செய்திகள் :

Delimitation: 'திமுகவை அம்பலப்படுத்துங்க' - உத்தரவிட்ட முதல்வர்; களத்தில் இறங்கும் தவெக அமைச்சர்கள்?

post image

மத்திய பாஜக அரசின் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், தவெக சார்பில் 'சாதனை வெற்றி விளக்கக் கூட்டம்' என்ற பெயரில் ஒரு கூட்டம் அவசர அவசரமாகத் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

உண்மையில் முதல்வர் தரப்பின் உத்தரவின் பேரில் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவை அம்பலப்படுத்தவே இந்தக் கூட்டம் என்கின்றனர்.

தவெக கூட்டம்
தவெக கூட்டம்

பாஜக அரசின் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக தரப்பில் நேற்று அறிவிக்கப்பட்டது. நேற்று இரவே திமுக சார்பில் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழியின் தலைமையில் ஒரு குழுவினர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்திருந்தனர்.

இந்நிலையில்தான் தவெக சார்பில் ஆட்சியின் சாதனை விளக்கக் கூட்டம் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எழும்பூரில் இன்று மாலை 3:30 மணிக்கு நடக்கும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், ராஜ்மோகன், அருண்ராஜ், வெங்கட்ரமணன், மரிய வில்சன், குமார் போன்றோர் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

'இன்று காலை 8 மணிக்குத்தான் இப்படியொரு கூட்டம் நடத்தவிருப்பதாக எங்களுக்கே தகவல் கூறினர்' என்கின்றனர் தவெகவின் சென்னை எம்.எல்.ஏக்களும் மாவட்டச் செயலாளர்களும்.

எதற்காக இவ்வளவு அவசரமாக ஒரு கூட்டமென பனையூர் வட்டாரத்தில் பேச்சுக் கொடுத்தோம், ''முதல்வர் விஜய் தேர்தலுக்கு முன்பாகவே திமுகவும் பாஜகவும் ஒன்றுதான் என்றே பேசி வந்தார். குறிப்பாக YMCA மைதானத்தில் நடந்த கடைசி பரப்புரைக் கூட்டத்தில் தேர்தல் முடிந்தவுடன் திமுக அமித்ஷாவிடம் சரணடையும் என்றும் பேசியிருந்தார்.

CM Vijay
CM Vijay

திமுக, பாஜகவை நெருங்குகிறது என்பதை அறிந்துதான், முதல்வர் தொகுதி மறுவரையறையை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு செக் வைக்க நினைத்தார். திமுக அப்போது தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து நழுவிவிட்டது.

அப்போது பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ், 'எல்லா மாநிலத்துக்கும் 50% இடம் உயர்வு என்றாலும் திமுக அந்த மசோதாவை ஆதரிக்கக்கூடாது' என்றார். திமுகவின் சீனியர்கள் அதை ஆமோதித்தனர். இப்போது அப்படியே யூடர்ன் அடித்து மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறியதோடு அமித்ஷாவையும் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

டெல்லியில் நடந்த அந்தச் சந்திப்புக்குப் பிறகுதான், 'திமுகவை அம்பலப்படுத்துங்கள். இது நாம் ஸ்கோர் செய்ய வேண்டிய நேரம்' என முதல்வர் தரப்பிலிருந்து உத்தரவு வந்திருக்கிறது. அதன்பிறகுதான் அமைச்சர்கள் தலைமையில் அவசர அவசரமாக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

திமுக, தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் துரோகம் இழைத்துவிட்டதாகவும், பாஜகவிடம் அடிபணிந்துவிட்டதாகவும் அமைச்சர்கள் காட்டமான விமர்சனங்களை முன்வைக்க வாய்ப்பிருக்கிறது'' என்றனர்.

ஆட்டம் சூடுபிடிக்குது!

Delimitation: 'ஸ்டாலினை சந்திக்க சென்னைக்கே வரும் சோனியா காந்தி?' - முழுவிவரம் என்ன?

பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக அறிவித்திருக்கும் நிலையில், ஸ்டாலினின் முடிவை மாற்ற சோனியா காந்தி உட்பட காங்கிரஸின் முக்கிய தலைவர்களே சென்னைக்கு நேரில் வரவிருப்பதாக த... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: ரசாயன நச்சுத்தன்மை இல்லாத 100 வகை காய், கனி, கீரை... | Photo Album

"ஈஸினு நினைச்சு தொடங்கினேன்; ஆனா, கிரிக்கெட்டை விட கஷ்டம்.!" - விவசாயம் குறித்து தோனி மேலும் பார்க்க

புகையிலை வணிகத்தில் ரூ.88 கோடி ஜிஎஸ்டி மோசடி; ரூ.150 கோடி போலி சிகரெட்டுகள் பறிமுதல்

புகையிலை வணிகத்தில் ரூ.88 கோடிக்கு மேல் ஜிஎஸ்டி மோசடி என்றும், இதையொட்டி ரூ.150 கோடி மதிப்புள்ள போலி சிகரெட்டுகள் முடக்கம் என்றும் நேற்று (நவம்பர் 28) அறிக்கை வெளியிட்டுள்ளது மத்திய நிதி அமைச்சகம்.அறி... மேலும் பார்க்க

Delimitation: "திமுக கேட்டது மசோதாவில் இடம்பெற்றுவிட்டது" - அமித் ஷாவைச் சந்தித்த கனிமொழி

மத்தியில் பாஜக அரசு நாளை (நவம்பர் 30) கூடும் நாடாளுமன்றச் சிறப்பு அமர்வில் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டுவர உள்ளது.இந்த மசோதாவிற்கு ஆதரவை வழங்கியுள்ளது திமுக.அமித் ஷாவைச் சந்தித்த கனிமொழிதொகுதி மறு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: மலையில் உள்ள தூணில் ஏற்றப்பட்ட தீபம் | Photo Album

மலையில் தீபம் ஒளிர்ந்ததுமலையில் தீபம் ஒளிர்ந்ததுமலையில் தீபம் ஒளிர்ந்ததுமலையில் தீபம் ஒளிர்ந்ததுமலையில் தீபம் ஒளிர்ந்ததுமலையில் தீபம் ஒளிர்ந்ததுமலையில் தீபம் ஒளிர்ந்ததுமலையில் தீபம் ஒளிர்ந்ததுமலையில் ... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை விவகாரம்... திமுக மீதான 'யூ டர்ன்' விமர்சனங்களும் விளக்கமும்!

'மத்திய பா.ஜ.க அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தி.மு.க ஆதரவு' என்ற அறிவிப்பைத் தொடர்ந்து தி.மு.க-வின் நிலைப்பாட்டுக்கு எதிராக நாடெங்கிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருக்கின்றன!தொகுதி மறுவரையறை எ... மேலும் பார்க்க