செய்திகள் :

திருப்பரங்குன்றம்: ``இதை இவ்வளவுதூரம் கொண்டுவந்திருக்க தேவையில்லை.!" - சீமான்

post image

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகவும், எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது தொடர்பாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, ``எம்.எல்.ஏ கைது நடவடிக்கையை அரசு முன்கூட்டியே எடுத்திருக்க வேண்டும். அனைவரும் தொடர்ந்து குரல் கொடுத்து, கடுமையான அழுத்தம் கொடுத்த பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இத்தகைய நிலை ஏற்படுகிறது என்றால், சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. மேலும், மற்றொரு அமைச்சர் ஐ.பி.எஸ் அதிகாரியை இரவு நேரத்தில் வீட்டிற்கு வருமாறு அழைப்பதை எவ்வாறு புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டுத்தான் பொறுப்பேற்றார்கள்.

அருள் விக்னேஷ்

ஆனால், பச்சிளம் குழந்தைகள் காணாமல் போவதும், போதையில் இருக்கும் இளைஞர்கள் காவல்துறையினரையே வெட்டுவதும் போன்ற காட்சிகளை நாம் காணொளிகளில் பார்க்க நேரிடுகிறது. காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில், சாதாரணப் பெண் பிள்ளைகளுக்கும் பொதுமக்களுக்கும் என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? இது மிகவும் கொடுமையான நிலையாகும். இதைப் பற்றிச் சொல்வதற்கு வேறு வார்த்தைகள் இல்லை.

மத நல்லிணக்கம் மற்றும் வழிபாட்டு உரிமை சார்ந்த விவகாரங்களில் அரசு மிகவும் சாதாரணமாகவும், முதிர்ச்சியுடனும் கையாண்டிருக்க வேண்டும். தடியடி நடத்தும் அளவிற்கு இதைக் கொண்டு சென்றிருக்கத் தேவையில்லை. உன் மதம் சிறந்தது வழிபடு, என் மதமும் சிறந்தது வழிவிடு என்பதுதான் இங்கு அடிப்படைக் கோட்பாடாக இருக்க வேண்டும்.

சிக்கந்தர் தர்காவில் அவர்கள் வழிபடுவதற்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாது. அதேபோல், முருகனுக்கு விளக்கேற்றுவதற்கு அரசு உரிய பாதுகாப்பு அளித்து, இரு தரப்பினரும் எவ்விதப் பிரச்சனையுமின்றி வழிபட அனுமதித்திருந்தால் இந்த விவகாரம் அப்போதே முடிவுக்கு வந்திருக்கும்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
சீமான்

இவ்வளவு தூரம் இந்தப் பிரச்சனையை இழுத்துச் சென்றிருக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற சர்ச்சைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. கடந்த ஆட்சியிலேயே இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு கண்டிருக்க வேண்டும், ஆனால் அவர்கள் அதைத் தவறவிட்டுவிட்டார்கள். இரு சமயப் பெரியவர்களையும் அழைத்துப் பேசி, "தர்காவில் கந்தூரி விழா நடத்துபவர்கள் நடத்திக்கொள்ளுங்கள், விளக்கேற்றி வழிபடுபவர்கள் வழிபட்டுக்கொள்ளுங்கள்" என்று அரசு சுமுகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால், யாருக்கும் எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது." என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Delimitation: "உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.!" - ஆதரவு குறித்து ஸ்டாலின்

நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது. திமுகவின் இந்த ஆதரவிற்கு விசிக... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: திமுக எம்பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் என்னென்ன?

நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது. இதற்கான எம்.பி-க்கள் ஆலோசனைக் ... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை : திமுக ஓகே; இன்னும 7 உறுப்பினர்கள் தேவை... நாடாளுமன்ற எண்களும் பாஜக கணக்கும்!

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கொண்டு வர இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஏற்கனவே இம்மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியைத் தழுவிய... மேலும் பார்க்க

Delimitation: `` யாருக்கு அதிக அதிகாரம்? என்பதுதான் அடிப்படையான கேள்வி" - எம்.பி ஜோதிமணி

தொகுதிமறுவரையறை இந்தியாவின் அரசியல் மற்றும் கூட்டாட்சிக் கட்டமைப்பின் அதிகாரச் சமநிலையையே மாற்றியமைக்க முயற்சிக்கும் ஒரு அடிப்படையான நடவடிக்கை என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்திருக்கிறார். இது தொட... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "உலகம் முழுவதும் பிரபலமடைந்துவிட்டது தவெக அரசு" – தமிழிசை சௌந்தரராஜன்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை எதிர்த்துத் தடுக்க முயன்றதால், இன்று தீபம் ஏற்றுவதை உலகமே பார்க்கப்போகிறது என்று தவெக அரசை விமர்சித்து பேசியிருக்கிறார் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜ... மேலும் பார்க்க

'உணர்ச்சிவசப்படாமல் ஒரு முடிவு!' - Delimitation ஆதரவு குறித்து ஸ்டாலின் என்ன பேசினார்?

மத்திய பாஜக அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக அறிவித்திருக்கிறது. இதுசம்பந்தமாக நடந்த திமுக எம்.பிக்களின் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், உணர்ச்சிவசப்படாம... மேலும் பார்க்க