செய்திகள் :

"என் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள்" - கேட்கிறார் அமைச்சர் விஜய் பாலாஜி

post image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஆகியோர் தலைமையில் அரசு திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய் பாலாஜி, " பொங்கல் விழாவில் வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஈரோடு மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவரை என்னுடைய வீட்டிற்கு ஆவணங்களை எடுத்துக் கொண்டு வா என இரவில் நான் அழைத்ததாக என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் தரச் சொல்லுங்கள்.

அமைச்சர் விஜய் பாலாஜி

மக்களுக்கு நல்லது செய்தால் இது போன்று விமர்சனங்கள் நிறைய வரும். அதனை ஏற்கும் மனப்பக்குவம் எனக்கு நிறைய உள்ளது. மக்கள் எங்களை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்கள். நீங்களும் ஏற்றுக் கொள்ளுங்கள். கடந்த 25 ஆண்டுகளாக இதுபோன்ற விமர்சனங்களை பார்த்துவருகிறோம். இதெல்லாம் பெரிய விஷயம் அல்ல. முகம் தெரியாதவர்களால் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பப்படும் இது போன்ற வதந்தி தகவல்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது" என்றார்.

தொகுதி மறுவரையறை:``உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விட திமுக-வின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது" - திருமாவளவன்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் அமைதிப் பேரணி நடத்தியது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்... மேலும் பார்க்க

Delimitation: "உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.!" - ஆதரவு குறித்து ஸ்டாலின்

நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது. திமுகவின் இந்த ஆதரவிற்கு விசிக... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: திமுக எம்பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் என்னென்ன?

நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது. இதற்கான எம்.பி-க்கள் ஆலோசனைக் ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: ``இதை இவ்வளவுதூரம் கொண்டுவந்திருக்க தேவையில்லை.!" - சீமான்

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகவும், எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது தொடர்பாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``எம்.எல்.ஏ கைது நடவடிக்கைய... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை : திமுக ஓகே; இன்னும 7 உறுப்பினர்கள் தேவை... நாடாளுமன்ற எண்களும் பாஜக கணக்கும்!

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கொண்டு வர இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஏற்கனவே இம்மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியைத் தழுவிய... மேலும் பார்க்க

Delimitation: `` யாருக்கு அதிக அதிகாரம்? என்பதுதான் அடிப்படையான கேள்வி" - எம்.பி ஜோதிமணி

தொகுதிமறுவரையறை இந்தியாவின் அரசியல் மற்றும் கூட்டாட்சிக் கட்டமைப்பின் அதிகாரச் சமநிலையையே மாற்றியமைக்க முயற்சிக்கும் ஒரு அடிப்படையான நடவடிக்கை என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்திருக்கிறார். இது தொட... மேலும் பார்க்க