செய்திகள் :

மும்பை: 60 வயது பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை; ரயில் நிலையக் கழிவறையில் கொடூரம்

post image

மும்பை காட்கோபர் ரயில் நிலையத்திற்கு இரவு 11 மணிக்கு 60 வயது பெண் ஒருவர் தனது 18 வயது மகளுடன் வந்தார். அவர் கடாவ்லி செல்வதற்காக புறநகர் ரயிலுக்காகக் காத்திருந்தார்.

அந்நேரம் கழிவறையின் நடைமேடையில் இருந்த கழிவறைக்கு அப்பெண் சென்றார். இரவு 11 மணிக்கு மேலாகி இருந்ததால் கழிவறையில் ஊழியர் யாரும் இல்லை. இதனால் கழிவறைக்குச் சென்ற பெண்ணுக்குத் தெரியாமல் ரகசியமாகப் பின்தொடர்ந்து வாலிபர் ஒருவரும் அந்தக் கழிவறைக்குள் சென்றார். அவர் கழிவறையை உள்பக்கமாகப் பூட்டிவிட்டு அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.

இதற்கு அப்பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அப்பெண்ணின் முகம் மற்றும் நெஞ்சுப்பகுதியில் கடுமையாகத் தாக்கி காயத்தை ஏற்படுத்திவிட்டு அப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அந்த இடத்தில் இருந்து தப்பித்து ஓடிவிட்டார்.

இது குறித்து அப்பெண் வெளியில் வந்து தனது மகளிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். உடனே இருவரும் இது குறித்து ரயில்வே போலீஸில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் ரயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது இக்குற்றத்தில் ஈடுபட்ட நபர் காட்கோபர் மெட்ரோ ரயில் மூலம் புறப்பட்டு சென்றுள்ளார்.

அவர் அசல்பா மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கியது கண்காணிப்பு கேமராவில் தெரிய வந்தது. உடனே அவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அந்த நபரின் பெயர் தஸ்லிம் நூர் மொகமத் ஷா(27) என்று தெரிய வந்துள்ளது. அந்த நபர் போதையில் இக்காரியத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

இது குறித்து போலீஸார் தஸ்லிமிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்கோபர் ரயில் நிலையத்தில் கழிவறை நடைமேடையின் ஒரு முனையில் இருந்தது. இதனால் அங்கு பயணிகள் அதிகம் செல்ல வாய்ப்பு இல்லாமல் இருந்தது.

காதலி விரித்த வலை; சுற்றிவளைத்த எதிரிகள்; பின்வாசலில் தப்பிய ரவுடி; ஹரியானாவில் சினிமா பாணி சம்பவம்

ஹரியானா மாநிலம் ரோஹ்டக் என்ற இடத்தில் உள்ள மிலன் தாபா என்ற உணவகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 கிரிமினல்கள் உயிரிழந்தனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் சன்னி என்ற ரவுடி உணவகத்தின் பின் வாசல் வழியாகத... மேலும் பார்க்க

கார் இடித்ததை தட்டிக்கேட்ட ஆத்திரம்; குழந்தைகள் கண்முன்னே தந்தையை கொடூரமாக தாக்கிய தவெக நிர்வாகிகள்

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அகஸ்தியர்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக். கூலித் தொழிலாளியான இவருக்கு 5-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும், 4-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். இருவர... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம்: காணிக்கை எண்ணும் பணியில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவதா? - பக்தர்கள் புகார்

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்று, குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில். இங... மேலும் பார்க்க

ஏற்காடு: ஸ்டிக்கர் பிரிக்காத புத்தாடை, புதருக்குள் சிறுமியின் சடலம், விலகாத மர்மம் - என்ன நடக்கிறது?

சேலம் மாவட்டம் ஏற்காடு- குப்பனூர் மலைப்பாதை அமைந்துள்ள வழுக்குப்பாறை பகுதியில் கடந்த வியாழக்கிழமை சிறுமி ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. நிகழ்விடத்திற்குச் சென்று ஆ... மேலும் பார்க்க

இன்ஸ்டாவில் பழகிய சிறுவன் மூலம் கர்ப்பம்; நர்சிங் மாணவி மீது போக்சோ வழக்கு பதிவு!

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் 4-ம் வகுப்பு வரை படித்துவிட்டு பெயின்ட்டராக வேலை பார்த்து வருகிறான். சிறுவன் கடந்த ஆண்டு நாகர்க... மேலும் பார்க்க

சென்னை: பெண்கள் பாத்ரூமில் கேமரா - மேனேஜர் சிக்கியது எப்படி?!

சென்னை, பொழிச்சலூரைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர், வானகரம் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 25.11.2026-ம் தேதி அந்தப் பெண்ணும் அவருடன் வேலைப்பார்க்கும் இன்னொரும் பெண்ணும் பாத்ர... மேலும் பார்க்க