செய்திகள் :

திருப்பரங்குன்றம்: மலை உச்சிக் கல் தூணில் ஏற்றப்பட்ட தீபம்; செயல்படுத்தப்பட்ட உச்ச நீதிமன்ற உத்தரவு!

post image

கார்த்திகை தீபத் திருநாளில் திருப்​பரங்​குன்​றம் மலை தூணில் கார்த்​திகை தீபம் ஏற்றவேண்டும் என உச்ச நீதி​மன்​றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அறங்காவல் குழுவினரின் ஒத்துழைப்பு இல்லை என்றக் காரணத்தால், வழக்கமாக தீபமேற்றும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், வி. பார்த்திபன் ஆகியோரது நேரடி மேற்பார்வையில் இன்று தீபமேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

மலை உச்சி தூண்
மலை உச்சி தூண்

அதனடிப்படையில், இன்று மாலை 5.00 மணியளவில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட பரபரப்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்காலிக மேடை அமைத்து, களிமண் பயன்படுத்தி அதன் மீது தீபமேற்றும் சிறியளவிளான கொப்பரை அமைக்கப்பட்டது. மலை மீது 50 பக்தர்களை மட்டுமே சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அனுமதித்த நிலையில், பா.ஜ.க-வினர் திரளாக கூடியிருக்கும் நிலையில், மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

திருப்பரங்குன்றம் தூணில் வைக்கபட்ட கொப்பரை; 5 மணிக்கு ஏற்றபட போகும் தீபம்... வெளியேறிய காவல்துறை!

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் தீபமேற்ற வேண்டும், மலை முழுவதும் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என நேற்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் இன்... மேலும் பார்க்க

`திமுக ஆதரவு; பாஜகவின் நிரந்தரப் பெரும்பான்மைவாத அரசுக்கு உதவியதாகவே பொருள்' - விளக்கும் ரவிக்குமார்

விழுப்புரம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளராகவும் உள்ள ரவிக்குமார் எம்.பி, தொகுதி மறுவரையறை குறித்து விளக்கமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார... மேலும் பார்க்க

Delimitation: ``திமுகவின் இந்த இரட்டை துரோகத்தை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது" - அமைச்சர் வன்னி அரசு

மத்திய அரசு கொண்டுவரும் தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது. இதற்கு திமுக-வின் முன்னாள் கூட்டணிக் கட்சியான விசிக கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக விசிக-வின் தலைவர் தி... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: `` தேன் கலந்த விஷ உருண்டை; பாஜக பொறியில் திமுக சிக்கிவிடக் கூடாது" - கி.வீரமணி

நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது. திமுகவின் இந்த ஆதரவிற்கு திராவ... மேலும் பார்க்க