செய்திகள் :

Doctor Vikatan: கிட்னி ஸ்டோன் பிரச்னையா... இந்த உணவுகளை மிஸ் பண்ணாம சாப்பிடுங்க!

post image

Doctor Vikatan: என் வயது 42. எனக்கு கடந்த ஒரு வருடமாக கிட்னி ஸ்டோன் பிரச்னை இருக்கிறது. அவ்வப்போது வலி அதிகரித்தால் மருத்துவரைப் பார்த்து மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறேன். மாத்திரைகள் தவிர்த்து, இந்தப் பிரச்னைக்கு  உணவுகளின் மூலம் தீர்வுகள் இருந்தால் சொல்லவும்.

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி.

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி
அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

சிறுநீரகக் கற்களைக் கரைத்து வெளியேற்றவும், சிறுநீரகத்தைப் பாதுகாக்கவும் சில உணவுகள் நிச்சயம் உதவும். ஆனால், இயற்கை உணவுகளைப் பற்றிப் பேசும்போது சில விஷயங்களில் விழிப்புணர்வு அவசியம்.

ஏற்கெனவே சிறுநீரக நோய் இருப்பவர்கள், டயாலிசிஸ் (Dialysis) செய்து கொண்டிருப்பவர்கள், தொடர் தொற்று காரணமாக சிறுநீரகத்தில் லேசான வீக்கம் அல்லது பைலோநெஃப்ரைடிஸ் (Pyelonephritis) எனப்படும் அலர்ஜி அல்லது வீக்கம் இருப்பவர்கள், கடுமையான காய்ச்சல் மற்றும் இடுப்பு வலி, வயிற்று வலி உள்ளவர்கள், 'இது வெறும் சிறுநீரகக் கல்தான், உணவுப் பழக்கத்திலேயே சரியாகிவிடும்' என்று நினைத்து அலட்சியப்படுத்தக்கூடாது.

அவர்கள் முதலில் மருத்துவரை அணுகி, கற்கள் எந்த இடத்தில் உள்ளன, அவற்றின் அளவு என்ன என்பதைக் கண்டறிந்த பிறகே அடுத்தகட்ட முடிவை எடுக்க வேண்டும். கற்களின் அளவு பெரியதாக இருந்தால், உணவின் மூலம் மட்டுமே சரி செய்ய முடியாது. எளிதாக வெளியேறக்கூடிய சிறிய அளவிலான கற்களுக்கு இயற்கை உணவு முறைகள் நல்ல பலன் தரும்.

இப்போதைய காலகட்டத்தில் தண்ணீரில் உள்ள உப்புச் சத்துகளாலும் கற்கள் உருவாக வாய்ப்புள்ளது. எனவே, சித்த மருத்துவம் கூறுவது போல், எப்போதும் தண்ணீரை நன்கு காய்ச்சிப் பருகுவது சிறந்தது. வாழைத்தண்டை அடிக்கடி பொரியல் அல்லது கூட்டாகச் செய்து சாப்பிடலாம். கற்கள் இருப்பவர்கள் வாரத்தில் 2 அல்லது 3 நாள்களுக்கு ஒருமுறை இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
முருங்கை ஈர்க்கு மற்றும் கறிவேப்பிலை ஈர்க்கு ஆகியவற்றைத் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்துப் பருகலாம். எலுமிச்சை பழச்சாற்றை தண்ணீரில் கலந்து பருகலாம். ஆப்பிள் சாப்பிடலாம் அல்லது ஆப்பிள் சிடர் வினிகரைத் தண்ணீரில் கலந்து அருந்தலாம்.

பூசணிக்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், புடலங்காய் போன்ற நாட்டுக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பூசணிக்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், புடலங்காய் போன்ற நாட்டுக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பூசணிக்காய் ஜூஸ், காய்கறிக் கூட்டு, அவியல் அல்லது சாலட்  போன்றவற்றைச் சாப்பிடலாம். உடல்சூடு தான் கற்கள் உருவாக முக்கியக் காரணம். எனவே, நிறைய தண்ணீர் குடிப்பது. நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது மற்றும் இரவில் சரியான நேரத்திற்குத் தூங்குவது (இரவு 10 மணிக்குத் தூங்கி காலை சீக்கிரம் எழுவது) மிகவும் அவசியம்.

