திருப்பரங்குன்றம்: ``இதை இவ்வளவுதூரம் கொண்டுவந்திருக்க தேவையில்லை.!" - சீமான்
`திடீர் முருக பக்தர்களாகக்காட்டிக் கொள்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.!" - கார்த்தி சிதம்பரம்
கார்த்திகை திருநாளை முன்னிட்டு கடந்த 24ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் ஒருமுறை மட்டும் வழக்கமாக தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியது.
ஆனால், அந்த உத்தரவின்படி தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் மாலை தீபம் ஏற்றப்பட்டது. இதனையடுத்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை அமல்படுத்தவில்லை, எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பி. பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (நவ. 27) விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைக்க உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் இன்று (நவ. 28) மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், முருகப்பெருமானின் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்துகளுக்கு எதிரான அரசு இருக்கிறது எனவும் சமூக ஊடகங்களில் பா.ஜ.க-வினர் பரப்பிவருகின்றனர்.
இது குறித்து காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தன் எக்ஸ் பக்கத்தில், `` தமிழ்நாட்டில் மதச் சுதந்திரம் இல்லை என்று குறிப்பாக வட இந்தியாவில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது. உள்நோக்கத்துடன் செயல்படும், சிலருக்கு ஆதரவான ஊடகங்களால் இந்தத் தவறான கருத்து பெரிதுபடுத்தப்பட்டுள்ளது. உண்மையில், தமிழ்நாட்டில் முழுமையான மதச் சுதந்திரம் உள்ளது. காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் அனைத்துப் பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் இங்கு முறையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன.
The spin, particularly, in North India that there is no religious freedom in Tamil Nadu is completely erroneous. This narrative has been magnified by certain motivated & pliant media outlets too. There is absolute religious freedom in TN. All time honoured traditions, customs & rituals are being followed. For those who are suddenly portraying themselves as ardent devotees of Lord Muruga ( Kartikeya, Subramaniya, Skanda, Shanmuga, Kumara, Guha, Arumuga, Vela, Senthil, Swaminatha, Dhandapani etc) every festival in his honour be it Karthigaideepam, Thai Poosam, Shashti, Panguni Uthiram, Vaiksai Visakam etc are celebrated widely without any hindrance or interference. As far as Karthigaideepam was concerned lamps were lit in all temples where it’s traditionally lit & in millions of homes, including mine. @Akshita_N @Vasudha156 @PadmajaJoshi
— Karti P Chidambaram (@KartiPC) November 28, 2026
இப்போது திடீரெனத் தங்களை முருகப்பெருமானின் தீவிர பக்தர்களாகக் காட்டிக்கொள்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். முருகப்பெருமானுக்காகக் கொண்டாடப்படும் கார்த்திகை தீபம், தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட அனைத்துப் பண்டிகைகளும் எந்தவிதத் தடையுமோ அல்லது தலையீடோ இன்றி இங்கு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
குறிப்பாக, கார்த்திகை தீபத் திருநாளன்று பாரம்பரியமாக தீபம் ஏற்றப்படும் அனைத்துக் கோயில்களிலும், என் வீடு உட்பட லட்சக்கணக்கான வீடுகளிலும் வழக்கம் போல தீபங்கள் ஏற்றப்பட்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.













