செய்திகள் :

தொகுதி மறுவரையறை : திமுக ஓகே; இன்னும 7 உறுப்பினர்கள் தேவை... நாடாளுமன்ற எண்களும் பாஜக கணக்கும்!

post image

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கொண்டு வர இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஏற்கனவே இம்மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை உடைத்து கணிசமான எம்.பி.க்களை தங்களது கூட்டணிக்குள் பா.ஜ.க கொண்டு வந்துவிட்டது.

கடந்த ஏப்ரலில் தோல்வியடைந்த சட்டத்திருத்த மசோதாவில் சில மாற்றங்களைச் செய்து, அரசியலமைப்பு சட்டம்(132வது திருத்தம்) மசோதா 2026 மற்றும் அதனுடன் இணைந்த தொகுதி மறுவரையறை(இரண்டாவது) மசோதா 2026 ஆகியவற்றிற்கு ஏற்கனவே மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து இருக்கிறது.

மாநில வாரியான பிரதிநிதித்துவம் குறித்த எதிர்க்கட்சிகளின் கவலைகளைப் போக்கும் வகையில், மசோதாவில் மத்திய அமைச்சரவை சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி ஆரம்பத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் திருத்தப்பட்ட மசோதாவில் அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீராக 50 சதவீத இடங்களை அதிகரிக்க திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மக்களவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கையை 550-லிருந்து 850 ஆகவும் (மாநிலங்களிலிருந்து 815 உறுப்பினர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 35 உறுப்பினர்கள்), மாநிலச் சட்டமன்றங்களின் அதிகபட்ச வரம்பை 500-லிருந்து 650 ஆக உயர்த்தவும் இந்த மசோதா வகை செய்கிறது.

மேலும் பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டாலும், மாநிலங்களுக்கு இடையிலான தற்போதைய இடங்களின் விகிதாச்சாரம் 2051ம் ஆண்டு வரை மாற்றப்படாமல் அப்படியே நீடிக்கும்.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 368-ன் கீழ் இந்த மசோதாவை நிறைவேற்ற அவைக்கு வந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பெரும்பான்மை தேவை. அதன்படி பார்த்தால் 540 பேரில் 360 பேர் வாக்களிக்க வேண்டும்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இம்மசோதாவிற்கு 293 பேர் வாக்களித்த நிலையில் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம், 320 எம்.பி.க்களாக உயர்ந்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 20 அதிருப்தி எம்.பி.க்களும், சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியின் 9 எம்.பி.க்களில் 6 பேரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததன் மூலம் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு கொடுப்பதாக சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துவிட்டது. இந்த கட்சிக்கு 8 எம்.பி.க்கள் இருக்கின்றனர்.

இது தவிர ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சியின் 4 எம்.பி.க்களும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க வாய்ப்பு இருக்கிறது. இது தவிர காங்கிரஸ் கட்சியுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் திமுகவிற்கு 22 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்கள் 22 பேரும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளார்கள். இன்றைய திமுக கூட்டத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று கட்சிகளும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தாலும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 354 ஆக உயரும். ஆனால் 360 இடங்களுக்கு இன்னும் ஆறு குறைவாக இருக்கிறது.

வாக்குகளின் எண்ணிக்கை இரு தரப்பிலும் சமமாக இருந்தால் சபாநாயகர் வாக்களிக்க முடியும். எனவே மசோதா நிறைவேற ஏழு பேரின் ஆதரவு தேவையாக இருக்கிறது. இந்த 7 உறுப்பினர்களை எங்கிருந்து பா.ஜ.க பெறப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராஜ்ய சபையில் 244 உறுப்பினர்கள் இப்போது இருக்கின்றனர். அவர்களில் 163 பேரின் ஆதரவு தேவை. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 154 பேர் மட்டுமே இருக்கின்றனர். பிஜு ஜனதா தளம்(5), ஒய்.எஸ்.ஆர்.சி.பி(4) ஆகிய கட்சிகள் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தாலே நிறைவேறிவிடும். இது தவிர திமுகவிற்கு 8 உறுப்பினர்களும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒரு உறுப்பினரும் இருக்கிறார். திமுக வாக்களிக்கவில்லை என்றால், தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை 158 ஆக குறையும். அது மசோதா நிறைவேற மேலும் வசதியாக மாறிவிடும்.

சிக்கல்களை கடந்து இந்த மசோதா நிறைவேறுமா என்பது திங்கள்கிழமை தெரிந்துவிடும்!

திருப்பரங்குன்றம்: ``இதை இவ்வளவுதூரம் கொண்டுவந்திருக்க தேவையில்லை.!" - சீமான்

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகவும், எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது தொடர்பாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``எம்.எல்.ஏ கைது நடவடிக்கைய... மேலும் பார்க்க

Delimitation: `` யாருக்கு அதிக அதிகாரம்? என்பதுதான் அடிப்படையான கேள்வி" - எம்.பி ஜோதிமணி

தொகுதிமறுவரையறை இந்தியாவின் அரசியல் மற்றும் கூட்டாட்சிக் கட்டமைப்பின் அதிகாரச் சமநிலையையே மாற்றியமைக்க முயற்சிக்கும் ஒரு அடிப்படையான நடவடிக்கை என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்திருக்கிறார். இது தொட... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "உலகம் முழுவதும் பிரபலமடைந்துவிட்டது தவெக அரசு" – தமிழிசை சௌந்தரராஜன்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை எதிர்த்துத் தடுக்க முயன்றதால், இன்று தீபம் ஏற்றுவதை உலகமே பார்க்கப்போகிறது என்று தவெக அரசை விமர்சித்து பேசியிருக்கிறார் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜ... மேலும் பார்க்க

'உணர்ச்சிவசப்படாமல் ஒரு முடிவு!' - Delimitation ஆதரவு குறித்து ஸ்டாலின் என்ன பேசினார்?

மத்திய பாஜக அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக அறிவித்திருக்கிறது. இதுசம்பந்தமாக நடந்த திமுக எம்.பிக்களின் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், உணர்ச்சிவசப்படாம... மேலும் பார்க்க

போதை மாத்திரை வழக்கில் கைது; அமைச்சர் அருண்ராஜை சந்தித்த நபர் - தஞ்சாவூர் தவெக சர்ச்சை!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ஷோபன் ஹரிஷ்(21). இவரது நண்பர் முகமது லுக்மான்(31). கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி காரில் மறைத்து வைத்து 56 பெட்டிகளில் 5,600 போதை மாத்திரைகளை கடத்திய ... மேலும் பார்க்க

`திடீர் முருக பக்தர்களாகக்காட்டிக் கொள்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.!" - கார்த்தி சிதம்பரம்

கார்த்திகை திருநாளை முன்னிட்டு கடந்த 24ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் ஒருமுறை மட்டும் வழக்கமாக தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியது.ஆனால், அந்த உத்தரவின்படி... மேலும் பார்க்க