத்தில் உள்ள லிஃப்ட் பழுதடைந்திருந்ததாகவும், அதை சரிசெய்யுமாறு கட்டட உரிமையாளர் கயல்விழி அழகிரியின் பிரதிநிதியை பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் பதில் கிடைக்காததால், கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங் நேரடியாக கயல்விழி அழகிரியிடம் தகவல் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கயல்விழி அழகிரி, வங்கிக் கிளைக்கு நேரில் வந்து கிளை மேலாளரை ஆபாசமாக திட்டியதுடன், அவரை தாக்கி, மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி.ஐ தரப்பில் போலீஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

`என் மகனைப் பற்றிய செய்திகளை தவிர்க்கிறேன்; ரத்த அழுத்தம்.! ' - CJP தலைவர் அபிஜித் திப்கே பெற்றோர்

டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி சார்பாக, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்திற்கு காக்ரோச் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் திப்கே தலைமை ஏற்று நடத்தி வருகிறார்... மேலும் பார்க்க

`நாங்கள் சேர்ந்துதான் வாழ்வோம், பிரிக்க முடியாது' - ஒரே வாலிபரை திருமணம்செய்து கொண்ட 3 சகோதரிகள்

ஒன்றாக இரட்டையர்களாக பிறந்த இரண்டு சகோதரிகள் ஒரு வாலிபரை திருமணம் செய்துகொள்வதை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஒன்றுக்கு மேற்பட்டவரை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ள சட்டம் அனுமதிக்காவிட்டாலும், இது போ... மேலும் பார்க்க

CJP: `யார் அனுப்புறாங்கனு தெரியல; ஆனா குவியுது' - ஆன்லைன் ஆர்டர் மூலம் போராட்டகளத்தில் குவியும் உணவு

டெல்லியில் நீட் தேர்வு மோசடி, கல்வி சீர்திருத்தம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் அதிக அளவில் மாணவர்கள் மத்... மேலும் பார்க்க

`18 வயதைக் கடந்த திருமணமாகாத மகளின் படிப்பு செலவை ஏற்பது தந்தையின் கடமை' - கர்நாடகா உயர் நீதிமன்றம்

கணவன் மனைவி இடையே விவாகரத்து ஏற்பட்டுவிட்டால் மனைவியுடன் இருக்கும் குழந்தைகள் 18 வயதை கடக்கும் வரை அவர்களின் படிப்பு செலவை ஏற்பது தந்தையின் கடமையாகும். கர்நாடகா மாநிலம், மங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு - பெற்றோர் அதிர்ச்சி!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள ரகுராமபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்திற்கு 20 குழந்தைகள் தினம் தோறும் வருவது வழக்கம். இங்கு சொர்ணமாரி எ... மேலும் பார்க்க