கோவளம்: நிழலும் நிஜமும்... - அதிகாலையில் மீன்களை வேட்டையாட காத்திருக்கும் பறவைகள...
Delimitation: "திமுக கேட்டது மசோதாவில் இடம்பெற்றுவிட்டது" - அமித் ஷாவைச் சந்தித்த கனிமொழி
மத்தியில் பாஜக அரசு நாளை (நவம்பர் 30) கூடும் நாடாளுமன்றச் சிறப்பு அமர்வில் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டுவர உள்ளது.
இந்த மசோதாவிற்கு ஆதரவை வழங்கியுள்ளது திமுக.
அமித் ஷாவைச் சந்தித்த கனிமொழி
தொகுதி மறுவரையறை குறித்து பேசத் தொடங்கியதில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்த திமுக, இப்போது அதே மசோதா திருத்தப்பட்ட பிறகு ஆதரவு வழங்கியுள்ளது.
முன்பு மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து மாநிலங்களுக்குமே 1971-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் 50 சதவீத தொகுதி உயர்வு...

அடுத்த 25 ஆண்டுகளுக்கு மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை இல்லை என்கிற நிலைப்பாட்டை எடுத்துள்ளது மத்தியில் ஆளும் பாஜக அரசு.
இதற்குத்தான் ஆதரவு வழங்கியுள்ளது திமுக. திமுகவின் ஆதரவிற்குப் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், நேற்று (நவம்பர் 28) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.
கனிமொழி பேச்சு
இந்தச் சந்திப்பிற்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
ஏனென்றால், கடந்த முறை நாடாளுமன்றத்தில் நாங்கள் பேசியபோதும் சரி, அதற்கு முன்பாக 2024-ல் திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியபோதும் சரி, திமுக அந்த மசோதாவில் எதைக் கேட்டதோ, அதை இன்றைக்கு மசோதாவின் ஒரு பகுதியாக மாற்றிவிட்டார்கள்.
திமுக வலியுறுத்திய அனைத்தும் இன்றைக்கு மசோதாவில் இடம்பெற்றுள்ளன. அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறைக்குத் தடை இருக்க வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்தியிருந்தோம்.
ஆக, அதுவும் மசோதாவில் இருக்கிறது... நாங்கள் எதை விரும்பினோமோ, அது எங்களுக்குக் கிடைத்துவிட்டது” என்று கூறியிருக்கிறார்.