கீரை சமைக்கும்போது தக்காளியைச் சேர்த்து சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். கிருமித் தொற்றைத் தடுக்க உணவில் பூண்டு மற்றும் மஞ்சளை அதிகம் சேர்க்கலாம். சீரகத் தண்ணீர் மற்றும் பனங்கற்கண்டு சேர்ந்த அரிசி உலை நீர் குடிப்பதும் கல் உருவாவதைத் தடுக்கும்.

சித்த மருத்துவர் வரலட்சுமி:

சென்னை, அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனையில் பணிபுரிகிறார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: அல்சரால் அவதிப்படுகிறீர்களா.... உணவுப்பழக்கத்தை இப்படி மாற்றுங்கள்!

Doctor Vikatan: என் அப்பா கடந்த சில மாதங்களாக அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் பாதிப்பால் அவதிப்படுகிறார். அல்சர் பாதித்தவர்களுக்கான உணவுத் திட்டம் எப்படி இருக்க வேண்டும்...அவர்கள் எந்தெந்த உணவுகளைத் த... மேலும் பார்க்க

Doctor Vikatan: தொப்பையைக் கரைக்குமா மேஜிக் உணவுகள்... Fat burning foods என்பவை நிஜமா?

Doctor Vikatan: கொழுப்பைக் குறைக்கும் உணவுகள் என ஏதேனும் உள்ளனவா... குறிப்பாக, தொப்பையைக் கரைக்கும்Fat burning foods என சொல்லப்படுபவை உண்மையிலேயே பலன் தருமா... அவை பற்றி விளக்க முடியுமா?பதில் சொல்கிறா... மேலும் பார்க்க

Doctor Vikatan: மனசு சரியில்லையா.... அப்போ இதையெல்லாம் கட்டாயம் சாப்பிடாதீங்க!

Doctor Vikatan:சாப்பிடும் உணவுகளுக்கும் மனநிலைக்கும் தொடர்பு உண்டா... மூட் லிஃப்ட்டிங் உணவுகள், ஸ்ட்ரெஸ்ஸாக்கும் உணவுகள் என ஏதேனும் உண்டா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த உணவியல் ஆலோசகர் அம்பிகா ச... மேலும் பார்க்க

Doctor Vikatan: 26 வயதுப் பெண்... கரகரப்பான, ஆண் தன்மையுடன் குரல்... மென்மையாக மாற்ற முடியுமா?

Doctor Vikatan:நான் 26வயதுப் பெண். என் குரல் கரகரவென இருக்கிறது. ஆண் குரல் போல உள்ளதாகப் பலரும் கிண்டல் செய்கிறார்கள். குரலை மென்மையாக மாற்ற ஏதேனும் சிகிச்சைகள் உள்ளனவா?பதில் சொல்கிறார், சென்னையைச் சே... மேலும் பார்க்க

Doctor Vikatan: மனிதர்களுக்கும் வரும் Tailbone Pain... உட்கார்ந்து இருப்பவர்களுக்கான அலாரம்!

Doctor Vikatan: என்னுடைய நண்பர் ஒருவர் கடையில் வேலை பார்க்கிறார். பல மணி நேரம் உட்கார்ந்தபடியே வேலை பார்ப்பதால் அவருக்கு உட்காரும் இடத்தில் வலி வந்துள்ளது. மருத்துவரைப் பார்த்தபோது, அது டெயில்போன் வலி... மேலும் பார்க்க

Doctor Vikatan: தீவிரமான TB பாதிப்பு... 35 வருடங்கள் கடந்த நிலையில் கேன்சரை ஏற்படுத்துமா?

Doctor Vikatan:என் வயது 67. எனக்கு தீவிரமான டிபி பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து முற்றிலும் குணமாகி 35 வருடங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் எனக்கு புற்றுநோய் வர வாய்ப்புகள் உண்டா?-Ravidaivanayagom Ravi, விக... மேலும் பார்க்க