Bigg Boss 10: பிக்பாஸ் தந்த அதிரடி ட்விஸ்ட்! - இந்த வாரம் எவிக்ஷனில் நடந்தது என்...
Bigg Boss 10: பிக்பாஸ் தந்த அதிரடி ட்விஸ்ட்! - இந்த வாரம் எவிக்ஷனில் நடந்தது என்ன?
விஜய் டிவியில் பிக்பாஸ் சிசன் 10 கிளைமேக்ஸை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 19 போட்டியாளர்களுடன் செப்டம்பர் முதல் வாரம் தொடங்கிய நிகழ்ச்சியில் அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் வெளியேறிய போட்டியாளர்கள் போக, தற்போது எட்டு பேர் மிச்சமிருக்கிறார்கள்.
இறுதிச் சுற்றுக்கு யார் யார் வருவார்கள், டைட்டில் வாய்ப்பு யாருக்கு என்றெல்லாம் சமூக ஊடகங்களில் விவாதங்கள் பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கின்றன.
பத்தாவது ஆண்டு ஸ்பெஷல் என்பதால் இந்த சீசனில் பொது மக்களில் சிலரும் போட்டியாளராகச் செல்லலாம் என ‘பிக்பாஸ் தி காமன் மேன்’ என ஒரு ஷோவை வைத்து அதன் மூலம் சிலரை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தனர். அப்படிச் சென்றவர்களில் முனியம்மா சிறப்பாக ஆடி இப்போது வரை நிகழ்ச்சியில் தொடர்ந்து வருகிறார்.
தற்போது களத்திலிருக்கும் போட்டியாளர்களுக்கு ஆதரவாக அவரது நண்பர்கள் ஒவ்வொரு வாரமும் தீவிரமாக வாக்கு கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய் சேதுபதி கலந்து கொள்ளும் வழக்கமான வார இறுதி எபிசோடுக்கான ஷூட்டிங் இன்று பிக்பாஸ் செட்டில் நடந்தது.
முற்பகலில் வழக்கமான விசாரிப்புகள். பிறகு எலிமினேஷனுக்கான நேரம் வந்தது. வாசன், தன்யா உள்ளிட்டோர் வெளியேறுவதற்கான நாமினேஷன் பட்டியலில் இருந்த நிலையில் பிக்பாஸ் யாரும் எதிர்பாராத அதிரடியாக எவிக்ஷன் இல்லை என அறிவித்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டார்.
நிகழ்ச்சி முடிய இன்னும் சில தினங்களே இருப்பதால் போட்டியாளர்களைப் போலவே பிக்பாஸ் ரசிகர்களிடமும் ஒருவித ஆர்வமும் எதிர்பார்ப்பும் தொற்றிக் கொண்டுள்ளது.














