செய்திகள் :

Delimitation: "உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.!" - ஆதரவு குறித்து ஸ்டாலின்

post image

நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது.

திமுகவின் இந்த ஆதரவிற்கு விசிக தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில், " FairDelimitation கோரிக்கைகளை ஏற்ற சட்டமுன்வரைவிற்குத் தி.மு.க. ஆதரவு

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

கடந்த ஏப்ரல் மாதம் எந்தக் காரணங்களுக்காக Delimitation சட்டமுன்வரைவை எதிர்த்தோமோ, அந்த இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாகப் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன.

இது, 2024-ஆம் ஆண்டுமுதல் தி.மு.கழகம் மேற்கொண்ட தொடர் போராட்டங்களுக்கான வெற்றி! தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்துக்குமான வெற்றி!

1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் உயர்வு எனும் இந்த DelimitationBill-ஐத் தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் - திமுக

அதையெல்லாம் தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்குச் சாத்தியமானதில் நமக்குச் சாதகமான இந்த வடிவிலேயே Delimitation நடந்திடத் தி.மு.கழகம் ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

தொகுதி மறுவரையறை: திமுக எம்பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் என்னென்ன?

நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது. இதற்கான எம்.பி-க்கள் ஆலோசனைக் ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: ``இதை இவ்வளவுதூரம் கொண்டுவந்திருக்க தேவையில்லை.!" - சீமான்

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகவும், எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது தொடர்பாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``எம்.எல்.ஏ கைது நடவடிக்கைய... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை : திமுக ஓகே; இன்னும 7 உறுப்பினர்கள் தேவை... நாடாளுமன்ற எண்களும் பாஜக கணக்கும்!

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கொண்டு வர இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஏற்கனவே இம்மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியைத் தழுவிய... மேலும் பார்க்க

Delimitation: `` யாருக்கு அதிக அதிகாரம்? என்பதுதான் அடிப்படையான கேள்வி" - எம்.பி ஜோதிமணி

தொகுதிமறுவரையறை இந்தியாவின் அரசியல் மற்றும் கூட்டாட்சிக் கட்டமைப்பின் அதிகாரச் சமநிலையையே மாற்றியமைக்க முயற்சிக்கும் ஒரு அடிப்படையான நடவடிக்கை என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்திருக்கிறார். இது தொட... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "உலகம் முழுவதும் பிரபலமடைந்துவிட்டது தவெக அரசு" – தமிழிசை சௌந்தரராஜன்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை எதிர்த்துத் தடுக்க முயன்றதால், இன்று தீபம் ஏற்றுவதை உலகமே பார்க்கப்போகிறது என்று தவெக அரசை விமர்சித்து பேசியிருக்கிறார் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜ... மேலும் பார்க்க

'உணர்ச்சிவசப்படாமல் ஒரு முடிவு!' - Delimitation ஆதரவு குறித்து ஸ்டாலின் என்ன பேசினார்?

மத்திய பாஜக அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக அறிவித்திருக்கிறது. இதுசம்பந்தமாக நடந்த திமுக எம்.பிக்களின் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், உணர்ச்சிவசப்படாம... மேலும் பார்க்க