செய்திகள் :

Doctor Vikatan: ஃபுட் டெலிவரி வேலையால் அடிக்கடி யூரினரி இன்ஃபெக்ஷன்...தவிர்க்க வாய்ப்பு உண்டா?

post image

Doctor Vikatan: நான் ஃபுட் டெலிவரி ஊழியராக இருக்கிறேன்.  நாள் முழுவதும் டூ வீலரில் சுற்ற வேண்டும். இதனால் சிறுநீர் கழிக்க இடம் தேடி அலைய முடியாது.  கழிவறை வசதி உள்ள இடங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடிக்கடி எனக்கு சிறுநீர் தொற்று பாதிக்கிறது. பொது கழிவறை உபயோகத்தைத் தவிர்க்க முடிவதில்லை என்பதுதான் காரணம் என்றும் புரிகிறது. இந்நிலையில் நான் தொற்று வராமல் எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நுண் அறுவை சிகிச்சை நிபுணரும், ஆண்ட்ராலஜிஸ்ட்டுமான வில்வபதி எஸ். கார்த்திகேயன்

பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதால் மட்டுமே சிறுநீர்ப்பாதை தொற்று (Urinary Tract Infection) வராது. ஆணாக இருந்தால் அவர்களுக்குச் சிறுநீர்க் குழாய் (Urethra) நீளமாக இருப்பதாலும், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் அழுத்தத்தினாலும் (Flushing Action), கழிப்பறையிலிருந்து கிருமிகள் நேரடியாக மேலேறித் தொற்று ஏற்படுவது மிகக் கடினம்.

கழிப்பறையைப் பயன்படுத்தும்போது ஆண்களின் சிறுநீர்ப் பாதை உறுப்புகள் கழிவறை இருக்கை அல்லது பிற இடங்களில் நேரடியாகப் படுவதில்லை. அதனால் பாக்டீரியாக்கள் அங்கு தங்கி மேலேறும் வாய்ப்பும் ஆண்களுக்கு மிகவும் குறைவு. பெண்களுக்கும்கூட பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதால் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவுதான்.

உங்களைப் போன்ற டெலிவரி ஊழியர்களுக்குத் தொற்று ஏற்பட முதன்மையான காரணங்கள் பல உண்டு. தொடர்ச்சியாக டூ வீலரில் பயணம் செய்து டெலிவரி செய்வதால் உடல் வியர்த்து நீரிழப்பு (Dehydration) ஏற்படுகிறது. இது பாக்டீரியாக்கள் வளர்வதற்கான சூழலை உருவாக்குகிறது.  சர்க்கரை நோய் (Diabetes) போன்ற பாதிப்புகள் சரிவரப் பராமரிக்கப்படாத போது, அதுவும் சிறுநீர்த் தொற்றுக்கான அபாயத்தை அதிகரிக்கிறது.
 தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருப்பதால் சரியான நேரத்திற்கு கழிப்பறை செல்ல முடியாமல் சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைக்க நேரிடுகிறது. போதிய தண்ணீர் குடிக்காமல் சிறுநீரையும் அடக்கும் போது பாக்டீரியாக்கள் வேகமாகப் பெருகுகின்றன.  நீண்டநேரம் இறுக்கமான ஆடைகளை அணிந்து வேலை செய்வதால், வியர்வை மற்றும் ஈரப்பதம் காரணமாக அந்த இடங்களில் பாக்டீரியாக்கள் தங்கி தொற்று ஏற்படலாம்.

சில விஷயங்களில் கவனமாக இருந்தால், சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.  டூவீலரில் செல்பவர்கள் எப்போதும் தங்களுடன் தண்ணீர் பாட்டில் வைத்துக்கொண்டு, தவறாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். இது பாக்டீரியாக்களை வெளியேற்றவும் உடலின் நீர்ச்சத்தைப் பராமரிக்கவும் உதவும். சிறுநீர் கழிக்கும் உணர்வு (Urge) வரும்போதெல்லாம் தகுந்த இடத்தைப் பார்த்து உடனுக்குடன் கழிப்பறையைப் பயன்படுத்துவது நல்லது.  பருத்தியால் ஆன (Cotton) தளர்வான ஆடைகள் மற்றும் உள்ளாடைகளைப் பயன்படுத்துவது சிறந்தது.


சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் சாதாரண எரிச்சலைக் கூட தொற்று (Infection) என்று தவறாகப் புரிந்து கொண்டு, பலர் தானாகவே ஆன்டிடிபயாடிக் (Antibiotics) மருந்துகளைச் சாப்பிடுகிறார்கள். பெரும்பாலும் போதிய தண்ணீர் குடிக்காததே இந்த எரிச்சலுக்குக் காரணமாக இருக்கும் என்பதால், மருத்துவ ஆலோசனையின்றி தவறாக மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

டாக்டர் வில்வபதி எஸ். கார்த்திகேயன்:

சென்னை, அப்போலோ மருத்துவமனையில் நுண் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும்  ஆண்ட்ராலஜிஸ்ட்டாகப் பணிபுரிகிறார். இத்துறையில் 16 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர்.


உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 
 

Doctor Vikatan: எதைச் சாப்பிட்டாலும் எதுக்களித்தல்... நெஞ்சு கரித்தலுக்குத் தீர்வு உண்டா?

Doctor Vikatan:எதைச் சாப்பிட்டாலும் எதுக்களித்து மேல் வருகிறது. நெஞ்சு கரிக்கும் பிரச்னைக்கு என்ன காரணம்... இதைத் தவிர்க்க முடியுமா? சிகிச்சை அவசியமா? எந்த மாதிரி உணவுகளைச் சாப்பிட வேண்டும்?பதில் சொல்... மேலும் பார்க்க

Doctor Vikatan: இள வயதினரையும் பாதிக்கும் கேட்டராக்ட் பிரச்னை... வராமல் தடுக்க வாய்ப்பு உண்டா?

Doctor Vikatan:வயதானவர்களுக்கு வந்துகொண்டிருந்த கேட்டராக்ட் பிரச்னை, இப்போதெல்லாம் இள வயதினருக்கும் வருகிறது. கேட்டராக்ட் பிரச்னை ஏன் வருகிறது... அதை முன்கூட்டியே தவிர்க்க முடியுமா? வந்த பிறகு நிச்சயம... மேலும் பார்க்க

Doctor Vikatan: மெனோபாஸ் காலத்தில் அதிகரிக்கும் எடை... இனிமேல் வாக்கிங் பலன் தராதா?

Doctor Vikatan:என் வயது 52. நான் இத்தனை வருடங்களாக சரியான எடையில்தான் இருந்தேன். தினமும் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்கிறேன். இப்போது மெனோபாஸ் வந்துவிட்டதால், எடை அதிகரித்துக்கொண்டே போகிறது. அதே உணவ... மேலும் பார்க்க

Doctor Vikatan: நள்ளிரவில் சிறுநீர், கலையும் தூக்கம்... விடியும்வரை விழிப்பு... தீர்வு உண்டா?

Doctor Vikatan:என்னுடைய வயது 56. நள்ளிரவில் சிறுநீர் கழிக்கச் செல்வது வழக்கமாகி விட்ட நிலையில் மீண்டும் படுக்கைக்கு வந்து படுத்தால் தூங்க முடிவதில்லை. விடியற்காலை வரை விழித்திருக்கிறேன். இதற்குத் தீர்... மேலும் பார்க்க

Doctor Vikatan: திடீரென குறையும் உடல் எடை... ஆரோக்கியத்தின் அறிகுறியா... நோய் பாதிப்பா?

Doctor Vikatan: என் வயது 34. எனக்கு கடந்த சில மாதங்களாக உடல் எடை குறைந்து கொண்டே வருவதை உணர்கிறேன். எடைக்குறைப்பு என்பது ஒருவகையில் சந்தோஷமாகத் தோன்றினாலும், இன்னொரு பக்கம் இந்தத் திடீர் எடையிழப்பு ஏத... மேலும் பார்க்க

`வாரத்திற்கு ஒருமுறை போதும்!' – நீரிழிவு நோயாளிகளுக்கான புதிய இன்சுலின்!

உலகின் முதல் வாரத்திற்கு ஒருமுறை செலுத்தப்படும் நீண்டகால இன்சுலின் மருந்தான அவிக்லி (Awiqli), சர்க்கரை நோய் சிகிச்சையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நீரிழிவு மருத்துவர்சத்யன் ராகவன... மேலும் பார்க்க