செய்திகள் :

திருப்பரங்குன்றம் தூணில் வைக்கபட்ட கொப்பரை; 5 மணிக்கு ஏற்றபட போகும் தீபம்... வெளியேறிய காவல்துறை!

post image

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் தீபமேற்ற வேண்டும், மலை முழுவதும் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என நேற்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் இன்று 300 க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் திருப்பரங்குன்ற மலை முழுவதையும் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து தமிழக காவல்துறையினர் மலையிலிருந்து வெளியேறி உள்ளனர்.

இதனிடையே திருப்பரங்குன்ற கோயில் நிர்வாகம், மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் " தீபமேற்றும் போது திருக்கோயில் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் உரிய அனுமதி பெற்ற 50 பக்தர்கள் அடங்கிய குழுவினர் மட்டுமே மலை ஏற அனுமதிக்கபடுவார்கள்" என தெரிவித்திருந்தனர். இதனால்  அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்பினர் திருப்பரங்குன்ற நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தபட்டனர்.

கூடியிருந்தவர்கள் தங்களை அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தும் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அனுமதிக்க மறுத்து விட்டனர்.

தொடர்ந்து 3 மணியளவில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் வைத்தியநாதன், மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையர் ஆகியோர் மலையடிவாரத்திற்கு வந்து தூணில் தீபமேற்றுவதற்காக சென்றுள்ளனர்.

தீபமேறுவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இதற்காக 20 லிட்டர் நெய், 3 மணல் கனயம் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டுள்ளன. விளக்கு ஏற்றுவதற்கு 6 தீப மிராசுகள் திருவண்ணாமலையில் இருந்து வருகை தந்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி

தற்போது தூணில் கொப்பரை வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாலை 5 மணியளவில் தீபம்  ஏற்றப்பட உள்ளது. இதைக் காண்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் திருப்பரங்குன்ற நுழைவு வாயிலில் காத்திருக்கின்றனர்.

`திமுக ஆதரவு; பாஜகவின் நிரந்தரப் பெரும்பான்மைவாத அரசுக்கு உதவியதாகவே பொருள்' - விளக்கும் ரவிக்குமார்

விழுப்புரம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளராகவும் உள்ள ரவிக்குமார் எம்.பி, தொகுதி மறுவரையறை குறித்து விளக்கமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார... மேலும் பார்க்க

Delimitation: ``திமுகவின் இந்த இரட்டை துரோகத்தை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது" - அமைச்சர் வன்னி அரசு

மத்திய அரசு கொண்டுவரும் தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது. இதற்கு திமுக-வின் முன்னாள் கூட்டணிக் கட்சியான விசிக கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக விசிக-வின் தலைவர் தி... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: `` தேன் கலந்த விஷ உருண்டை; பாஜக பொறியில் திமுக சிக்கிவிடக் கூடாது" - கி.வீரமணி

நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது. திமுகவின் இந்த ஆதரவிற்கு திராவ... மேலும் பார்க்க

"என் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள்" - கேட்கிறார் அமைச்சர் விஜய் பாலாஜி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஆகியோர் தலைமையில் அரசு திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்த... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை:``உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விட திமுக-வின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது" - திருமாவளவன்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் அமைதிப் பேரணி நடத்தியது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்... மேலும் பார்க்க