செய்திகள் :

தொழில்நுட்பமும் இயற்கையும் இணையும் கோவை வீடு!

post image

கோயம்புத்தூர் பேரூருக்கு அருகிலுள்ள பச்சாபாளையத்தில், 7 சென்ட் நிலத்தில் நான்கு படுக்கையறைகள், ஹோம் தியேட்டர், நீச்சல் குளம், மாடித் தோட்டம் ஆகியவற்றுடன் இந்த வீடு அமைந்துள்ளது. ‘Space Language Architects’ நிறுவனத்தின் வடிவமைப்பாளர் தினேஷ் பெருமாள் இதை வடிவமைத்தார்.

வீட்டில் வசிப்போரின் விருப்பங்களையும் வாழ்க்கைமுறையையும் புரிந்துகொண்டு, ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்துவமான கான்செப்டை உருவாக்குவதே அவரது அணுகுமுறை. தண்ணீர், மின்சாரம் போன்ற இயற்கை வளங்கள் தேவைக்கு அதிகமாகச் செலவாகக் கூடாது என்பது உரிமையாளரின் முக்கிய நோக்கம்.

நுழைவாயிலில் கோட்டா, ஜெய்சால்மர் கற்கள், பசுமைச் செடிகள், சிறிய நீரூற்று, பாரம்பர்ய மர வேலைப்பாடுடன் கூடிய கதவு ஆகியவை வரவேற்கின்றன. கண்ணாடிச் சுவர்களுடன் கூடிய ஹை சீலிங் ஹால் வெளிச்சத்தையும் காற்றோட்டத்தையும் தருகிறது. படிக்கட்டின் கீழ்ப்பகுதி திண்ணையாக மாற்றப்பட்டுள்ளது.

இயற்கையைக் காக்கும் தொழில்நுட்பம்

பிள்ளைகளின் விருப்பத்துக்கேற்ப அவர்களின் அறைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மகளின் அறையருகே படிக்கவும் தியானம் செய்யவும் சிறிய தோட்டம் உள்ளது. இரண்டாம் தளத்தின் பெரிய அறையை ஹோம் தியேட்டராகவோ, மீட்டிங் ஹாலாகவோ, டான்ஸ் ஹாலாகவோ பயன்படுத்தலாம். மாடியிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையை ரசிக்கலாம்.

வீட்டின் மின்சாரம், தண்ணீர் பயன்பாட்டைக் கண்காணிக்கும் ஆட்டோமேஷன் வசதி உள்ளது. சுமார் 13 கிலோவாட் உற்பத்தி செய்யும் சோலார் பேனலும், மழைநீர் சேகரிப்பு, கழிவுநீர் மறுபயன்பாட்டு அமைப்புகளும் உள்ளன. எதிர்காலத்திலும் பொருந்தும் வகையில் இந்த வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்னும் பல விஷயங்கள் இந்த வீட்டில் உள்ளது. முழுமையான கட்டுரையை படிக்க... வீடு ஒரு கனவு 4 - தொழில்நுட்பமும் இயற்கையும் இணையும் வீடு!

`முகத்தை பொலிவாக்கும்'- ஆன்லைனில் வாங்கிய அழகு கிரீமால் மாணவியின் சிறுநீரகம் பாதிப்பு.. நடந்ததென்ன?

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், அரீக்கோடு பகுதியைச் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி ஒருவர், இன்ஸ்டாகிராம் விளம்பரத்தைப் பார்த்து 'ஃபேர்னஸ் கிரீமை' ஒன்றை வாங்கியுள்ளார். அந்த கிரீமை தொடர்ந்து பயன்படுத்... மேலும் பார்க்க

`Split Duple House’: கோவையில் பழைமையும் புதுமையும் கலந்த கனவு இல்லம்!

வீடு என்பது பெரும்பாலானோருக்கு தலைமுறைக் கனவு. வாய்ப்புகள் கூடி வந்து, ஆசை ஆசையாகக் கட்டியெழுப்பி, பல ஆண்டுகள் வாழ்ந்த ஒரு வீட்டை மாற்றியமைக்கவேண்டிய சூழல் வரும்போது, அதற்கு மனம் அவ்வளவு எளிதாக ஒப்புக... மேலும் பார்க்க

ஆர்க்கிடெக்ட் அருண் பிரசாத்-ன் ஒளி ஓவியமான கோவை வீடு! | Photo Album

கனவு வீடுகனவு வீடுகனவு வீடுகனவு வீடுகனவு வீடுகனவு வீடுகனவு வீடுகனவு வீடுகனவு வீடுகனவு வீடுகனவு வீடுகனவு வீடுகனவு வீடுகனவு வீடுகனவு வீடுகனவு வீடுகனவு வீடுகனவு வீடுகனவு வீடுகனவு வீடுகனவு வீடு மேலும் பார்க்க

வீட்டுக்குள் சினிமா... மொட்டைமாடியில் Jacuzzi - மாதம்பட்டியில் வீக் எண்டுக்கான ஒரு கனவு வீடு.!

நகர வாழ்க்கையின் இரைச்சலிலிருந்து விடுபட்டு, வார இறுதியில் குடும்பத்துடன் இயற்கையின் மடியில் நேரம் செலவிட வேண்டும் என்ற ஆசைக்கு, கோவை மாவட்டம் மாதம்பட்டியில் வடிவம் கொடுத்திருக்கிறார் ஆர்க்கிடெக்ட் சி... மேலும் பார்க்க

இந்த வீட்டில் காஸ்ட்லியான விஷயம் எது தெரியுமா? `ஒளிதான்' - ஒளி ஓவியமான கோவை வீடு!

கோவை நவ இந்தியாவில் 30 சென்ட் நிலத்தில், ஆர்க்கிடெக்ட் அருண் பிரசாத் வடிவமைத்துள்ள வடக்குப் பார்த்த வீடு, வெளிச்சத்தைக் கொண்டாடும் அமைப்பால் தனித்து நிற்கிறது. வீட்டின் உரிமையாளர் கொடுத்த முழுச் சுதந்... மேலும் பார்க்க

இரட்டைச் சுமையிலிருந்து எப்போது விடுதலை பெண்களுக்கு..?

``காலையில் குளித்து, சமைத்து, பாத்திரங்களைக் கழுவி, பொது வெளியில் தோன்றுவதற்கு மேக்கப் போட்டுக்கொள்ள எனக்கு 3 - 4 மணி நேரம் ஆகிறது. இதற்கு முன் இருந்த ஆண் பிரதமர்களுக்கு இந்த நேர விரயம் இல்லை...''- இவ... மேலும் பார்க்க