செய்திகள் :

குலசேகரன்பட்டினம்: காணிக்கை எண்ணும் பணியில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவதா? - பக்தர்கள் புகார்

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்று,  குலசேகரன்பட்டினம்  அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலகப் புகழ்பெற்றதாகும். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த அக்டோபர் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குலசேகரன்பட்டினம்

 விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 25-ம் தேதி நிறைவடைந்தது. 26-ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் தசராத் திருவிழா நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து  தசரா திருவிழா நாட்களில் பக்தர்கள் கோயிலில்  உள்ள உண்டியல்களில்  காணிக்கை எண்ணும் பணிகள் நடைபெற்று வந்தன.  கடந்த  20 நாட்களுக்கு முன்பு வரை நடைபெற்ற இப்பணிகள், திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த ஆண்டில் நடைபெற்ற கந்தசஷ்டி விழாவையொட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

கடந்த 15-ம் தேதி கந்தசஷ்டி விழா நிறைவடைந்த நிலையில், நேற்று மீண்டும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் தொடங்கின. இதில் கல்லூரி மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் பங்கேற்றனர். அப்போது, உள்ளூரைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.  பள்ளி மாணவர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியானது.

காணிக்கை எண்ணும் பணியில் மாணவர்கள்

”வழக்கமாக கோயில்களில் உண்டியல் எண்ணும் பணிகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த உழவாரப்பணி குழுவினர், மகளிர் அமைப்பினர், மகளிர் குழுவினர், தன்னார்வலர்கள், ஓய்வுபெற்றவர்கள் போன்றோர்களையே ஈடுபடுத்துவது வழக்கம். இப்பணிக்கு வருபவர்கள் சுய விருப்பத்தின் பேரிலும் சேவை நோக்கத்திலும்தான் வருகிறார்கள் என்றாலும்கூட, இன்னும் ஒரு வாரத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத்  தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், மாணவர்களை கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபடுத்தியது  தவறு.

கல்லூரி மாணவர்களுக்கும் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடந்து வரும் நிலையில் அவர்களையும் காணிக்கை எண்ணும் பணிக்கு அழைத்ததும் தவறுதான்  என, பொதுமக்களும் பக்தர்களும் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக  திருக்கோயில் செயல் அலுவலர் வள்ளிநாயகத்திடம் விளக்கம் கேட்டபோது, ”தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று  பெய்த கனமழை காரணமாக திருச்செந்தூர் வட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.  விடுமுறை என்பதால், காணிக்கை எண்ணும் பணிக்கு தேவைப்பட்டால் மாணவர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என, குலசேகரன்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டார்களாம்.

அன்னதானத்தில் உணவருந்திய மாணவர்கள்

அதன் அடிப்படையிலேயே  கோயிலின் பிற ஊழியர்கள் மாணவர்களை உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். இதுகுறித்து பக்தர்களின் புகார் எனக்கு  தெரிய வந்ததும் மாணவர்களை  உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் இருந்து விடுவித்ததுடன், மதியம் அன்னதானத்தில் மாணவர்களை சாப்பிட வைத்து வீட்டுக்கு அனுப்பி விட்டோம். இனி வரும் காலங்களில் உண்டியல் எண்ணும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என திருக்கோயில் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.

ஏற்காடு: ஸ்டிக்கர் பிரிக்காத புத்தாடை, புதருக்குள் சிறுமியின் சடலம், விலகாத மர்மம் - என்ன நடக்கிறது?

சேலம் மாவட்டம் ஏற்காடு- குப்பனூர் மலைப்பாதை அமைந்துள்ள வழுக்குப்பாறை பகுதியில் கடந்த வியாழக்கிழமை சிறுமி ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. நிகழ்விடத்திற்குச் சென்று ஆ... மேலும் பார்க்க

இன்ஸ்டாவில் பழகிய சிறுவன் மூலம் கர்ப்பம்; நர்சிங் மாணவி மீது போக்சோ வழக்கு பதிவு!

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் 4-ம் வகுப்பு வரை படித்துவிட்டு பெயின்ட்டராக வேலை பார்த்து வருகிறான். சிறுவன் கடந்த ஆண்டு நாகர்க... மேலும் பார்க்க

சென்னை: பெண்கள் பாத்ரூமில் கேமரா - மேனேஜர் சிக்கியது எப்படி?!

சென்னை, பொழிச்சலூரைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர், வானகரம் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 25.11.2026-ம் தேதி அந்தப் பெண்ணும் அவருடன் வேலைப்பார்க்கும் இன்னொரும் பெண்ணும் பாத்ர... மேலும் பார்க்க

சிறுமியை பாட்டி வீட்டில் விடுவதாக பைக்கில் அழைத்துச் சென்று பாலியல் வனகொடுமை; போக்சோவில் இருவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தற்போது திங்கள்நகர் அருகே வாடகை வீட்டில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் பிளஸ் 2 முடித்துவிட்டு கடந்த 7 மாதங்களாக கம்ப்யூட்டர் பயிற... மேலும் பார்க்க

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவிப்பு!

கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த மே மாதம் 21 ஆம் தேதி தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். இதையடுத்து பெற்றோர் அளித்... மேலும் பார்க்க

துபாயிலிருந்து ஊர் திரும்பிய இளைஞர்; வீட்டு வாசலிலேயே வெட்டிக் கொலை... குமரியில் அதிர்ச்சி சம்பவம்!

கன்னியாகுமரி மாவட்டம், ​இரணியல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திங்கள்சந்தை அருகே உள்ள காட்டுவிளை சிறிய ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்தவர் உசேன். இவரது மகன் சமீம் (27). சமீமிற்கும், அதே காட்டுவிளை பகுதியைச் ... மேலும் பார்க்க