செய்திகள் :

Congress: மாணிக்கம் தாகூர் தலைவராக நியமனம்; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அதிரடி மாற்றம்!

post image

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன் செல்வப்பெருந்தகை அப்பொறுப்பில் இருந்தார். அவர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகக் கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார்.

முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை
முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை

அதன் பிறகு, 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல் என இரண்டு தேர்தல்களைக் காங்கிரஸ் கட்சி, தி.மு.க-வுடனான கூட்டணியில் சந்தித்தது.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 9 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் 5 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி, த.வெ.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நிபந்தனையுடன் ஆதரவளித்தது. பிறகு, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களான ராஜேஷ்குமாரும் விஸ்வநாதனும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

Press Release - Manickam Tagore Appointment
Press Release - Manickam Tagore Appointment

தேர்தலுக்கு முன்பிருந்தே, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார் எனப் பேசப்பட்டு வந்தது. கூடிய விரைவில் புதிய தலைவர் பற்றிய அறிவிப்பு வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அதுகுறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மாணிக்கம் தாகூர் புதிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

த.வெ.க-வில் இணைந்தார் மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன், தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்துள்ளார். தமிழக மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் முன்னிலையில் அவர் கட்ச... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம்: `ஆணி லத்தி... கற்கள் நிரம்பிய லாரி' - டெல்லி நீதிமன்றத்தில் பரபரத்த வாதம்!

காக்ரோச் ஜனதா கட்சி முன்னெடுத்த போராட்டம் தற்போது மாணவர்கள் போராட்டமாக மாறியிருக்கிறது. மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீர் தேர்வால் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு... மேலும் பார்க்க

``முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம்" - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இது தொடர்... மேலும் பார்க்க

`பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறேன்; ஆனால்...' - அண்ணாமலை கருத்து!

நீர் தேர்வு வினாத் தாள் கசிவு, அரசுத் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தைக் கலைக்க பா.ஜ.க அரசு மாணவர்கள்... மேலும் பார்க்க

Exclusive | “அண்ணா ஹசாரே போராட்டத்தை அரசியலாக்கியது ஆம் ஆத்மிதான்" – மாணிக்கம் தாகூர் எம்.பி பதிலடி

தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர்கள் – இளைஞர்களின் போராட்டம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தாண்டி, தேசிய அளவிலான கல்விக் கொள்கை விவாதமாக மாறி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் ... மேலும் பார்க்க